கிரெடிட் சூசி சொன்ன நல்ல விஷயம்.. பட்டையை கிளப்பிய இண்டிகோ பங்கு விலை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஹரியானாவை அடிப்படையாகக் கொண்ட இண்டிகோ நிறுவனம், மிகக் குறைந்த கட்டணத்தில் மக்களுக்கு விமான சேவையை வழங்கி வரும் நிறுவனமாக இருந்து வருகிறது.

 

அதிலும் உள்நாட்டு சந்தை மதிப்பில் அக்டோபர் 2019ன் படி, 47.7 சதவிகித பங்குகளை வகித்து வருகிறது. இந்த வகையில் இந்தியாவின் மிகப்பெரிய குறைந்த கட்டணத்தில் சேவை வழங்கும் ஒரு மிகப்பெரிய நிறுவனம் இண்டிகோவாகும்.

கிரெடிட் சூசி சொன்ன நல்ல விஷயம்.. பட்டையை கிளப்பிய இண்டிகோ பங்கு விலை..!

கடந்த 2018 - 2019ம் நிதியாண்டின் படி, 64 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது இந்த நிறுவனம். இந்த நிலையில் இந்த நிறுவனம் மொத்தம் 83 இடங்களுக்கு விமான சேவையை வழங்கி வருகிறது. இதில் 60 உள்நாட்டு விமான சேவையையும், 23 சர்வதேச விமான தளங்களுக்கும் வழங்கி வருகிறது.

தற்போது நாட்டில் கொரோனாவின் தாக்கம் இருந்து வந்தாலும், மறுபுறம், பொருளாதார வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன. அரசும் பொருளாதார வளர்ச்சியினை கருத்தில் கொண்டு, லாக்டவுனில் படிப்படியாக பல தளர்வுகளை அளித்து வருகிறது. இதன் காரணமாக விமானத் துறையும் வளர்ச்சி காண ஆரம்பித்துள்ளது.

அதிலும் இந்தியாவில் வெற்றிகரமாக வலம் வரும் உள்நாட்டு விமான நிறுவனமான இண்டிகோ நிறுவனம், தற்போது வளர்ச்சி பாதையில் மீண்டும் செல்ல ஆரம்பித்துள்ளது. இதனை ஊக்குவிக்கும் விதமாக கச்சா எண்ணெய் விலையும் குறைவாக உள்ளது. இது விமான நிறுவனங்களுக்கு சப்போர்ட் செய்யும் விதமாகவே உள்ளது.

இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது அதிகரிக்கும் என்று நிபுணர்கள் பலரும் கணித்து வருகின்றனர். இதற்கிடையில் கிரெடிட் சூசி நிறுவனம் இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது அதிகரிக்கும் என்றும், அதன் இலக்கினையும் அதிகரித்துள்ளது. முன்பு கணித்திருந்த 1,500 ரூபாய் என்ற இலக்கிலிருந்து, தற்போது 2,100 ரூபாயாக அதிகரித்துள்ளது.

448 புள்ளிகள் எகிறிய சென்செக்ஸ்! மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்!

இதற்கிடையில் இன்று இண்டிகோவின் பங்கு விலையானது 2.56% அதிகரித்து, 1366 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

 

கடந்த முதல் காலாண்டில் இந்த நிறுவனத்தின் நிகர நஷ்டம் 2,844.3 கோடி ரூபாயாகும். இதுவே முந்தைய ஆண்டில் 1,203.1 கோடி ரூபாய் லாபத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த காலகட்டத்தில் இந்த விமான நிறுவனத்தின் வருவாய் 91.9% வீழ்ச்சி கண்டிருந்தது. கொரோனா வைரஸ் தாக்கத்தினால் லாக்டவுன் அமல்படுத்தப்பட்ட நிலையில், விமான சேவை முற்றிலும் முடங்கியது. இதன் காரணமாக பெரும் சரிவினைக் கண்டிருந்த இந்த நிறுவனம், இரண்டாவது காலாண்டு அறிக்கையினை இன்னும் வெளியிடவில்லை. எனினும் இது மூன்றாவது காலாண்டில் நல்ல வளர்ச்சி காணலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Credit Suisse increased indigo target by 40%

Credit Suisse increased target price on indigo to Rs2,100 from Rs.1,500 earlier
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X