கோவிட் வேக்சின் போட்டுகிட்டா டெஸ்லா கார், ஐபோன் பரிசு.. எந்த ஊர்ல தெரியுமா..?!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவலைத் தடுக்கவும் 3வது அலை பெரியதாக வெடிக்கும் முன்பு கட்டுப்படுத்தத் தீவிரமாகப் பணியாற்றி வருகிறது.

 

கொரோனாவை கட்டுப்படுத்த முதலும் முக்கியமாக விளங்குவது தடுப்பூசி, ஆனால் உலகம் முழுவதும் மக்கள் தடுப்பூசி பெற தயக்கம் காட்டுவதால் உலக நாடுகள் மக்களை ஈர்க்கும் வகையில் பல கவர்ச்சிகரமான பரிசுகளை அறிவித்துள்ளது.

5 வருடத்தில் 4.3 கோடி ரூபாய்.. விவசாயத்தில் புதுமை படைத்த செல்வகுமார்..!

அப்படி எந்த நாடுகள் என்ன பரிசுகளை அறிவித்துள்ளது என்பதை இப்போது பார்ப்போம். இப்பட்டியலில் இந்தியா இல்லை, காரணம் இந்தியாவில் மக்கள் வேக்சின் போட்டுக்கொள்ள ஆர்வமாக இருந்தாலும் அரசிடம் வேக்சின் இல்லை.

கொரோனா வேக்சின்

கொரோனா வேக்சின்

கொரோனா வேக்சின் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்ட காலத்தில் வேக்சின் போடுபவர்களுக்குச் சமுகவலைதளத்தில் பயன்படுத்திக்கொள்ள ஒரு டிஜிட்டல் ஸ்டிக்கர் மட்டுமே கொடுக்கப்பட்டது. ஆனால் இப்போது கொரோனாவின் பாதிப்பைக் கண்டு உலக நாடுகள் அஞ்சி நடுங்குகிறது.

ஹாங்காங்

ஹாங்காங்

ஹாங்காங் அரசு உலகிலேயே யாரும் கொடுக்காதது போல் வேக்சின் போடுபவர்களுக்கு டெஸ்லா, உலகிலேயே காஸ்ட்லியான நகரமான ஹாங்காங்-ல் அப்பார்ட்மென்ட், தங்கப் பார், வைரம் பதியப்பட்ட ரோலக்ஸ் வாட்ச் அல்லது 1,00,000 டாலர் மதிப்பிலான ஷாப்பிங் கிப்ட் ஆகியவற்றைக் குலுக்கல் முறையில் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

ரஷ்யா

ரஷ்யா

ஸ்புட்நிக் வேக்சின்-ஐ தயாரித்து உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்து வரும் ரஷ்யாவும் தன் நாட்டு மக்களை வேக்சின் போட்டுக்கொள்ளப் பரிசு அளிப்பதாக அறிவித்துள்ளது. ரஷ்ய அதிபர் வெளியிட்ட அறிவிப்பில் வேக்சின் போட்டுக்கொள்பவர்களுக்கு ஸ்னோமொபைல் கொடுப்பதாக அறிவித்துள்ளார்.

அமெரிக்கா மாகாணங்கள்
 

அமெரிக்கா மாகாணங்கள்

அமெரிக்காவின் மேற்கு வர்ஜீனியா மாகாணம் வேக்சின் போடுபவர்களுக்கு வேட்டையாட வாழ்நாள் லைசென்ஸ் மற்றும் கஸ்டம் துப்பாக்கி அளிப்பதாக அறிவித்துள்ளது

அலபாமா மாகாணம் வேக்சின் போடுபவர்களுக்கு ஸ்பீட்வே டிராக்-ல் வாகனத்தை ஓட்ட அனுமதி அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

நியூயார்க் மாகாணம் அரசின் வேக்சின் டிரைவ்-ல் முதல் முறையாக வேக்சின் போடுபவர்களுக்குப் பணம் பரிசு அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஓஹியோ மாகாணம் 12 முதல் 17 வயதில் இருப்போர் வேக்சின் போட்டுக்கொண்டால் 4 வருடம் முழுமையான ஸ்காலர்ஷிப் இலவசமாக அளிக்கப்படும் என அறிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர்

அமெரிக்க அதிபர்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வேக்சின் போடுபவர்கள் அனைவருக்கும் 100 டாலர் அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். இது பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொலராடோ, இல்லினாய்ஸ், மைனே, மினசோட்டா மற்றும் டெலாவேர் ஆகிய மாகாணம் பலதரப்பட்ட பரிசு, பணம், சலுகைகளை அறிவித்துள்ளது.

செர்பியா

செர்பியா

செர்பியா அதிபர் Aleksandar Vučić தன் நாட்டுக்கு மக்களுக்கு வேக்சின் போடத் தூண்டுவதற்குப் பணத்தைப் பரிசாக அளிப்பதாக அறிவித்துள்ளார்.

இஸ்ரேல்

இஸ்ரேல்

இதேபோல் இஸ்ரேல் வேக்சின் போடுவோருக்கு ஜிம், ஹோட்டல், ரெஸ்டாரென்ட் செல்ல அனுமதிக்கப்படும் கிரீன் பாஸ் அளிக்கப்படும் என அறிவித்துள்ளது.

ஐபோன் பரிசு

ஐபோன் பரிசு

இதேபோல் ப்ராக் வேக்சின் போடுபவர்களுக்கு ஐபோன் கொடுப்பதாக அறிவித்துள்ளது.

பிரான்ஸ் மற்றும் ஏதென்ஸ் நகரில் பார் அல்லது ரெஸ்டாரென்ட்-க்கு இலவசமாகச் செல்ல பாஸ் வழங்கப்படுகிறது.

இன்னும் சில நாட்டில் இலவச போன் டேட்டா, புட்பால் ஸ்டேடியத்தில் சுற்றுலா, கறி விருந்து எனப் பல சலுகை வழங்கப்பட்டு வருகிறது.

சென்னை மற்றும் இந்தியா

சென்னை மற்றும் இந்தியா

வெளிநாட்டில் மட்டும் அல்லா நம்ம சென்னையிலும், ஒரு பவுண்டேஷன் அமைப்பு தங்க நாணயம், வாசிங் மெஷின், மிக்சி, பைக் ஆகியவற்றைப் பரிசாக அளிப்பதாக அறிவித்துள்ளது. இதேபோல் பிகார், குஜராத், அருணாச்சல பிரதேசத்தில் சில பகுதிகளில் மட்டும் சலுகை பரிசுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அடிப்படை சேவை ரத்து

அடிப்படை சேவை ரத்து

இதேபோல் பல இடத்தில் வேக்சின் போடாவிட்டால் அரசு அளிக்கும் அடிப்படை சேவைகள் அளிக்கப்படாது எனவும் மக்களைப் பயமுறுத்தி மக்களுக்கு வேக்சின் அளித்து வருகிறது. பல நாடுகளை இத்தகைய திட்டத்தையும் கையில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியா

இந்தியா

இந்தியா-வின் நிலை பற்றி உங்கள் கருத்தை கமெண்ட் பண்ணுங்க, அரசு எப்படியெல்லாம் வேக்சின் உற்பத்தியை அதிகரிக்கலாம் மக்களாகிய உங்கள் ஐடியா என்ன..? மக்கள் வேக்சின் போட்டுக்கொள்ளத் தயாராக உள்ளார்களா..?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Covid-19 vaccine incentives offering around the world - full details

Covid-19 vaccine incentives offering around the world - full details
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X