கிரிப்டோகரன்சிகள் மதிப்பானது சமீபத்திய காலமாக தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றன. கடந்த ஆண்டில் வரலாற்று உச்சத்தினை தொட்ட கிரிப்டோகரன்சிகள், நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகின்றன.
குறிப்பாக முதலீட்டாளர்களின் பிரியமான முதலீடாக இருந்து வந்த, பிட்காயின் மதிப்பானது எந்தளவுக்கு கடந்த ஆண்டில் ஏற்றம் கண்டதோ அந்தளவுக்கு நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து வீழ்ச்சி கண்டு வருகின்றது.
பிட்காயின் மட்டும் அல்ல, நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பல கரன்சிகளும் தொடர்ந்து சரிவினையே கண்டு வருகின்றன.

செல்லிங் பிரஷரில் கரன்சிகள்
சர்வதேச அளவில் வெளியேறி வரும் முதலீடுகளுக்கு மத்தியில் கிரிப்டோகரன்சிகள் சரிவில் காணப்படுகின்றன. எனினும் சந்தை மதிப்பில் முதன்மை கரன்சியாக இருந்து வரும் பிட்காயின் மதிப்பானது,தற்போது 0.65% அதிகரித்து, 35,227.03 டாலராக காணப்படுகின்றது.
கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 36,141.50 டாலர்களாகும். இதே இதன் குறைந்தபட்ச விலை 34,295.65 டாலர்களாகும். நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 23.60% சரிவில் தான் காணப்படுகிறது.

எத்திரியம் மதிப்பு
எத்தரியத்தின் மதிப்பானது தற்போது 1.29% அதிகரித்து, 2,432.55 டாலர்களாக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 2,549.26 டாலர்களாகும். இதே குறைந்தபட்ச விலை 2320.76 டாலர்களாகும். நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 33.84% வீழ்ச்சி கண்டுள்ளது.

கார்டானோ நிலவரம்
கார்டானோ மதிப்பானது 0.82% அதிகரித்து, 1.09 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 1.17 டாலராகவும், இதே குறைந்தபட்ச மதிப்பு என்பது 1.02 டாலராகும். இது நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 16.21% சரிவினைக் கண்டுள்ளது. இதன் புதிய வரலாற்று உச்சம் 3.10 டாலர்களாகும்.

எக்ஸ்ஆர்பி நிலவரம்
எக்ஸ்ஆர்பி-யின் மதிப்பானது 0.21% குறைந்து, 0.739457 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 0.776டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 0.72 டாலராகும். இதன் வரலாற்று உச்ச விலை 3.40 டாலராகும். இது நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து உச்ச விலை 1.96 டாலராகும். இது நடப்பு ஆண்டில் 10.25% குறைந்துள்ளது.

லைட்காயின் தற்போதைய நிலவரம்
லைட்காயின் மதிப்பானது 0.91% அதிகரித்து, 106.43 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 111.69 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 104.32 டாலராகும். இது நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 26.70% சரிவைக் கண்டுள்ளது.

யுனிஸ்வாப் மதிப்பு
யுனிஸ்வாப் மதிப்பானது 12.68% குறைந்து, 11.05 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 12.66 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 10.38 டாலராகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 35.13% சரிவில் தான் உள்ளது.

போல்கடோட் நிலவரம் என்ன?
போல்கடோட் மதிப்பானது தற்போது 8.36% குறைந்து, 18.16 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 19.88 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 16.20 டாலராகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 31.97% சரிவில் தான் உள்ளது.