எச்சரிக்கையா இருங்க.. தவறான விளம்பரம் கொடுத்தா.. 5 வருடம் சிறை.. ரூ.50 லட்சம் அபராதம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அழகு சாதன பொருட்கள் குறித்த விளம்பரங்கள் உண்மைக்கு புறம்பாக விளம்பரப்படுத்தினால் 5 ஆண்டுகள் சிறை மற்றும் 50 லட்சம் ரூபாய் அபராதம் விதிப்பதற்கு புதிய சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வரவுள்ளதாக கடந்த வாரத்தில் செய்திகள் வெளியானது.

எங்களுடைய கிரீமை தொடர்ந்து பயன்படுத்தினால் இரண்டு வாரத்தில் முகம் பொலிவு பெறும். இந்த மாத்திரையை தொடர்ந்து உட்கொண்டால் உடனே அஜீரணம் சரியாகும்.

இதுபோன்ற பல விளம்பரங்களை நாம் அனுதினமும் பார்க்க முடிகிறது. ஆனால் உண்மையில் இந்த விளம்பரங்கள் சொல்வது நடக்குமா? என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுவது உண்டு. ஆனால் பொருட்களை மக்கள் வாங்க நிறுவனங்கள் செய்யும் கவர்ச்சிகரமான வேலை தான் என்பது இங்கு எத்தனை பேருக்கு தெரியும்.

 இதெல்லாம் உண்மையா?
 

இதெல்லாம் உண்மையா?

இந்த எண்ணையை பயன்படுத்தினால் தலைமுடி உதிராது, நரைமுடி கூட கருப்பாகும். உங்கள் குழந்தை வேகமாக வளர வேண்டுமா? இதை கொடுங்க என இதுபோன்ற பல விளம்பரங்களை நாம் கடந்து செல்லாத நாட்களே இல்லை. ஏன் அதை ஒளிப்பரப்பாத சேனல்களும் இல்லை என்றே கூறலாம். இதனை பார்க்கும் போதெல்லாம், இந்த விளம்பரங்களில் சொல்லப்படுவது உண்மையா? இல்லை நிறுவனங்கள் தங்கள் பொருட்களை விற்பனை செய்ய மேற்கொள்ளும் விளம்பர யுக்தியா? என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழாமல் இல்லை.

 விளம்பரங்களின் சக்தி இது தான்

விளம்பரங்களின் சக்தி இது தான்

ஆனால் கடைக்கு செல்லும் போது நாம் நம்மையும் அறியாமல் அந்த பொருட்களை வாங்கிவிடுவோம். அதுதான் அந்த விளம்பரங்களின் சக்தியே. பார்பவர்களை கவரும் வண்ணம் இருக்கும். ஆக இதுபோன்ற மருந்துகள் மற்றும் அழகுசாதன பொருட்கள் விளம்பரங்களை கட்டுப்படுத்த, கடந்த 1954ம் ஆண்டே ஏற்றப்பட்ட சட்டம் தான் மருந்து விளம்பரங்கள் கட்டுப்பாட்டு சட்டம்.

 காலத்துக்கு ஏற்ப விளம்பர சட்டம்

காலத்துக்கு ஏற்ப விளம்பர சட்டம்

இந்த நிலையில் தற்போதைய காலகட்டத்தில் இது போன்ற எண்ணற்ற விளம்பரங்கள் வெளிவந்து கொண்டு தான் இருக்கின்றன. ஆக இதனை காலத்திற்கேற்ப இந்த சட்டத்தில் திருத்தும் மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது நடைமுறையில் இருக்கும் சட்டத்தின் படி முதல் முறை குற்றத்திற்கு அபராதம் ஏதுமின்றி 6 மாதங்கள் சிறை தண்டனை மட்டும் விதிக்கப்படுகிறது.

 முதல் முறை தவறுக்கு இது தான் தண்டனை
 

முதல் முறை தவறுக்கு இது தான் தண்டனை

எனினும் கடுமையான சட்டங்கள் இல்லாததால், நாளுக்கு நாள் அதிகளவில் போலி விளம்பரங்கள் அதிகரித்து வருவதாக சொல்லப்படுகிறது. இதனை கட்டுப்படுத்தவே புதிய விதிமுறைகளை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த புதிய சட்டத்திருத்த வரைவுப்படி முதல்முறை வழக்குப்பதிவு செய்யப்பட்டால் 10 லட்சம் ரூபாய் அபராதம் மற்றும் 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

 எதற்கெல்லாம் இந்த சட்டம் பொருந்தும்?

எதற்கெல்லாம் இந்த சட்டம் பொருந்தும்?

இதே ஒன்றுக்கு மேற்பட்டு அதே குற்றம் என்றால், அவர்களுக்கு அபராத தொகை 50 லட்சமாகவும், சிறை தண்டனை 5 ஆண்டாகவும் அதிகரிக்கும் வகையில் திருத்தம் மேற்கொள்ளப்பட இருக்கிறது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் பரிந்துரை செய்யப்பட்டுள்ள இந்த சட்டத்திருத்த மசோதாவில், அதிசயம், அற்புதம் என ஒளி வடிவிலோ, வீடியோவாகவோ அல்லது அட்டைப்படம், சுவரொட்டி, துண்டு பிரசுரம் என எந்த வகையிலும் சட்டத்திற்கு புறம்பாக இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 இதெல்லாம் விளம்பரங்களில் கூடாதாம்

இதெல்லாம் விளம்பரங்களில் கூடாதாம்

நிறங்களை மாற்றுவதாக கூறுவது, குட்டையாக இருப்பவர்களை வளர வைக்க முடியும், சர்க்கரை நோய், செவிட்டுத் தன்மை, கண் பார்வை குறைபாடுகள், இளமையாக இருக்க உதவும் பொருட்கள் என விளம்பரம் செய்வது, மூளைத் திறன் & நினைவாற்றலை மேம்படுத்துவதாகச் சொல்வது உள்ளிட்ட 78 வகை நோய்கள் மற்றும் குறைபாடுகளுக்கு தீர்வு தருகிறேன் என்கிற பெயரில் விளம்பரங்களைச் செய்யக் கூடாதாம்.

