சீனா லாக்டவுன் எதிரொலி.. கச்சா எண்ணெய் விலை மேலும் சரிவடையலாம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கச்சா எண்ணெய் விலையானது சர்வதேச சந்தையில் இன்று பலத்த சரிவினைக் கண்டுள்ளது. இந்த சரிவானது இனியும் தொடருமா? இதனால் தொடர்ந்து அதிகரித்து வரும் எரிபொருட்கள் விலையானது கட்டுக்குள் வருமா? என்ற பல கேள்விகள் எழுந்துள்ளது.

 

இதற்கிடையில் கச்சா எண்ணெய் அவுட்லுக் பற்றி அபான்ஸ் குழுமத்தின் EVP & கேப்பிட்டல் & கமாடிட்டீஸின் தலைவர் மகேஷ் குமாரிடம் பேசினோம்.

ரஷ்யா செம ஹேப்பி.. 2வது நாளாக சரிவில் கச்சா எண்ணெய் விலை.. ஏன் தெரியுமா?

விலை சரிவு

விலை சரிவு

சீனாவில் தற்போது மீண்டும் கொரோனாவின் தாக்கம் பரவத் தொடங்கியுள்ள நிலையில், பல நகரங்களில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இது நுகர்வு குறையலாம் என்ற கவலைக்கு மத்தியில், எண்ணெய் விலையானது அழுத்தத்தில் காணப்படுகிறது. இது மேலும் விலை குறைய காரணமாக அமையலாம்.

எரிபொருள் தேவை சரிவு

எரிபொருள் தேவை சரிவு

சீனாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் லாக்டவுன் கட்டுப்பாடுகள் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நுகர்வு வீழ்ச்சி கண்டுள்ளது. சீனாவில் எரிபொருள் தேவையானது மார்ச் 11- 17 வரை, சீனாவின் பெரிய விமான நிலையங்களில் 50% அதிகமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்
 

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்

எப்படியிருப்பினும் உக்ரைன் - ரஷ்யா போர் பற்றிய கவலை எண்ணெய் விலையில் ஏற்படும் சரிவினைக் குறைக்கும். இதனை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக சவுதி எண்ணெய் விநியோக ஆலையின் மீது ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலை நடத்தியுள்ள நிலையில், கச்சா எண்ணெய் விலையானது நேர் மறையாக இருந்தது. இது எண்ணெய் விநியோகத்தினை சீர்குலைத்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

ஓபெக் கூட்டத்தில் முக்கிய முடிவு

ஓபெக் கூட்டத்தில் முக்கிய முடிவு

கடந்த ஒரு வாரத்தில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் சவுதி அரேபியாவின் குறைந்தது, 6 கச்சா எண்ணெய் உற்பத்தி தளங்களை தாக்கினர். இதற்கிடையில் இந்த வார இறுதியில் வரவிருக்கும் கூட்டத்தில் புதிய திசையை பெறலாம். இது உற்பத்தியினை அதிகரிப்பது அல்லது குறைப்பது பற்றிய முக்கிய முடிவு எடுக்கலாம்.

ஏற்றுமதியில் பாதிப்பு

ஏற்றுமதியில் பாதிப்பு

உக்ரைன் மீதான பிரச்சனைக்கு மத்தியில், ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடையை விதித்துள்ளது. இதோடு எண்ணெய் ஏற்றுமதியிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மட்டும் அல்ல ,பல நாடுகளும் ரஷ்யாவின் மீது பல்வேறு தடைகளை விதித்துள்ளன. இதுவும் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவில் இருந்து வரத்து சரிவு

ரஷ்யாவில் இருந்து வரத்து சரிவு

சில மதிப்பீடுகளின் படி, ஒரு நாளைக்கு 1 மில்லியன் முதல் 3 மில்லியன் எண்ணெய் பேரல்கள் ரஷ்யாவில் இருந்து சந்தைக்கு வராது. 2021ம் ஆண்டில் ஒரு நாளைக்கு 4.7 மில்லியன் பேரல்கள் எண்ணெய்-யினை அனுப்பியது. இது சவுதி அரேபியாவுக்கு அடுத்தப்படியாக இரண்டாவது பெரிய ஏற்றுமதியாளராக மாறியது. ஓபெக் நாடுகள் இதுவரையில் உற்பத்தியினை அதிகரிக்க கூறினாலும் நிராகரித்து வந்தது.

அவசரகால இருப்புகளில் இருந்து விடுவிக்கலாம்

அவசரகால இருப்புகளில் இருந்து விடுவிக்கலாம்

கொரோனா காலத்தில் ஏற்பட்ட இழப்பீட்டினை ஈடுகட்ட, ஆகஸ்ட் முதல் ஓபெக் நாடுகள் மாதத்திற்கு 4,00,000 லட்சம் பேரல்களை உற்பத்தியினை அதிகரித்துள்ளது. இதற்கிடையில் அமெரிக்காவும், அதன் நட்பு நாடுகளும் அவசரகால இருப்புகளில் இருந்து, கச்சா எண்ணெயை விடுவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை சரியலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேட்டோ உச்சி மாநாட்டில் ஆலோசனை

நேட்டோ உச்சி மாநாட்டில் ஆலோசனை

நேட்டோ உச்சி மாநாட்டின்போது ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுடன் இது குறித்து, அமெரிக்கா விவாதிக்க உள்ளதாகவும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சுல்லிவான் தெரிவித்தார்.

அமெரிக்கா கச்சா எண்ணெய் இருப்பில் மார்ச் 18 நிலவரப்படி, அதன் பருவகால 5 ஆண்டு சராசரியை விட -12.3% குறைவாகத் தான் இருந்தது. இதே பெட்ரோல் இருப்பு -0.9%ம் குறைவாகவும், இதே சுத்திகரிக்கப்பட்ட வடிகட்டிகள் -17.7%மும் உள்ளன.

 

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

கச்சா எண்ணெய் விலை அழுத்தத்தில் இருக்கலாம் என்ற நிலையில் உடனடி ரெசிஸ்டன்ஸ் லெவல் ஆக 119 - 142.10 டாலர்களாகவும், உடனடி சப்போர்ட் ஆக 106.4 - 98 டாலர்களாகவும் இருக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Crude oil prices may slump as china shuts to curb coronavirus surge

Crude oil prices may slump as china shuts to curb coronavirus surge/சீனா லாக்டவுன் எதிரொலி.. கச்சா எண்ணெய் விலை மேலும் சரிவடையலாம்..!
Story first published: Monday, March 28, 2022, 19:08 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X