கொரோனா ஆடிய ஆட்டம்: உலக நாடுகளில் ஏற்பட்ட பெரும் மாற்றங்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வல்லரசு நாடாகும் மிகப்பெரிய கனவுடன் இந்தியாவும், இந்திய மக்களும் 2020ஐ வரவேற்ற நிலையில், கொரோனா அனைவரையும் வீட்டில் உட்கார வைத்தது. இந்தியாவை விடவும் உலகில் பல நாடுகள் கடுமையாகப் பாதிப்புகளை எதிர்கொண்ட நிலையில் உலக நாடுகளின் பொருளாதாரம் வரலாறு காணாத பாதிப்புகளை எதிர்கொண்டது.

 

அப்படி உலக நாடுகள் எதிர்கொண்டு மிக முக்கியமான மாற்றங்கள் என்ன..?

வாட்டர் பாட்டில் வைத்து முகேஷ் அம்பானி இடத்தை பிடித்தார் ஜாங் ஷான்ஷான்..!

கண்காணிப்பில் மக்கள்

கண்காணிப்பில் மக்கள்

எந்தொரு நாடும் இதுவரை செய்திடாத வகையில் (கொரோனா) பாதிக்கப்பட்ட நபர் யாரை எல்லாம் சந்தித்தார், யாரிடம் பேசினார் என மக்களைப் பெரிய அளவில் அரசு பின்தொடர்ந்தது.

ஊழியர்களுக்கு உதவி

ஊழியர்களுக்கு உதவி

நிறுவனங்கள் பாதிக்கப்பட்ட நபருக்கு பணியாற்றவில்லை என்றாலும் முழுமையாகச் சம்பளத்தைக் கொடுத்து பெரிய அளவில் உதவியது. இது உலகில் பல நிறுவனங்களில் நடந்துள்ளது, இதை யாராலும் மறுக்க முடியாது.

பொருளாதார வீழ்ச்சி
 

பொருளாதார வீழ்ச்சி

கொரோனா பாதிப்பால் உலக நாடுகள் எப்போதும் இல்லாமல் ஓரே சமயத்தில் பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொண்டதன் விளைவாக அமெரிக்கா, பிரிட்டன் போன்ற பெரும் பொருளாதார நாடுகள் முதல் பிரேசில் போன்ற பொருளாதாரத்தில் பின்தங்கிய பல நாடுகள் பெரும் அளவிலான நிதிப் பற்றாக்குறையை எதிர்கொண்டது.

இதனால் 2020ல் சுமார் 11 டிரில்லியன் டாலர் அளவிலான நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது.

குறைந்த வட்டி விகிதம்

குறைந்த வட்டி விகிதம்

கடும் நிதி நெருக்கடி மற்றும் நிதிச் சுமையைத் தீர்க்க பல நாடுகள் அதிகளவிலான பணத்தை அச்சிட முடிவு செய்து வருகிறது. இதேவேளையில் இந்தியா உட்படப் பல நாடுகளில் கடனுக்கான வட்டி விகிதம் எதிர்பார்க்காத வகையில் மிகவும் குறைவாக உள்ளது.

மேலும் வரலாற்றில் இதுபோன்ற பொருளாதாரச் சரிவு ஏற்பட்ட காலகட்டத்தில் குறைக்கப்பட்ட வட்டி விகிதம் நீண்ட காலம் தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நிறுவனங்களுக்கு நிதியுதவி

நிறுவனங்களுக்கு நிதியுதவி

கொரோனா பாதிப்பில் வர்த்தகத்தை இழந்த பல கோடி நிறுவனங்களுக்கு உலக நாடுகளின் அரசுக்கு அதிகளவிலான நிதி உதவி செய்துள்ளது. இதனால் வர்த்தகங்களும், நிறுவனங்களும் திவால் ஆகாமல் காப்பாற்றப்பட்டு உள்ளது மட்டும் அல்லாமல் வேலைவாய்ப்புகள் தொடர்ந்து தக்க வைக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

3.36 டிரில்லியன் டாலர் சுமை

3.36 டிரில்லியன் டாலர் சுமை

அரசின் அதிகளவிலான நிதியுதவி செய்ததன் மூலம் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட கடன் அளவு உலக நாடுகள் மத்தியில் 2020ன் முதல் 6 மாத காலகட்டத்திலேயே இதன் அளவு 3.36 டிரில்லியன் டாலராக உயர்ந்தது.

உலக வங்கி எச்சரிக்கை

உலக வங்கி எச்சரிக்கை

உலக வங்கி எப்போதும் இல்லாமல் உலக நாடுகளைக் கடுமையாக எச்சரித்தது. வல்லரசு நாடுகள் முதல் அனைத்து நாடுகளையும் இந்தக் கொரோன பாதிப்பின் மூலம் அதிகளவிலான கடன் சுமை, வறுமை ஏற்படப்போகிறது என எச்சரித்தது மறக்க முடியாது.

