உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனோ வைரஸ்.. மாஸ் காட்டும் தங்கம் விலை.. காரணம் என்ன..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனோ வைரஸ் தாக்குதலால் சீனாவே அதிர்ந்து போயுள்ள நிலையில், தற்போது மற்ற நாடுகளுக்கு பரவலாக பரவ ஆரம்பித்துள்ளது.

அந்த கொடிய தாக்குதலை எப்படியேனும் கட்டுப்படுத்தியே தீர வேண்டும் என்று சீனா முயன்று வரும் நிலையிலும் கூட, இன்று வரை அதற்கான சரியான மருந்துகளும் தீர்வுகளும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்த கொடூரமான வைரஸ் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இதனால் அந்தநாட்டு அரசு இறைச்சிகளை கூட சாப்பிட வேண்டாம் என அறிவுறுத்தி வருகிறது.

காரணம் என்ன?
 

காரணம் என்ன?

சரி இது ஒரு புறம் இருக்க, இதனால் பொருளாதாரம் எப்படி பாதிக்கப்படும், கச்சா எண்ணெய் விலை படு பாதாளத்தினை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. மறுபுறம், தங்கம் விலை இதையெல்லாம் கண்டும் காணாமல் ஏறிக் கொண்டிருக்கிறது. என்ன காரணம்? உலகிலேயே அதிகளவு தங்கம் நுகரும் நாடான சீனாவில் இப்படி ஒரு பாதிப்பு உள்ள நிலையில் தங்கம் விலை மட்டும் எப்படி ஏற்றம் கண்டு கொண்டிருக்கிறது.

பொருளாதாரத்தை பாதிக்குமா?

பொருளாதாரத்தை பாதிக்குமா?

சரி இது ஒரு புறம் இருக்க, இதனால் பொருளாதாரம் எப்படி பாதிக்கப்படும், கச்சா எண்ணெய் விலை படு பாதாளத்தினை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. மறுபுறம், தங்கம் விலை இதையெல்லாம் கண்டும் காணாமல் ஏறிக் கொண்டிருக்கிறது. என்ன காரணம்? உலகிலேயே அதிகளவு தங்கம் நுகரும் நாடான சீனாவில் இப்படி ஒரு பாதிப்பு உள்ள நிலையில் தங்கம் விலை மட்டும் எப்படி ஏற்றம் கண்டு கொண்டிருக்கிறது.

கொரோனோ பரவல்

கொரோனோ பரவல்

சீனாவில் வெகு வேகமாக பரவி வரும் கொரோனோ வைரஸ், தற்போது மற்ற நாடுகளிலும் படு வேகமாக பரவ ஆரம்பித்துள்ளது. இதனால் சர்வதேச அளவில் நிலவி வரும் கவலையானது தங்கத்தின் விலையில் பிரதிபலித்து வருகிறது. இதனால் தங்கம் விலை சர்வதேச சந்தையிலும் தொடர்ந்து சற்று ஏற்றம் கண்டு வருகிறது.

சர்வதேச சந்தையில் தங்கம் விலை
 

சர்வதேச சந்தையில் தங்கம் விலை

சர்வதேச அளவில் தங்கத்தின் விலையானது கடந்த எட்டு தினங்களாகவே அதிகரித்து வருகிறது. சிறிதளவு அவ்வப்போது இறக்கம் கண்டாலும், ஒரு வாரத்தில் மட்டும் சராசரியாக அவுன்ஸூக்கு 33 டாலர்கள் அதிகரித்துள்ளது. எனினும் தங்கத்தின் தற்போது விலை 1579.75 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. நேற்றைய முடிவு விலையானது 1580.25 டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய ப்யூச்சர் வர்த்தகத்தில் எப்படி?

இந்திய ப்யூச்சர் வர்த்தகத்தில் எப்படி?

சர்வதேச சந்தையில் தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் நிலையில், இந்திய கமாடிட்டி வர்த்தகத்திலும் கடந்த நான்கு வர்த்தக தினங்களாகவே தங்கம் விலை ஏற்றம் கண்டு வந்துள்ளது. இந்த நிலையில், இன்று தற்போது 10 கிராம் தங்கத்தின் விலையானது 40,555 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இதே நேற்றைய முடிவில் 40,585 ரூபாயாக முடிவடைந்த நிலையில் தற்போது சற்று குறைந்து வர்த்தகமாகி வருகிறது.

ஆபரணம் தங்கம் விலை

ஆபரணம் தங்கம் விலை

சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலையானது (22 கேரட்) 3876 ரூபாய்க்கும், ஒரு சவரனுக்கு 104 ரூபாய் அதிகரித்து, 31,008 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிறது. இந்தியாவில் அதிலும் சென்னையை பொறுத்த வரையில் ஆபரண தங்கத்தின் விலையானது தொடர்ந்து கடந்த ஐந்து நாட்களாகவே அதிகரித்து வருகிறது.

கொரோனோவால் பாதிப்பு

கொரோனோவால் பாதிப்பு

கொரோனோ வைரஸால் ஏற்கனவே 2,700 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் 80 பேர் பலியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் மேலும் வலுவாக இந்த வைரஸ் பரவி வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் இந்த தொற்று அபாயம் தொடர்ந்து உயரக்கூடும் என்றும் சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் கடந்த ஞாயிற்று கிழமையன்றே தெரிவித்துள்ளது. இதனால் மேலும் பொருளாதாரத்தில் தாக்கம் ஏற்படக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படும் நிலையில் தங்கத்தின் விலையில் அதன் எதிரொலி இருக்கக்கூடும் என்றும் நம்பப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

coronavirus underpins gold: Gold prices rise for 4th day in a row

Coronovirus worries over the spread of new deadly virus in china and fears about its potential economic impact. Its will impact of gold’s safe haven demand further. so gold prices may increase in further in world market.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X