கொரோனாவால் நடந்த நல்ல விஷயம்.. ஆயுர்வேதத்திற்கு முக்கியத்துவம்.. செலவு முறையும் மாறியுள்ளது..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தினை குறைப்பதற்காக அரசு லாக்டவுனை நீட்டித்தது. ஆனால் இதற்கிடையில் நுகர்வோரின் பழக்கத்தினையே மாற்றியுள்ளது இந்த கொரோனா.

அவர்களின் செலவினங்களை பெரிதும் மாற்றியுள்ளன. அவர்களின் உடல் நலத்தினை பேணுவதிலும், பாதுகாப்பதிலும், தங்கள் அலமாரிகளை பலப்படுத்துவதிலும், தங்கள் வீடுகளை சுத்தமாக வைத்திருப்பதிலும், நேர்த்தியாகவும் வைத்திருப்பதில் அவர்கள் எவ்வளவு ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளனர் என்பதையும் அவர்களின் செலவு முறைகள் எதிரொலிக்கிறது.

உலகெங்கிலும் உள்ள நுகர்வோர், தங்கள் ஆரோக்கியத்தினை பாதுகாப்பதிலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதிலும் அக்கறை காட்டுகின்றனர். இது சம்பந்த பொருட்களை வாங்குவதிலும் கவனம் செலுத்தி வருகின்றனர். இது பெரும்பாலும் நாட்டின் பண்டைய மருத்துவ முறையான ஆயுர்வேதத்தினை குறிக்கிறது.

ஆயுர்வேதத்திற்கு முக்கியத்துவம்
 

ஆயுர்வேதத்திற்கு முக்கியத்துவம்

குறிப்பாக டாபர் இந்தியா லிமிடெட், தி ஹிமாலயா நிறுவனங்களின் பாரம்பரிய பொருட்களுக்கான தேவை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக தேன், சர்க்கரை, நெய், மூலிகைகள் மற்றும் மசாலாக்களைக் கொண்டு சமைத்த கலவை, நெய், ஆயுர்வேத மூலப்பொருட்களை உள்ளடக்கிய பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக ஆயுர்வேதம் சம்பந்தமான பொருட்களுக்கு தேவை அதிகரித்துள்ளதாக ஒர் அறிக்கை கூறுகின்றது.

விற்பனை அதிகரிப்பு

விற்பனை அதிகரிப்பு

குறிப்பாக டாபரின் Chyawanprash விற்பனையானது ஜூன் மாதத்தில் 283% அதிகரித்துள்ளதாகவும், பிராண்டேடு தேன் 39% அதிகரித்துள்ளதாகவும் Nielsen Holdings Plc தெரிவித்துள்ளது.

இதனையடுத்து இந்தியாவின் மிகப்பெரிய ஆயுர்வேத தயாரிப்பு சப்ளையர்களில் ஒருவரான தபூர் மற்றும் சியவன்ப்ராஷ் விற்பனையானது ஏப்ரல் முதல் ஜூன் வரையில் விற்பனை 700% அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான செலவினங்களின் அதிகரிப்பு அடுத்த சில மாதங்களுக்கும் நீடிக்கும் என்றும் நீல்சன் தெற்காசியாவின் மேற்கு சந்தை தலைவரான சமீர் சுக்லா கூறியுள்ளார்.

சுகாதாரத்திற்கு முக்கியத்துவம்

சுகாதாரத்திற்கு முக்கியத்துவம்

மேலும் அடிப்படையில் நாங்கள் மிகவும் தெளிவான போக்கினை கண்டோம். மக்கள் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் சுகாதார நலன்களுக்கான அதிக செலவு செய்ய விரும்புகிறார்கள்.

பாபா ராம் தேவின் பதஞ்சலி நிறுவனத்தின் நிகர விற்பனையும் ஏப்ரல் முதல் ஜூன் மாதத்தில் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

பாக்கெட் உணவு விற்பனை அதிகரிப்பு
 

பாக்கெட் உணவு விற்பனை அதிகரிப்பு

இதே போல் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகளின் விற்பனையும் மார்ச் மாதத்தில் இருந்து அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. காலை உணவு தானியங்கள், உடனடி நூடுல்ஸ், அரிசி மற்றும் cooking fats ஆகியவை வலுவான வளர்ச்சியினை அனுபவிக்கும்.

சாக்லேட் விற்பனை அதிகரிப்பு

சாக்லேட் விற்பனை அதிகரிப்பு

இதே நெஸ்டில் இந்தியா நிறுவனம் மேக்கி நூடுல்ஸ் விற்பனை அதிகரித்துள்ளதாகவும், இதோடு கிட் காட், மஞ்ச் உள்ளிட்ட சாக்லேட் விற்பனையும் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

பார்லே பொருட்களான பார்லே ஜி பிஸ்கட் விற்பனையானது ஏப்ரல் மாதங்களில் விற்பனை மிக அதிகளவில் பதிவு செய்தது. இதே இந்த நெருக்கடியான காலத்தில் பிரிட்டானியா நிறுவனத்தின் பிஸ்கட் விற்பனையும் அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளது.

ஆன்லைன் பயன்பாடு அதிகரிப்பு

ஆன்லைன் பயன்பாடு அதிகரிப்பு

இதே போல மாணவர்கள் ஆன்லைன் கல்வி பயின்று வருவதால், பைஜூஸ் போன்ற நிறுவனங்களின் வளர்ச்சி மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.

இதே போல் zee5 மற்றும் நெட்பிளிக்ஸ் உள்ளிட்டவற்றின் வளர்ச்சியும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் தினசரி உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கையானது 33% அதிகரித்துள்ளது, இதே கடந்த மே மாதத்தில் இந்த ஆப் களின் டவுன்லோடு விகிதம் 45% அதிகரித்துள்ளது.

நகைக் கடன் அதிகரிப்பு

நகைக் கடன் அதிகரிப்பு

இந்த நகைக்கடன் பிரிவானது அனைத்து பகுதிகளிலும் அதிகரித்துள்ளது. ஏனெனில் நாட்டில் நிலவி வரும் நெருக்கடியான நிலையில், பலர் தங்களது வேலையினை இழந்து தவித்து வருகின்றனர்.

இதன் காரணமாக செலவினங்களுக்காக தங்களது தங்க நகைகளை பிணையமாக வைத்து கடன் வாங்குவதும் அதிகரித்துள்ளது.

வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை அதிகரிப்பு

வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை அதிகரிப்பு

வீட்டில் முடங்கி கிடக்கும் மக்கள் வீட்டுக்கு தேவையான நல்ல பொருட்களை தேடிப்பிடித்து வாங்கி வருகின்றனர். உதாரணத்திற்கு ஜூசர்கள், மிக்சர்கள், மைக்ரோவேவ் மற்றும் டோஸ்டர்கள் உள்ளிட்ட வெள்ளை பொருட்களுக்கான தேடல் நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாக பிளிப்கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதே கிளீனர்கள் மற்றும் சுகாதார உபகரனங்களுக்கான தேவை முந்தைய அளவை விட (கொரோனாவிற்கு முன்பு) நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படியாக ஒவ்வொரு துறையிலும் மக்கள் பார்த்து பார்த்து செலவிட ஆரம்பித்துள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Coronavirus lockdown changed consumers spending pattern

Coronavirus lockdown changed consumers habits, also their spending patterns changed
Story first published: Friday, August 7, 2020, 17:49 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X