புதியதாக கிரிப்டோகரன்சிகளில் முதலீடு செய்ய வேண்டுமா.. இதனை கவனித்து பிறகு முதலீடு செய்யுங்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கிரிப்டோகரன்சி என்பது நாணயம் போலவோ அல்லது ரூபாய் தாள்களை போலவோ அல்லாது டிஜிட்டல் நாணயங்களாகும்.
இந்த நாணயங்கள் எந்த நாட்டு அரசாலும் அல்லது ஒழுங்குமுறை அமைப்பாலும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மாறாக தனி நபர்கள் மூலமாக வெளியிடப்படக்கூடிய விஷயம்.
இதனால் இதில் ஆன்லைன் மோசடிகளும் உள்ளிட்டவற்றை பற்றிய அச்சமும் பலவாறு இருந்து வருகிறது.

 

டிஜிட்டல் கரன்சி

டிஜிட்டல் கரன்சி

முன்னதாக கிரிப்டோகரன்சிகளுக்கு அதிகாரப்பூர்வமாக அனுமதி கொடுக்கப்படாத நிலையில், தற்போது அனுமதி கொடுத்துள்ளது. எனினும் தற்போது சர்வதேச அளவில் கிரிப்டோகரன்சிகளின் மீதான நம்பகத் தன்மை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. எனினும் இதனை பிசிகலான கரன்சிகளாக அல்லாமல், டிஜிட்டல் பே-யாக மட்டுமே பயன்படுத்த முடியும்.

பல கேள்விகள்

பல கேள்விகள்

எனினும் இதன் பரிவர்த்தனைகளை கண்கானிக்கவும், பாதுகாக்கவும் தற்போது சர்வதேச அளவில் கண்கானித்து வருவதாகவும் கூறப்படுகிறது. எனினும் இந்த கிரிப்டோகரன்சிகளில் அதிகளவிலான ஏற்ற இறக்கம் இருந்து வருகின்றது. இந்த நிலையில் தான் பல நாடுகள் இதனை நாணயமாக ஏற்றுக் கொள்ளலாமா? வேண்டாமா? இதற்கு வரி விதிப்பு உண்டா? இல்லையா? அப்படி இருந்தால் அதை யார் விதிப்பது என்று பல கேள்விகள் உண்டு.

பல நாடுகளும் ஏற்றுக் கொள்ளவில்லை
 

பல நாடுகளும் ஏற்றுக் கொள்ளவில்லை

இதற்கிடையில் புதிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்யலாமா? வேண்டாமா? அவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன? வாருங்கள் பார்க்கலாம். இது குறித்து நிபுணர்கள் கிரிப்டோகரன்சிகள் பாதுகாப்பற்றவை என்று தான் கூறவேண்டும். ஏனெனில் எந்த நாட்டின் அரசும் இதுவரை இதனை முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை. ஆக இது ஒரு தனிப்பட்ட நிபர்களின் ரிஸ்க் தான் என்று கூறுகின்றனர்.

முழுமையான தகவல்கள் இல்லை

முழுமையான தகவல்கள் இல்லை

ஆக அவற்றில் நீங்கள் முதலீடு செய்யும்போதும், வர்த்தகம் செய்யும்போது மிக கவனமுடன் வர்த்தகம் செய்வது நல்லது. எனினும் சில நாடுகள் தற்போது அதனை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்துள்ளன. பல நிறுவனங்கள் ஏற்றுக் கொண்டுள்ளன. எனினும் இது குறித்து தகவல்கள் முழுமையாக இல்லை.

சிறந்த உதாரணம்

சிறந்த உதாரணம்

உதாரணத்திற்கு ஒரு நிறுவனத்தினை மும்பை பங்கு சந்தையில் வாங்க வேண்டும் எனில், அதனை பற்றி முழுமையாக தெரிந்த பின்னரே முதலீடு செய்கிறோம். அப்படி இருக்கையில் எதுவுமே தெரியாத கரன்சியில் முதலீடு செய்வது என்பது கண்ணை மூடிக் கொண்டு, கிணற்றில் குதிப்பது போன்று தான். இங்கு நல்ல நீச்சல் தெரிந்தவர் மட்டுமே மீண்டு வர முடியும்.

