கையில் எஸ்ட்ரா பணம் இருக்கா.. 9% வட்டியுடன் கிரெட்-ன் புதிய திட்டம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குணால் ஷா தலைமை விகிக்கும் கிரெடிட் கார்ட் பேமெண்ட் நிறுவனமான கிரெட் நிறுவனம் பியர் டு பியர் கடன் சேவை திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. நீண்ட காலமாகக் கார்பரேட் உலகில் பேசப்பட்டு வரும், பேசி மட்டுமே வரும் ஒரு திட்டம் தான் இது.

 

அப்படி என்னடா திட்டம்.. ஓவர் பில்டுஅப்-ஆ இருக்கே-ன்னு நீங்க கேட்பது புரிகிறது. வாங்க விஷயத்திற்குள்ளே போகலாம்.

கிரெடிட் கார்டு பேமெண்ட் சேவை

கிரெடிட் கார்டு பேமெண்ட் சேவை

கிரெடிட் கார்டு பேமெண்ட் சேவைக்கு இன்று இந்தியாவிலேயே பெயர்போன நிறுவனமாக இருக்கும் ஒரு நிறுவனம் என்றால் அது கிரெட். இந்நிறுவனம் தற்போது கிரெட் மின்ட் என்ற புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது, இந்தச் சேவை மூலம் கிரெட் செயலியை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் பிற கிரெட் வாடிக்கையாளர்களுக்குக் கடன் அளிக்க முடியும்.

லிக்விலோன்ஸ் உடன் கூட்டணி

லிக்விலோன்ஸ் உடன் கூட்டணி

இந்தச் சேவைக்காகக் கிரெட் நிறுவனம் லிக்விலோன்ஸ் (LiquiLoans) உடன் கூட்டணி வைத்துள்ளது. லிக்விலோன்ஸ் ஒரு வங்கியில்லாத நிறுவனம் இந்நிறுவனம் P2P அதாவது ஒருவர் மற்றவர்களுக்குக் கடன் அளிக்கும் சேவையை வழங்குகிறது.

கிரெட் மின்ட் சேவை
 

கிரெட் மின்ட் சேவை

தற்போது கிரெட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள கிரெட் மின்ட் சேவையில் ஒருவர் 1 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரையிலான தொகையைப் பிற கிரெட் வாடிக்கையாளர்களாக்கு கடன் அளிப்பதற்காக முதலீடு செய்ய முடியும். இதற்காக Capital Pool என்ற வேலெட் உருவாக்கப்பட்டு உள்ளது.

9 சதவீத வட்டி வருமானம்

9 சதவீத வட்டி வருமானம்

கிரெட் வாடிக்கையாளர்கள் Capital Poolல் வைத்திருக்கும் தொகையை, தனிநபர் கடன் கேட்கும் பிற கிரெட் வாடிக்கையாளர்களுக்குக் கடனாக 12 முதல் 13 சதவீதம் வருடாந்திர வட்டியில் வழங்கப்படும். இதில் 9 சதவீத வட்டியை, பணத்தைக் கடனாகக் கொடுத்தவர்களுக்கு வழங்கப்படும்.

இரு தரப்புக்கும் லாபம்

இரு தரப்புக்கும் லாபம்

சந்தையில் கிடைக்கும் தனிநபர் கடனுக்கு நிகரான வட்டியிலும், பல வங்கிகளை ஒப்பிடுகையில் மிகவும் குறைவான வட்டியிலும் கிரெட் தளத்தில் கடன் பெற முடியும். அதேவேளையில் சந்தையில் இருக்கும் டெப்பாசிட், சிறு சேமிப்புத் திட்டத்தை விடவும் அதிகமாக லாபம் இந்தக் கிரெட் மின்ட் சேவையில் கிடைக்கிறது.

