தமிழக அரசுடன் டசால்ட் சிஸ்டம்ஸ் ஒப்பந்தம்.. டைடல் பார்க்-ல் புதிய TANCAM சென்டர்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிரான்ஸ் நாட்டின் முன்னணி மென்பொருள் சேவை நிறுவனமான டசால்ட் சிஸ்டம்ஸ் தமிழக அரசு உடன் முக்கியமான ஒப்பந்தத்தைச் செய்துள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம் சென்னையில் இருக்கும் டைடல் பார்க்-ல் தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்தி மையம் (Tamil Nadu Centre of Advance Manufacturing - TANCAM) டசால்ட் சிஸ்டம்ஸ் அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

 

இந்தப் புதிய கூட்டணி மூலம் பல முக்கியமான துறையில் அதிநவீன தொழில்நுட்ப சேவையை அளிக்க முடியும். மேலும் டசால்ட் சிஸ்டம்ஸ் தனது அதிநவீன மென்பொருள் சேவையை தமிழ்நாட்டில் இருந்து ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் அளிக்க உள்ளது.

 தமிழ்நாடு அரசு மற்றும் டசால்ட் சிஸ்டம்ஸ்

தமிழ்நாடு அரசு மற்றும் டசால்ட் சிஸ்டம்ஸ்

தமிழ்நாடு அரசு மற்றும் டசால்ட் சிஸ்டம்ஸ் இணைந்து அமைக்கும் தமிழ்நாடு சென்டர் ஆப் அட்வான்ஸ் மேனுஃபேக்சரிங் போல் இதுவரை இந்தியாவில் அமைக்கப்படவில்லை. இந்த TANCAM மூலம் ஏரோஸ்பேஸ், டிபென்ஸ், ஆட்டோமோட்டிவ் மற்றும் எலக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் அதிநவீன ஐடி இன்ஜினியரிங் சேவையை அளிக்க உள்ளது.

 சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்

சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்

இந்தச் சேவைகள் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், ஸ்டார்ட்அப் மற்றும் மாணவர்களுக்கு அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதனால் டசால்ட் சிஸ்டம்ஸ் சேவைகள் பெரு நிறுவனங்களில் மட்டும் அல்லாமல் சிறிய நிறுவனங்களுக்கும் பெரிய அளவில் பயன்படும்.

 TANCAM சென்டர்
 

TANCAM சென்டர்

டைடல் பார்க்-ல் அமைக்கப்படும் TANCAM சென்டர் மூலம் டசால்ட் சிஸ்டம்ஸ் தனது இன்ஜினியரிங் டிஜிட்டல் பிளாட்பார்ம் மூலம் டிசைன், காம்போசிட்ஸ், சிமுலேஷன், டிஜிட்டல் மேனுஃபேக்சரிங் பிரிவில் 3சி பரின்டர் மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டி செட்அப் உடன் சேவை அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

 TIDCO - MSME நிறுவனங்கள்

TIDCO - MSME நிறுவனங்கள்

தமிழ்நாடு அரசு மற்றும் டசால்ட் சிஸ்டம்ஸ் கூட்டணி Tamil Nadu Industrial Development Corporation (TIDCO) வாயிலாகத் தமிழ்நாட்டில் இருக்கும் MSMEM நிறுவனங்களுக்குத் துல்லியமான உற்பத்தி பயிற்சி மற்றும் தொழில்நுட்பத்தை அளிக்கத் திட்டமிட்டு உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் இருக்கும் உற்பத்தி நிறுவனங்களின் தரம் உயர்ந்து உலக நாடுகளுக்குத் தேவையான பொருட்களைத் தயாரிக்கும் அளவிற்கு முன்னேற முடியும்.

 3DEXPERIENCE லேப்

3DEXPERIENCE லேப்

மேலும் TANCAM சென்டர் உடன் டசால்ட் சிஸ்டம்ஸ் தனது 3DEXPERIENCE லேப்-ஐ தமிழ்நாட்டில் அமைக்க உள்ளது. இதன் மூலம் அடுத்த தலைமுறை பொருட்கள் மற்றும் புதிய வர்த்தகத் திட்டங்களுக்குப் புதுமையையும், தரத்தையும் மேம்படுத்த முடியும்.

 நீண்ட காலத் திட்டம்

நீண்ட காலத் திட்டம்

இந்தக் கூட்டணி முயற்சி மூலம் உடனடியாக வர்த்தக மாற்றம் மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்க முடியாவிட்டாலும் நீண்ட கால அடிப்படையில் தமிழ்நாட்டு நிறுவனங்களின் உற்பத்தித் திறனை உலக நாடுகளுக்கு இணையாக மேம்படுத்த முடியும். இதன் மூலம் தமிழ்நாடு நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனத்தில் இருந்து உற்பத்தி வர்த்தகத்தைப் பெற முடியும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Dassault Systemes signs MoU with Tamil Nadu Government; Setting up TANCAM centre in Chennai Tidel park

Dassault Systemes signs MoU with Tamil Nadu Government; Setting up TANCAM centre in Chennai Tidel park
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X