ஒரு போதும் எங்களால் அதனை செய்ய முடியாது.. பிட்காயின் வேண்டாம்.. அமேசான் திட்டவட்டம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கிரிப்டோகரன்சி சந்தையானது அதிக ஏற்ற இறக்கத்தில் இருப்பதனால், பெரும் முதலீட்டாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

 

உலகம் முழுவதும் பல நிறுவனங்களும், தனி நபர்களும் கிரிப்டோகரன்சிகளை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்துள்ளனர். பல பெரும் நிறுவனங்கள் கூட முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளன.

குறிப்பாக அமெரிக்க நிறுவனங்கள் இதனை பெரியளவில் ஏற்றுக் கொண்டுள்ளன.

சாதாரண ஊழியரை விட 100 மடங்கு அதிக சம்பளம்.. வாழ்வு தான்..!

அமேசானுக்கு அப்படி ஒரு எண்ணமே இல்லை

அமேசானுக்கு அப்படி ஒரு எண்ணமே இல்லை

இதற்கிடையில் உலகின் மிகப்பெரிய இ-காமர்ஸ் தளமான அமேசான் நிறுவனம், அதன் பேமெண்டாக பிட்காயினை ஏற்றுக் கொள்ளாது என அறிவித்துள்ளது. பிட்காயினை தங்களது பேமெண்டாக இந்த ஆண்டின் இறுதிக்குள் ஏற்றுக் கொள்ளலாம் என்ற தகவல்கள் வெளியாகின. ஆனால் அதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக அமேசான் இப்படி ஒரு அதிரடியான அறிவிப்பினை கொடுத்துள்ளது. இது குறித்து லண்டன் நகரத்தின் செய்தித் தாள் ஒன்று வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

யூகங்கள் தவறானவை

யூகங்கள் தவறானவை

இது குறித்து நிராகரித்துள்ள அமேசான், அமேசானில் ஷாப்பிங் செய்யும் வாடிக்கையாளார்களுக்கு இது எப்படி இருக்கும் என்பதை பற்றி ஆராய்வதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். எங்களை சுற்றியுள்ள கிரிப்டோகரன்சிகள் குறித்த யூகங்கள் தவறானவை என அமேசானின் செய்தத் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

பிட்காயின் நிலவரம்
 

பிட்காயின் நிலவரம்

இதற்கிடையில் தற்போது பிட்காயின் மதிப்பானது 1.18% குறைந்து, 37,939.58 டாலர்களாக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 40,539.39 டாலர்களாகும். இதே குறைந்தபட்ச விலை 36,419.39 டாலர்களாகும். நடப்பு நிதியாண்டின் தொடக்கத்தில் இருந்து 29.33% ஏற்றத்தில் தான் காணப்படுகிறது.

எத்திரியம் மதிப்பு

எத்திரியம் மதிப்பு

இதே போன்று எத்தரியத்தின் மதிப்பானது 2.56% குறைந்து, 2,275.91 டாலர்களாக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 2,431.12 டாலர்களாகும். இதே குறைந்தபட்ச விலை 2,153.32 டாலர்களாகும். நடப்பு நிதியாண்டின் தொடக்கத்தில் இருந்து 205.23% ஏற்றத்தில் தான் காணப்படுகிறது.

கார்டானோ நிலவரம்

கார்டானோ நிலவரம்

கார்டானோ மதிப்பானது 3.39% குறைந்து, 1.29 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 1.37 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 1.21 டாலராகும். இது நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 617.46% ஏற்றம் கண்டுள்ளது. இதன் வரலாற்று உச்சம் 2.47 டாலர்களாகும்.

எக்ஸ்ஆர்பி நிலவரம்

எக்ஸ்ஆர்பி நிலவரம்

எக்ஸ்ஆர்பி-யின் மதிப்பானது 3.06% குறைந்து 0.638531 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 0.678907 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 0.612697 டாலராகும். இதன் வரலாற்று உச்ச விலை 3.40 டாலராகும். இது நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 182.22% ஏற்றம் கண்டுள்ளது.

டோஜ்காயின் தற்போதைய நிலவரம்

டோஜ்காயின் தற்போதைய நிலவரம்

டோஜ்காயின் மதிப்பானது 7.57% குறைந்து, 0.204366 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 0.228182 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 0.195204 டாலராகும். இது நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 4,210% ஏற்றம் கண்டுள்ளது.

யுனிஸ்வாப் மதிப்பு

யுனிஸ்வாப் மதிப்பு

யுனிஸ்வாப் மதிப்பானது 4.37% குறைந்து, 18.88 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 20.23 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 17.72 டாலராகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 354.67% லாபத்தில் தான் உள்ளது.

போல்கடோட் நிலவரம் என்ன?

போல்கடோட் நிலவரம் என்ன?

போல்கடோட் மதிப்பானது தற்போது 4.44% குறைந்து, 14.13 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 15.30 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 13.38 டாலராகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 94.98% லாபத்தில் தான் உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Cryptocurrency prices on July 27, 2021: Amazon says no idea to accept bitcoin payment

E-commerce giant Amazon denies report of accepting bitcoin as payment by end of the year
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X