டி-மார்டின் ராதாகிஷன் தமனி தான் இந்தியாவின் ஐந்தாவது பணக்காரர்.. எப்படி தெரியுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் சூப்பர் மார்கெட் நிறுவனமான டி-மார்ட் நிறுவனம் பிக் பஜார், வால்மார்ட் உள்ளிட்ட பல சூப்பர் மார்கெட்டுகளுக்கு பலமான போட்டியாளராக இருந்து வருகிறது.

இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் பங்கு விலையை தொடர்ந்து, இந்தியாவின் ஐந்தாவது பணக்காரர் என டி - மார்ட் நிறுவனத்தின் தலைவரான ராதாகிஷன் தமனி என்றும் ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.

குறிப்பாக சொல்ல வேண்டுமானால் பிப்ரவரி 14 அன்று தமனியின் மொத்த நிகர மதிப்பு 13.30 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்தடுத்த இடங்களில் யார்?

அடுத்தடுத்த இடங்களில் யார்?

இதுவே இரும்பு சாம்ராஜியத்தின் தலைவரான லட்சுமி மிட்டலின் மதிப்பு 13.10 பில்லியன் டாலராகவும், இதுவே கவுதம் அதானியின் மதிப்பு 10.9 பில்லியன் டாலர், சுனில் மிட்டல் 9.62 பில்லின் டாலர் மதிப்புடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பங்கு விற்பனை

பங்கு விற்பனை

கடந்த பிப்ரவரி 5ம் தேதி நிறுவன முதலீட்டாளர்களுக்கு பங்கு விற்பனையை இந்த நிறுவனம் அறிவித்ததையடுத்து, பிப்ரவரி 13 அன்று டி-மார்ட்டின் பங்கு விலையானது 2,559 ரூபாய் என புதிய ஆல் டைம் உச்சத்தை தொட்டது. இந்த நிறுவனத்தின் புரோமோட்டர்களான ராதாகிஷன் தமனி, கோபிகிஷன் எஸ் தமனி, ஸ்ரீ காந்தாதேவி ஆர் தமனி மற்றும் கிராண்டேவி ஜி தமனி ஆகியோரும் சேர்ந்து, மொத்தம் 1.48 கோடி பங்குகளை விற்பனை மூலம் ஏற்றுவார்கள் என்று பிஎஸ்இக்கு அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஏலத்தில் வாங்கலாம்

ஏலத்தில் வாங்கலாம்

இந்த நிலையில் சில்லறை அல்லாத முதலீட்டாளர்களுக்கு பிப்ரவரி 14 அன்று Offer for sale திறக்கப்படவுள்ளது. இதே சில்லறை முதலீட்டாளர்கள் பிப்ரவரி 17 அன்று வாடிக்கையாளர்கள் ஏலத்தில் வாங்கலாம் என்றும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நிறுவனம் கடந்த மார்ச் 21, 2017 அன்று 39,988 கோடி ரூபாய் சந்தை மூலதனத்தில் பங்கு சந்தையில் பட்டியிலிடப்பட்டது. ஆனால் இது தற்போது 1.60 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் அதிகரித்துள்ளது.

இடைவிடாத முயற்சி

இடைவிடாத முயற்சி

அவென்யூ சூப்பர்மார்ட்ஸில் இந்தியாவில் மிகவும் இலாபகரமான மளிகை விற்பனையாளராக உள்ளது. அதன் 196 கடைகள் மூலம் குறைந்த விலையில் வாடிக்கையாளர்களுக்கு சலுகையை வழங்குவதில் அதன் இடைவிடாத கவனம், தொழில் துறையில் முன்னணி விற்பனையாளராக இருக்க உதவியதாகவும், இது விற்பனையை அதிகரிக்க 25% அதிகரிக்க உதவியதாகவும் கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

D-mart’s Radhakishan damani now india’s 5th richest person

D-mart founder Rathakisan Damani has became the fifth richest individual in India amid ongoing stock price of D-mart’s promoter firm.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X