குணால் ஷா

குணால் ஷா

இதுகுறித்து கிரெட் நிறுவனத்தின் தலைவர் குணால் ஷா கூறுகையில், கிரெட் வாடிக்கையாளர்கள் பலர் தங்கள் வங்கி கணக்கில் பல லட்சம் ரூபாய் பணத்தைப் பயன்படுத்தாமல் வைத்துள்ளனர். வங்கி கணக்கில் இருக்கும் பணத்திற்குக் கிடைக்கும் வருமானம் மிகவும் குறைவு, அதை வர்த்தகமாக்கும் முயற்சியில் தான் இத்திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

பியர் டூ பியர் கடன் திட்டம்

பியர் டூ பியர் கடன் திட்டம்

இந்தியாவில் இந்தப் பியர் டு பியர் கடன் திட்டம் புதியது இல்லை என்றாலும், பெரிய அளவில் பிரபலம் ஆகாமல் இருக்கும் ஒன்று. இத்தகையைச் சேவையை லிக்விலோன்ஸ், லென்டென்கிளப், ரூபிசர்கிள் போன்ற பல நிறுவனங்கள் வழங்குகிறது.

பாதுகாப்பா...?

பாதுகாப்பா...?

கிரெட் நிறுவனத்தின் சேவையைப் பயன்படுத்துபவர்க்கு இந்நிறுவனத்தின் சேவை தரம் குறித்து நன்கு தெரியும். எந்த ஒரு முதலீடாக இருந்தாலும் சந்தை ஆபத்துகளை ஆய்வு செய்து அதன் பின்பு முதலீடு செய்யுங்கள் என்பதே தமிழ் குட்ரிட்டன்ஸ் எப்போதும் அறிவுறுத்தும் ஒன்று, இங்கேயும் அதேதான்.

வங்கி அல்லாத அமைப்புகள்

வங்கி அல்லாத அமைப்புகள்

பொதுவாக இதுபோல கடன் திட்டங்களில் கடனை திருப்பிச் செலுத்தினால் மட்டுமே லாபம். அந்த வகையில் வங்கி அல்லாத அமைப்புகள் வாடிக்கையாளர்களுக்குத் தனது சொந்த பணத்தைக் கொடுத்துவிட்டுப் பாதிப்புகளைத் தனது கணக்கில் எடுத்துக்கொள்ளும்.

கிரெடிட் ஸ்கோர் 750

கிரெடிட் ஸ்கோர் 750

இந்நிலையில் இந்தத் திட்டம் கிரெட் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அளிக்கப்படுவதாகவும், வெளியில் இருந்து யாரும் இத்திட்ட சேவையைப் பெற அனுமதிக்கப்படுவது இல்லை என்றும் குணால் ஷா தெரிவித்துள்ளார். இதேபோல் கிரெட் தளத்தில் கிரெடிட் ஸ்கோர் 750க்கும் அதிகமானவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள் என்பதால் இத்திட்டம் மீதான ஆபத்துக் காரணிகள் மிகவும் குறைவு எனக் குணால் ஷா கூறுகிறார்.

கிரெடிட் கார்டு பில் பேமெண்ட்

கிரெடிட் கார்டு பில் பேமெண்ட்

2018 முதல் இயங்கி வரும் கிரெட் நிறுவனம், இந்தியாவில் செய்யப்படும் மொத்த கிரெடிட் கார்டு பில் பேமெண்ட்களில் 25 முதல் 30 சதவீதம் கிரெட் வாயிலாகத் தான் செலுத்தப்படுகிறது. மேலும் கிரெட் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்குக் கடன் அளிக்கும் சேவையை 2020ல் துவங்கியுள்ளது.

2000 கோடி ரூபாய்

2000 கோடி ரூபாய்

இதுவரை 2000 கோடி ரூபாய் அளவிற்கான கடனை கிரெட் கொடுத்துள்ள நிலையில், 1 சதவீதத்திற்கும் குறைவான வாராக் கடனை மட்டுமே வைத்துள்ளது கிரெட். ஏப்ரல் 2021ல் யூனிகார்ன் அந்தஸ்தைப் பெற்ற கிரெட் இன்று 2.2 பில்லியன் டாலர் அளவில் மதிப்பிடப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

CRED launches peer-to-peer lending option Cred Mint at 9% interest rate

CRED launches peer-to-peer lending option Cred Mint at 9% interest rate
Story first published: Friday, August 20, 2021, 20:23 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X