வளர்ச்சிப் பாதை

வளர்ச்சிப் பாதை

மேலும் கொரோனா பாதிப்பு குறையும் வேளையில் உலக நாடுகள் சிறப்பான வளர்ச்சி அடையும் என அனைத்துத் தரப்பு நிதி அமைப்புகளும் தெரிவித்தது. குறிப்பாக வல்லரசு நாடாக உருமாறு துடிக்கும் வளரும் நாடுகளின் வளர்ச்சி மிகவும் சிறப்பாக இருக்கும் என ஆய்வுகள் கூறுகிறது.

ஆட்டோமேஷன் மற்றும் ரோபோ பயன்பாடு

ஆட்டோமேஷன் மற்றும் ரோபோ பயன்பாடு

இந்தக் கொரோனா காலகட்டத்தில் அனைத்துத் தரப்பு நிறுவனங்களும் அதிகளவிலான பணிகளை ஆட்டோமேஷன் மற்றும் ரோபோகளைக் கொண்டு செய்ய முடிவு செய்து அதற்கான பணிகளைச் செய்து வருகிறது. குறிப்பாக 2021, 2022 மிகப்பெரிய வர்த்தக இலக்குகளைக் கொண்டு இருக்கும் பல நிறுவனங்கள் அதிகளவிலான பணிகளை ஆட்டோமேஷன் செய்துள்ளது.

வொர்க் பரம் ஹோம்

வொர்க் பரம் ஹோம்

இதுவரையில் உலக நாட்டு மக்கள் சந்திக்காத வரையில் நீண்ட காலம் பெரும்பாலான மக்கள் வீட்டில் இருந்தே பணியாற்றி வருகின்றனர். இது கடந்த 30 வருடத்தில் எப்போதும் நடந்திடாத ஒன்று என்பதால் மக்கள் மத்தியிலும், குடும்பங்கள் மத்தியில் இணக்கம் அதிகரித்துள்ளது.

முக்கியத் துறைகள் வீழ்ச்சி

முக்கியத் துறைகள் வீழ்ச்சி

இதேபோல் இதுநாள் வரையில் சிறப்பான வர்த்தகங்களைப் பெற்று வந்த உணவு, ரியல் எஸ்டேட், போக்குவரத்து போன்ற பல முக்கியத் துறைகள் உலகம் முழுவதும் அதிகளவிலான பாதிப்புகள் எதிர்கொண்டுள்ளது.

இதேவேளையில் டிஜிட்டல் சேவைகளை வழங்கும் பல நிறுவனங்கள் பெரிய அளவிலான வர்த்தகத்தைப் பெற்று அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சுற்றுலாத் துறை பாதிப்பு

சுற்றுலாத் துறை பாதிப்பு

2020ல் உலகச் சுற்றுலா துறை சுமார் 72 சதவீதம் வர்த்தகத்தை இழந்து மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது. சுற்றுலா பயணங்கள் மட்டும் அல்லாமல் வர்த்தகப் பயணங்களும் இந்தக் காலகட்டத்தில் மிகவும் மோசமான நிலையை எதிர்கொண்டுள்ளது.

சீனாவின் ஆதிக்கம்

சீனாவின் ஆதிக்கம்

கொரோனாவால் சீனா உற்பத்தித் துறை முடங்கியபோது, உலக நாடுகளின் வர்த்தகம், உற்பத்தி, தயாரிப்புத் துறைகள் எப்போதும் காணாத பாதிப்புகளை எதிர்கொண்டது. இதனால் பல முன்னணி நிறுவனங்கள் தனது உற்பத்தி தளத்தைச் சீனாவில் மட்டும் வைக்காமல் பல நாடுகளுக்கு இடம்மாறியது.

பெட்ரோல் டீசல் வாகனங்கள்

பெட்ரோல் டீசல் வாகனங்கள்

இதேவேளையில் அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, இந்தியா, சீனா உட்படப் பல நாடுகள் காற்று மாசுபாட்டைக் குறைக்கும் வரையில் பெட்ரோல், டீசல் வாகனங்களின் பயன்பாட்டைக் குறைக்க அதிகளவில் முயற்சி செய்தனர். பிரிட்டன் 2030 முதல் பெட்ரோல், டீசல் கார்களைத் தயாரிக்கத் தடை விதிக்கவும் திட்டமிட்டு ஆலோசனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இதன் பெரும் பெரும்பாலான நாடுகள் இந்த 2020ல் Go Green திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

coronavirus made massive changes world economy, industries, and people

coronavirus made massive changes world economy, industries, and people
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X