கச்சா எண்ணெய் விலை 150 டாலராக உயரும்.. நடப்பதை மட்டும் பாருங்க..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா தொற்றில் இருந்து உலக நாடுகள் இயல்பு நிலைக்குத் திரும்பிய நிலையில் தான் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. இந்தப் போர் கிட்டதட்ட ஒரு மாதத்திற்குப் பின்பு பலகட்ட பேச்சுவார்த்தை மூலம் போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில் தற்போது சீனாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்கத் துவங்கியுள்ளது.

 

3 மாதத்தில் 11.5 பில்லியன் டாலர் கடன்.. இந்தியாவின் மொத்த கடன் எவ்வளவு தெரியுமா..?!

இந்த இக்கட்டான காலம் அனைத்திலும் அதிகம் பாதிக்கப்பட்டது கச்சா எண்ணெய் பயன்பாட்டு அளவு, விநியோகம் மற்றும் அதன் விலை தான்.

கச்சா எண்ணெய் விலை

கச்சா எண்ணெய் விலை

இந்நிலையில் ஜூலை மாதத்திற்குப் பின் கச்சா எண்ணெய் விலை 150 டாலர் வரையில் உயரும் எனச் சந்தை வல்லுனர் கூறியுள்ளார். இதன் மூலம் பெட்ரோல் விலை லிட்டருக்கு 150 ரூபாய் வரையில் உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்யா - உக்ரைன் பேச்சுவார்த்தை

ரஷ்யா - உக்ரைன் பேச்சுவார்த்தை

ரஷ்யா - உக்ரைன் மத்தியிலான இரண்டு வார பேச்சுவார்த்தையில் இரு தரப்புக்கும் சாதகமாக முடிவு எடுக்கப்பட்ட நிலையில், உக்ரைன் நாட்டில் இருக்கும் ரஷ்ய படைகள் திரும்பப் பெறாவிட்டாலும், போர் பதற்றம் பெரிய அளவில் குறைந்துள்ளது. இந்நிலையில் ரஷ்யாவில் இருந்து தேக்கம் அடைந்த கச்சா எண்ணெய் அனைத்தும் தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.

ஜோ பைடன்
 

ஜோ பைடன்

இதேபோல் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அந்நாட்டில் எரிபொருள் விலையைக் குறைக்க அவசரக் காலச் சேமிப்பில் இருக்கும் எண்ணெய்யைப் பெரிய அளவில் பயன்பாட்டிற்கு அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது அமெரிக்க அரசு.

WTI, பிரெண்ட் எண்ணெய்

WTI, பிரெண்ட் எண்ணெய்

இதனால் அமெரிக்காவின் WTI கச்சா எண்ணெய் விலை 0.12 சதவீதம் மட்டுமே உயர்ந்து 100.4 டாலராக உயர்ந்துள்ளது. இதேபோல் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 0.41 சதவீதம் உயர்ந்து 105.1 டாலராக உயர்ந்துள்ளது.

ஜியோஸ்பியர் கேப்பிடல்

ஜியோஸ்பியர் கேப்பிடல்

இந்நிலையில் வெள்ளிக்கிழமை ஜியோஸ்பியர் கேப்பிடல் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தின் மேனேஜிங் பார்னர் அரவிந்த் சங்கர் 2022ஆம் ஆண்டின் இரண்டு பாதியின் துவக்கத்தில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 125 முதல் 150 டாலர் வரையில் உயர அதிகப்படியான வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா தவறான முடிவு

அமெரிக்கா தவறான முடிவு

அமெரிக்கா தனது மூலோபாயப் பெட்ரோலிய இருப்பு வெளியீடு அடுத்தச் சில மாதங்களில் ஒரு தவறு என்பதை நிரூபிக்கப் போகிறது, ஏனென்றால் ஆண்டின் இரண்டாம் பாதியில், குறிப்பாக Q3 இன் இறுதியில், அமெரிக்கா தனது மூலோபாயப் பெட்ரோலிய இருப்பு பல தசாப்தங்கள் காட்டிலும் குறைவான நிலைக்குத் தள்ளப்படும். இதனால் தேவை மீண்டும் அதிகரிக்கும், ஆனால் கச்சா எண்ணெய் உற்பத்தி இந்த இடைப்பட்ட காலத்தில் உயர்த்துவதற்கு எவ்விதமான வாய்ப்பும் இல்லை.

சப்ளை டிமாண்ட் பிரச்சனை

சப்ளை டிமாண்ட் பிரச்சனை

இதன் மூலம் கச்சா எண்ணெய்-க்கு டிமாண்ட் அதிகரித்துச் சப்ளையில் தட்டுப்பாடு அதிகரிக்கும், மேலும் எரிபொருள் எரிவாயுவிற்காக அமெரிக்காவை நம்பியிருக்கும் பிரிட்டனிலும் இதன் பாதிப்பு எதிரொலிக்கும் இந்தக் காலகட்டத்தில் கட்டாயம் கச்சா எண்ணெய் விலை உயரும்.

இந்தியா

இந்தியா

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் கட்டாயம் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் என்பதில் எவ்விதமான மாற்றுக்கருத்தும் இல்லை. இதேவேளையில் ரஷ்யா உடனான ஒப்பந்தம் தொடரும் பட்சத்தில் இந்தியா 20 முதல் 35
டாலர் வரையிலான தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் பெற முடியும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Crude oil price may hit 125-150 dollar per bbl soon says Arvind Sanger

Crude oil price may hit 125-150 dollar per bbl soon - Arvind Sanger கச்சா எண்ணெய் விலை 150 டாலராக உயர்வும்.. நடப்பதை மட்டும் பாருங்க..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X