கட்டுப்பாட்டு அமைப்புகள் இல்லை

கட்டுப்பாட்டு அமைப்புகள் இல்லை

ஆனால் அது போன்று கிரிப்டோகரன்சிகளுக்கு என்று தனியாக கட்டுப்பாட்டு அமைப்புகள் இதுவரை இல்லை. இதனால் அரசு இதில் முழுமையாக தலையிட முடியாது. ஆக அரசு ஒரு எச்சரிக்கை விடுக்க முடியும். அதனை ஏற்கனவே இந்திய ரிசர்வ் வங்கி செய்தது. எனினும் உச்ச நீதிமன்றம் இது அனுமதி கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மிக மிக கவனம்

மிக மிக கவனம்

எனினும் சாமனிய மக்கள் முதலீடு என்பது 100% வேண்டாம் என்பதே நிபுணர்களின் கருத்தாக உள்ளது. மாறாக இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட முதலீடாக எடுத்துக் கொள்ளலாம். அப்படியே முதலீடு செய்தே ஆக வேண்டும் என்று நினைப்பவர்கள் மிகக் குறைவாக செய்யலாம். மேலும் வர்த்தகம் செய்யும் போது மிக மிக கவனமுடன் வர்த்தகம் செய்வது நல்லது.

பெரிய ரிஸ்க் வேண்டாம்

பெரிய ரிஸ்க் வேண்டாம்

பிட்காயின் கரன்சி என்பது பல மடங்கு ஏற்றம் கண்டுள்ளது. ஏனினும் பல மடங்கு வேகத்தில் ஏற்றம் காணலாம். ஏறிய வேகத்தில் இறங்கலாம். எல்லாவற்றுக்கும் மேலாக தற்போது பல நாடுகளும் ஏற்றுக் கொண்டு வரும் நிலையில், விரைவில் இதற்கான கண்கானிப்பு அமைப்புகள் உருவாக்கப்படலாம் என்ற நிலை இருந்து வருகின்றது. மொத்தத்தில் சிறு முதலீட்டாளார்கள் சற்று ஒதுங்கியிருப்பது நிபுணர்கள் கண்ணோட்டத்தில் நல்ல விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

பிட்காயின் நிலவரம்

பிட்காயின் நிலவரம்

தற்போது பிட்காயின் மதிப்பானது 0.25% அதிகரித்து, 31,725.48 டாலர்களாக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 32,433.23 டாலர்களாகும். இதே குறைந்தபட்ச விலை 31,476.96 டாலர்களாகும். நடப்பு நிதியாண்டின் தொடக்கத்தில் இருந்து 9.10% ஏற்றத்தில் தான் காணப்படுகிறது.

எத்திரியம் மதிப்பு

எத்திரியம் மதிப்பு

இதே போன்று எத்தரியத்தின் மதிப்பானது 3.33% அதிகரித்து, 1949.15 டாலர்களாக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 1,993.33 டாலர்களாகும். இதே குறைந்தபட்ச விலை 1,873.77 டாலர்களாகும். நடப்பு நிதியாண்டின் தொடக்கத்தில் இருந்து 164.03% ஏற்றத்தில் தான் காணப்படுகிறது.

கார்டானோ நிலவரம்

கார்டானோ நிலவரம்

கார்டானோ மதிப்பானது 1.90% அதிகரித்து, 1.19 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 1.22 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 1.16 டாலராகும். இது நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 561.63% ஏற்றம் கண்டுள்ளது. இதன் வரலாற்று உச்சம் 2.47 டாலர்களாகும்.

எக்ஸ்ஆர்பி நிலவரம்

எக்ஸ்ஆர்பி நிலவரம்

எக்ஸ்ஆர்பி-யின் மதிப்பானது 0.76% அதிகரித்து, 0.585881 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 0. 601439 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 0.579271 டாலராகும். இதன் வரலாற்று உச்ச விலை 3.40 டாலராகும். இது நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 164.76% ஏற்றம் கண்டுள்ளது.

டோஜ்காயின் தற்போதைய நிலவரம்

டோஜ்காயின் தற்போதைய நிலவரம்

டோஜ்காயின் மதிப்பானது 9.06% அதிகரித்து, 0.188651 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 0.207317 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 0.171593 டாலராகும். இது நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 3,893.12% ஏற்றம் கண்டுள்ளது.

யுனிஸ்வாப் மதிப்பு

யுனிஸ்வாப் மதிப்பு

யுனிஸ்வாப் மதிப்பானது 1.77% அதிகரித்து, 16.57 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 17.17 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 15.95 டாலராகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 303.90% லாபத்தில் தான் உள்ளது.

போல்கடோட் நிலவரம் என்ன?

போல்கடோட் நிலவரம் என்ன?

போல்கடோட் மதிப்பானது தற்போது 4.15% அதிகரித்து, 12.62 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 12.94 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 12.03 டாலராகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 74.64% லாபத்தில் தான் உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Cryptocurrency prices on July 18: Are you willing to invest in cryptos? Beginners watch to these things

cryptocurrency latest updates.. Cryptocurrency prices on July 18: Are you willing to invest in cryptos? Beginners watch to these things
Story first published: Sunday, July 18, 2021, 20:00 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X