இனி கொரோனா சிகிச்சை கட்டணம் குறையும்.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பால் மக்களுக்கு நன்மை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் தமிழ்நாடு உட்படப் பல மாநிலங்களில் ஊரடங்கு மற்றும் லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்வு அளிக்கப்பட்டு வர்த்தகம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகைச் செய்யப்பட்டு உள்ளது. லாக்டவுன் கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்கப்பட்டாலும் நாடு முழுவதும் இன்னமும் கொரோனா தொற்று இருந்து தான் வருகிறது.

 

தினமும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், ஜிஎஸ்டி கவுன்சில் பல ஆலோசனை மற்றும் விவாதங்களுக்குப் பின்பு கொரோனா மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் மீதான வரியைக் குறைத்துள்ளது.

ஜிஎஸ்டி வரி

ஜிஎஸ்டி வரி

கொரோனா தொற்றால் நாடு முழுவதும் மக்கள் வேலைவாய்ப்புகளை இழந்தும் வர்த்தகத்தை இழந்தும் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கும் நிலையில், உயிர்காக்கும் பல கொரோனா மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் மீது மத்திய அரசு அதிகளவிலான ஜிஎஸ்டி வரியை விதித்து வந்தது.

மத்திய மாநில அரசு விவாதம்

மத்திய மாநில அரசு விவாதம்

இதனால் மருத்துவமனையிலும், வீடுகளிலும் மருத்துவச் சிகிச்சை பெற்றுவருவோர் கொரோனா மருந்துக்கும், மருத்துவ உபகரணங்களுக்கும் அதிகளவிலான பணத்தைச் செலவிட வேண்டிய நிலை உருவானது.

பல மாநில அரசுகள், குறிப்பாகப் பிஜேபி ஆட்சியில் இல்லாத மாநில அரசுகள் கோவிட் வேக்சின் உட்படக் கொரோனா மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் மீதான வரியைக் குறைக்க நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தது.

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்
 

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்

இந்நிலையில் நீண்ட இடைவேளைக்குப் பின்பு மே மாதம் நடந்த 43வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மாநில அரசுகளுக்கும் ஜிஎஸ்டி கவுன்சில்-க்கும் இடையே வரிக் குறைப்பு உட்படப் பல விஷயங்களுக்காகக் கடுமையான வாக்குவாதம் நடந்தது.

கொரோனா மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள்

கொரோனா மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள்

இந்தக் கூட்டத்தின் முடிவில் கொரோனா மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் மீதான வரியை குறைப்பது குறித்துக் குழு அமைத்து ஜூன் 8ஆம் தேதி அறிக்கை சமர்ப்பிக்கும். அதன் அடிப்படையில் ஜூன் 12ஆம் தேதி நடக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என ஜிஎஸ்டி கவுன்சில் தலைவரும், நாட்டின் நிதியமைச்சருமான நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

வரிக் குறைப்பு

வரிக் குறைப்பு

இதன் அடிப்படையில் ஜூன் 12ஆம் தேதி நடந்த ஜிஎஸ்டி கூட்டத்தில் கொரோனா மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் பலவற்றுக்கு அதிகளவிலான வரியை குறைத்தது ஜிஎஸ்டி கவுன்சில். ஆனால் கோவிட் வேக்சின் மீதான 5 சதவீத ஜிஎஸ்டி வரியை குறைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா சிகிச்சை கட்டணங்கள்

கொரோனா சிகிச்சை கட்டணங்கள்

இந்த வரிக் குறைப்பின் மூலம் கொரோனா சிகிச்சையின் கட்டணங்கள் பெரிய அளவில் குறையும். இதனால் தற்போது நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வரும் பல லட்சம் பேர் பலன் அடைவார்கள். இதேவேளையில் இந்த வரிக் குறைப்பு லாபத்தை மருத்துவமனைகள் மக்களுக்கு முழுமையாகக் கொண்டு சேர்க்குமா..?

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

இந்த வரிக் குறைப்பு குறித்துத் தமிழ்நாட்டின் நிதியமைச்சரான பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கொரோனா சிகிச்சைக்கான மருந்துகள் மற்றும் கருவிகள் மீது 0% அல்லது 0.1% வரி தான் விதிக்க வேண்டும் என வலியுறுத்தி ஜிஎஸ்டி கூட்டத்தில் பேசியுள்ளார்.

மோடிக்குக் கடிதம்

மோடிக்குக் கடிதம்

மேலும், கொரோனா தொடர்பான மருந்துகள் மற்றும் கருவிகள் மீது குறிப்பிட்ட காலத்திற்குப் பூஜ்ய விகித வரி நிர்ணயிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்குக் கடிதம் எழுதியிருப்பதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாகவும் தமிழ்நாடு அரசின் செய்திக்குறிப்புத் தெரிவிக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Covid-19 treatment cost will fall after GST rates cut on covid medicine

Covid-19 treatment cost will fall after GST rates cut on covid medicine
Story first published: Sunday, June 13, 2021, 10:55 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X