இது சூப்பர் நியூஸ்.. கச்சா எண்ணெய் விலை குறையலாம்.. நிபுணர்களின் செம கணிப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உக்ரைன் - ரஷ்யா இடையேயான பிரச்சனையானது இன்றளவிலும் தொடர்ந்து கொண்டே உள்ள நிலையில், தொடர்ந்து சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையானது என்னவாகுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

 

தொடர்ந்து எரிபொருட்கள் விலையானது அதிகரித்து வரும் நிலையில், இது குறையவே குறையாதா? நிபுணர்களின் கணிப்பு என்ன வாருங்கள் பார்க்கலாம்.

இது குறித்து அபான்ஸ் குழுமத்தின் EVP மற்றும் கேப்பிட்டல் & கமாடிட்டி நிறுவனத்தின் தலைவர் மகேஷ் குமாரிடம் பேசினோம்.

கச்சா எண்ணெய் விலை பெரும் சுமை.. ஜிடிபி 7.2% ஆக சரியும்.. ஆர்பிஐ சக்திகாந்த தாஸ் அறிவிப்பு..!

 கச்சா எண்ணெய் விலை குறையலாம்

கச்சா எண்ணெய் விலை குறையலாம்

WTI கச்சா எண்ணெய் விலையானது பேரலுக்கு 96 டாலர்களுக்கு அருகில் வர்த்தகமாகி வருகின்றது. இதன் சமீபத்திய உச்சம் 130.50 டாலர்களாகும். இது கடந்த மார்ச் 7, 2022 அன்று தொட்டது. இது முந்தைய மாதத்தில் பேரலுக்கு 93.53 டாலர்களை தொட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் அழுத்தத்தில் காணப்படுகின்றது. இது இன்னும் அழுத்தம் காணும் விதமாகவே காணப்படுகின்றது.

IEA-வின் திட்டம்

IEA-வின் திட்டம்

சர்வதேச எரிசக்தி அமைப்பு (International Energy Agency ), 240 மில்லியன் பேரல்கள் எண்ணெயினை, அடுத்த ஆறு மாதங்களுக்குள் வெளியிட திட்டமிட்டுள்ளது. இது கச்சா எண்ணெய் விலையில் மேலும் அழுத்தத்தினை கொடுக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் 1 முதல் IEA நாடுகள் கூட்டாக இணைந்து 120 மில்லியன் பேரல்களை வெளியிடவும் திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

சீனாவின் லாக்டவுன்
 

சீனாவின் லாக்டவுன்

தற்போது சீனாவில் கொரோனாவின் தாக்கமானது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சீனாவின் பல முக்கிய நகரங்களில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு போக்குவரத்து முடங்கியுள்ளது. பல மில்லியன் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். பல நிறுவனங்கள் தங்களது உற்பத்தியினை நிறுத்தியுள்ளன. குறிப்பாக சீனாவின் ஜீரோ கோவிட் கொள்கையால் தேவை கணிசமாக குறையலாம் என்ற பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.

சீனாவின் நுகர்வு குறையலாம்

சீனாவின் நுகர்வு குறையலாம்

ஆக சீனாவின் நுகர்வானது ஒரு நாளைக்கு 2 லட்சம் பேரல்கள் குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கச்சா எண்ணெய் இருப்பும் விலைக்கு சற்று எதிர்மாறாக உள்ளது. இது எதிர்பாராதவிதமாக - 2.42 மில்லியன் bbl என்ற விகிதத்தில் இருந்து, +2.42 மில்லியன் bbl என்ற விகிதத்தில் உள்ளது. ஏப்ரல் 1 நிலவரப்படி அமெரிக்க கச்சா எண்ணெய் இருப்புகள் 5 ஆண்டுகால சராசரியை விட -13.4% குறைவாகவும், பெட்ரோல் இருப்பு 5 ஆண்டு சராசரியை விட -0.7% குறைவாகவும், சுத்திகரிக்கப்பட்ட சரக்குகள் 5 ஆண்டு சராசரியை விட -15.5% குறைவாகவும் உள்ளன.

 உற்பத்தி அதிகரிப்பு

உற்பத்தி அதிகரிப்பு

எனினும் ஏப்ரல் 1வுடன் முடிவடைந்த வாரத்தில் அமெரிக்காவின் கச்சா எண்ணெய் உற்பத்தியானது +0.9% அதிகரித்து, 11.8 மில்லியன் bbd ஆக அதிகரித்துள்ளது. இது மேலும் எண்ணெய் விலையினை கட்டுப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து 3வது வாரமாக அமெரிக்காவின் எரிசக்தி நிறுவனங்கள் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவினை சேர்த்ததால், அமெரிக்காவில். தொடர்ந்து உற்பத்தி அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் அமெரிக்காவில் 16 1/2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அமெரிக்காவின் எண்ணெய் சுரங்கங்களின் எண்ணிக்கையானது அதிகரித்துள்ளது.

முக்கிய லெவல்கள்

முக்கிய லெவல்கள்

இது உக்ரைன் - ரஷ்யா இடையேயான பதற்றத்தின் மத்தியில், அமெரிக்கா அதன் நட்பு நாடுகளுக்கு உதவுவதற்காக உற்பத்தியினை அதிகரிக்க தொடங்கியுள்ளது. தேவை குறைந்து வரும் இந்த நிலையில் விலையானது சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 98.92 - 99.5 என்ற ரெசிஸ்டன்ஸ் லெவலையும், இதே சப்போர்ட் லெவலாக 95.5 - 94 டாலர்கள் என்ற லெவலையும் மதிப்பிட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

crude oil prices may under pressure amid demand concern

crude oil prices may under pressure amid demand concern/கச்சா எண்ணெய் விலை குறையலாம்.. நிபுணர்களின் சூப்பர் கணிப்பு..!
Story first published: Tuesday, April 12, 2022, 8:35 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X