 மோசமான காலாமா?

மோசமான காலாமா?

இதன்முலம் வரும் காலத்தில் விளம்பரத்திற்காக கற்பனைக்கு மிஞ்சிய செய்திகளை சொல்லாமல் உண்மையை உரக்க சொல்லி பொருட்கள் விற்கப்படும் என நம்பலாம். எனினும் இந்த சட்ட திருத்த மசோதாவல் அழகு சார்ந்த க்ரீம்கள், அழகு பொருட்கள் விளம்பரங்கள் ஒரு மோசமான காலத்தை சந்திக்க போகின்றனகவா? அதை பற்றித் தான் இக்கட்டுரையில் பார்க்க போகிறோம்.

 பெண்கள் மத்தியில் அதிக ஆர்வம்

பெண்கள் மத்தியில் அதிக ஆர்வம்

Publicis Ambience நிறுவனத்தின் சீனியர் கிரியேட்டிவ் டைரக்டர் பிரியா குர்னானி, சிறந்த தோல் நிறமாற்றத்திற்கான விருப்பம் இன்றளவிலும் நம் நாட்டில் பெரும்பாலான மக்களிடையே உள்ளது. குறிப்பாக பெண்கள் மத்தியில் அதிகமாகவே உள்ளது. இந்த ஆர்வத்தினை தூண்டி விட்டு பல நிறுவனங்கள் இதில் லாபம் பார்க்கின்றனர். ஆக சட்டத்தினால் போலி பொருட்கள் சந்தையை விட்டு அகல வழிவகுக்கும். விளம்பரங்களிலும் உண்மையை கூற வழிவகுக்கும்.

 நம்பிக்கையை அதிகரிக்கும்

நம்பிக்கையை அதிகரிக்கும்

ஆக மத்திய அரசின் இந்த சட்ட திருத்தம் ஒரு நல்ல விஷயம் தான். இது மக்கள் பொருட்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை அதிகரிக்கும். இதனால் தூய பொருட்கள் சந்தைக்கு வருவதற்கு இது வழிவகுக்கும். மேலும் தங்களது விளம்பரங்களில் தவறானவற்றை அகற்றவும் இது வழிவகுக்கும். மேலும் மக்களை ஈர்க்கும் வகையில் எதுவும் பேச இயலாது. உண்மையை விளம்பரபடுத்த இது வழிவகுக்கும்.

 வருவாய் குறையுமோ

வருவாய் குறையுமோ

இந்தியாவின் ஃபேர்னெஸ் கீரிம் & ப்ளீச் சந்தை பற்றியை அறிக்கையில், கடந்த 2018 - 2023ம் ஆண்டிற்குள் பெண்கள் நியாமான கீரிம் வகைகள் 5,000 கோடி ரூபாய்க்கு மேல் சந்தை வருவாயை ஈட்டும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தவறான பிராண்டுகளை ஒழிக்கவும், நியாமான பிராண்டுகளை வரைமுறைபடுத்தவும், சிறந்த உதாரணங்களை கொண்டு விளம்பரங்களில் காட்சிப்படுத்த இது வழிவகுக்கும் என்றும் FSSAI தெரிவித்துள்ளது.

 மேஜிக் வார்த்தைகள் குறையும்

மேஜிக் வார்த்தைகள் குறையும்

தற்போது தொலைக் காட்சிகளில் ஒளிப்பரப்படும் சேனல்களில் பெரும்பாலான விளம்பரங்கள் இது போன்ற அழகு க்ரீம் பொருட்களாகவும், மேஜிக் வார்த்தைகளை பயன்படுத்துபவையாகவும் உள்ளது. அதிலும் உங்கள் உடல் நலத்திற்காக என்ற மேஜிக் சொல்லை பயன்படுத்துகின்றனர். இனி இது போன்ற மேஜிக் சொற்களை பயன்படுத்துவதை தவிர்த்து உண்மையை கூற இது வழிவகுக்கும்.

 நல்ல சட்டம் தான்

நல்ல சட்டம் தான்

ஏற்கனவே இது போன்ற பல விளம்பரங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டிருந்தாலும், இன்று வரை இதுபோன்ற போலியான விளம்பரங்கள் குறைந்த பாடில்லை. ஆக இந்த சட்டதிருத்தம் ஒரு இருண்ட சமூகத்தில் இருந்து மக்களை வெளியே கொண்டு வரும் என்று நம்பலாம். இது ஒரு நல்ல சட்டம் தான். வரவேற்க கூடிய விஷயம் தான்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Dark days ahead for beauty fairness cream advertisement in India

Central ministry of Health and family welfare last week proposed to amend the drugs and magic remedies Act, 1954. And new rules can change the whole narrative if the proposed bill is enforced. So analysts hoping that there is light at end of this dark tunnel.
Story first published: Monday, February 17, 2020, 14:15 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more