பெட்ரோல் டீசல் விலை குறையுமா.. இரண்டாவது நாளாக சரியும் கச்சா எண்ணெய் விலை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த ஆண்டில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளும் கொரோனாவின் முதல் அலையை எதிர்கொள்ள முடியாமல் தவித்து வந்த நிலையில், முழு லாக்டவுனை அமல்படுத்தின. இது கொரோனாவினைக் கட்டுக்குள் கொண்டு வர என்றாலும், பொருளாதார வளர்ச்சி குறித்தான அனைத்து நடவடிக்கைகளும் முடங்கின.

 

இதனால் தொழிற்சாலைகள், போக்குவரத்துகள், பொதுபோக்குவரத்து, ஏர்லைன்ஸ், ரயில்வே, அலுவலகங்கள் என பலவும் முடங்கின. இதனால் மக்களின் பயன்பாடும் வெகுவாக முடங்கியது.

அத்தியாவசியம் தவிர மற்றவற்றிற்கு செலவு செய்ய மக்கள் யோசித்தனர். இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர். இதனால் கச்சா எண்ணெய் தேவையானது வெகுவாக முடங்கியது. கனவில் கூட நினைத்திருப்போமா என்று தெரியவில்லை, அந்த சமயத்தில் கச்சா எண்ணெய் விலையானது மைனஸில் செல்லும் என?

கச்சா எண்ணெய் விலை சரிவு

கச்சா எண்ணெய் விலை சரிவு

அந்த சமயத்தில் கொரோனாவினால் நடந்த ஒரு நல்ல விஷயம் என்னவெனில், கச்சா எண்ணெய் விலை குறைந்தது தான். இதனால் இந்தியா உள்ளிட்ட அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகள் நல்ல பலன் அடைந்தன. இது இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளுக்கு இது மிக நல்ல விஷயமாக கருதப்பட்டாலும், எண்ணெய் உற்பத்தி நாடுகளுக்கு இது பெரும் சவாலான விஷயமாக பார்க்கப்பட்டது. ஏனெனில் கடந்த ஆண்டில் பல எண்ணெய் நிறுவனங்கள் திவால் நிலைக்கு சென்றது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் தங்களின் முழு நேர வர்த்தகமும், முழு வருமான ஆதாரமாகவும் உள்ள எண்ணெய் விற்பனையில் சரிவு ஏற்படும் போது நிறுவனங்களும் வீழ்ச்சியைக் கண்டன.

தேவை சரிவு

தேவை சரிவு

இதற்கிடையில் தற்போது கொடிய கொரோனாவின் இரண்டாம் கட்ட பரவலானது மிக வேகமாக பரவி வருகின்றது. இதனால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் விஸ்வரூபம் எடுத்து பரவி வருகின்றது. இதனால் லாக்டவுன் நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. இதனால் மீண்டும் பொருளாதாரம் சரியுமே என்ற கவலையும் எழுந்துள்ளது. இதனால் கச்சா எண்ணெய் தேவையானது சரிவினைக் காணலாம் என்ற கவலையும் எழுந்துள்ளது. ஏனெனில் உலகளவில் அதிகளவு எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.

WTI கச்சா எண்ணெய் விலை
 

WTI கச்சா எண்ணெய் விலை

இன்றோடு கடந்த இரண்டு நாட்களாகவே கச்சா எண்ணெய் தேவையானது குறைந்து வரும் நிலையில், தற்போது 0.86% குறைந்து, பேரலுக்கு 62.13 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. இது கொரோனாவின் காரணமாக இன்னும் லாக்டவுன் நடவடிக்கைகள் கடுமையாக்கப்படலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. இதனால் கச்சா எண்ணெய் விலையானது மீண்டும் சரிவினைக் காண ஆரம்பித்துள்ளது. இது இந்தியா மட்டும் மற்ற உலக நாடுகளிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், உலகளவில் எண்ணெய் தேவையும் கடும் வீழ்ச்சியடைந்து வருகின்றது.

பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை

பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை

பிரெண்ட் கச்சா எண்ணெய் விலையும் இரண்டாவது நாளாக இன்று இன்னும் சரிவினைக் கண்டுள்ளது. தற்போது 0.75% குறைந்து, பேரலுக்கு 66.06 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. இது இன்னும் குறையும் விதமாக காணப்படுகிறது. தேவையும் இனி வரும் காலத்தில் குறையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

பெட்ரோல் & டீசல் விலை

பெட்ரோல் & டீசல் விலை

இந்தியாவினை பொறுத்தவரையில் பெட்ரோல் & டீசல் விலையானது, வரி மூலம் கச்சா எண்ணெய் விலை குறைவின் ஆதாயம் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இந்த நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், அதனால் பெட்ரோல் & டீசல் விலை குறையுமா? என்பது கேள்விக்குறியாகத் தான் உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Crude oil prices falls second day as covid-19 surge to dent fuel demand

Oil price update.. Crude oil prices falls second day as covid-19 surge to dent fuel demand
Story first published: Wednesday, April 21, 2021, 10:58 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X