உலகளவில் மாஸ்க் தட்டுப்பாடு.. அதிர வைக்கும் காரணங்கள்.. இந்தியாவின் நிலை..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா வைரஸ் இந்தப் பேரை கேட்டாலே மனத்திற்குள் ஏதோ ஒரு பயம், அந்த அளவிற்கு இதன் தாக்கம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதற்கு ஏற்றார் போல் நாளுக்கு நாள் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தென் மாநிலங்களில் கொரோனாவின் தாக்கம் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நாளுக்கு நாள் இங்கொன்றும் அங்கொன்றுமாகத் தினமும் பாதிக்கப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இப்படியிருக்கும் சூழ்நிலையில் பல மாநிலங்களில் பள்ளிகள், அலுவலங்கள் மூட அரசே உத்தரவிட்டுள்ளது. சில மாநிலங்களில் பெரு நிறுவன ஊழியர்களை அனைவருக்கும் வீட்டில் இருந்த பணியாற்ற அனுமதி வழங்கியுள்ளது.

இந்த மோசமான சூழ்நிலையில் நம்மைப் பயமுறுத்த ஒரு முக்கியமான செய்தி ஒன்று வந்துள்ளது.

 இந்த 6 விஷயத்த பண்ணுங்க..! ரகுராம் ராஜன் போன்ற அனுபவஸ்தர்களின் சூப்பர் அட்வைஸ்! இந்த 6 விஷயத்த பண்ணுங்க..! ரகுராம் ராஜன் போன்ற அனுபவஸ்தர்களின் சூப்பர் அட்வைஸ்!

2 வாரம்

2 வாரம்

மருத்துவச் சிகிச்சைக்குத் தேவையான உபகரணங்களை மக்களுக்கு, மருத்துவமனைக்கும் விநியோகம் செய்யும் Dealmed நிறுவனத்தின் தலைவர் Michael Einhorn கூறுகையில், வெறும் 2 வாரத்தில் தன்னிடம் இருப்பு வைத்திருந்த அனைத்து மாஸ்க்-ம் காலி ஆகிவிட்டதாக அறிவித்துள்ளார்

சீனா

சீனா

உலகளவில் 50 சதவீத மாஸ்க் சப்ளை செய்வது சீனா தான், தற்போது சீனா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் காரணத்தால் சீனாவில் இருந்து எவ்விதமான பொருட்களும் ஏற்றுமதி செய்யப்படவில்லை இதனால் உலகம் முழுவதும் தற்போது மாஸ்க் தட்டுப்பாடு நிலவி வருவதாக Dealmed நிறுவனத்தின் வர்த்தகத் தலைவர் Michael Einhorn தெரிவித்துள்ளார்.

இந்நிறுவனத்தில் இருந்து விநியோகம் செய்யப்படும் மாஸ்க் போன்ற அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் சரியான மருத்துவமனைக்குச் செல்கிறதா என்பதைக் கண்காணிக்கவே தற்போது 100 ஊழியர்களை நியமித்துள்ளது.

 

100 நாடுகள்

100 நாடுகள்

இன்றைய நிலவரப்படி கொரோனா சுமார் 100 நாடுகளைப் பாதித்துள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் அனைவருக்கும், அனைத்து தரப்பினருக்கும் மாஸ்க் போன்ற அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும் என்பது 100 சதவீதம் உத்தரவாதம் இல்லை.

சீனாவும் தற்போது உதவிக்கரம் நீட்ட முடியாத சூழ்நிலையில் தேவைகள் அனைத்தும் தற்போது உள்நாட்டு சந்தையை மட்டும் தான் நம்பியுள்ளது.

 

பெரும் பிரச்சனை

பெரும் பிரச்சனை

இந்தியாவில் இன்னும் சில மாநிலங்களில் கொரோனா-வை எதிர்க்கச் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்கிற சூழ்நிலை நிலவும் நிலையில், மாஸ்க் போன்ற அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு மக்கள் பெரிய அளவில் பாதித்துள்ளது என்றால் மிகையில்லை.

40 சதவீத உற்பத்தி

40 சதவீத உற்பத்தி

தற்போது தேவையைப் பூர்த்திச் செய்ய வேண்டும் என்றால் உள்நாட்டில் இருக்கும் மாஸ்க் தயாரிப்பு நிறுவனங்கள் அனைத்தும் குறைந்தபட்சம் உற்பத்தி அளவை 40 சதவீதம் வரையில் உயர்த்த வேண்டும்.

தற்போது WHO அமைப்பு ஈரான், கம்போடியா மற்றும் உகாண்டா போன்ற நாடுகளுக்கு விநியோகம் செய்து வருவதால் தட்டுப்பாட்டு அளவு பெரிய அளவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

5 மடங்கு உற்பத்தி

5 மடங்கு உற்பத்தி

பொதுவாகச் சீனாவில் 20 மில்லியன் மாஸ்க் உற்பத்தி செய்யப்படும், ஆனால் தற்போது உற்பத்தி அளவில் 5 மடங்கு அதிகரிப்பு செய்யப்பட்டும் அந்நாட்டு தேவையைப் பூர்த்தி செய்ய முடியாமல் சீனா தவிக்கிறது எனச் சீன பத்திரிக்கை ஜின்ஹூவா தெரிவித்துள்ளது.

உங்க ஊரில் மாஸ்க் விலை எவ்வளவு..? தட்டுப்பாடு நிலவுகிறதா..? பதிலை கமெண்ட் பதிவிடும் இடத்தில் பதிவிடுங்கள்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Coronavirus outbreak: The global mask shortage may get much worse

Michael Einhorn’s medical supply company may run out of the masks used to protect against coronavirus in two weeks unless the Chinese manufacturer of his branded equipment resumes production this week. Before Covid-19 outbreak, China produced about half of the world’s output of masks, as per state media Xinhua.
Story first published: Wednesday, March 11, 2020, 12:40 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X