அமெரிக்காவில் ஒரு கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் தங்களது 2022 பட்டமளிப்பு விழாவில் பட்டப்படிப்பு சான்றிதழை பெறுவதில் மகிழ்ச்சியாக இருந்த நேரத்தில், அவர்களின் மகிழ்ச்சியினை இரட்டிப்பாக்கும் விதமாக கல்லூரிக்கு செலுத்த வேண்டிய பணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸின் விலே கல்லூரியில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்களின் 3,00,000 டாலர் மதிப்புள்ள கடனை, பெயர் கூட கூற விரும்பாத ஒரு நபரால் அடைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவமானது சமூக வலைதளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகின்றது.
ஆபீஸ்-க்கு வர சொன்னது ஒரு குத்தமா.. 800 ஊழியர்கள் ராஜினாமா, ஆடிப்போன நிர்வாகம்..!

படிக்கும் காலத்திலேயே கடன்
பொதுவாக நம்மில் பலரும் இந்த பிரச்சனைகளை சந்தித்திருக்கலாம். படிக்கும் காலத்திலேயே பெரும் கடன் சுமையை எதிர்கொண்டு, படிப்பிலும் கவனம் செய்ய முடியாமலும், கடனையும் அடைக்க முடியாமலே தவித்திருக்கலாம்.. குறிப்பாக வங்கிகளில் வாங்கிய கல்விக் கடன் சரியாக கிடைக்குமா? என்ற அழுத்தம் மாணவர்கள் மத்தியில் இருக்கும்.

கடனை அடைத்த நபர்
அப்படி பொருளாதார சுமையை படிக்கும் காலத்திலேயே சந்திப்பது என்பது கொடுமையான விஷயங்கள் எனலாம். ஆனால் அமெரிக்காவின் டெக்சாஸினை சேர்ந்த விலே கல்லூரி மாணவர்களுக்கு இந்த கவலை இனி இருக்காது. காரணம் அந்த கல்லூரியில் கடைசி வருடம் படிப்பை முடித்துவிட்டு வெளியேறும் 100 க்கும் மேற்பட்ட மாணவர்களின் கல்விக் கடன்களை பெயர் கூட சொல்ல விரும்பாத நபர் ஒருவர் அடைத்துள்ளார்.

கல்வி கடன்
அமெரிக்காவின் கிழக்கு டெக்சாஸ் பகுதியில் அமைந்திருக்கும் விலே கல்லூரி, இந்த வருடம் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களுடைய கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வெளியேற இருக்கிறார்கள். இதனிடையே இந்த மாணவர்களுக்கு மொத்தமாக சுமார் 3 லட்சம் அமெரிக்க டாலர்கள், இன்றைய இந்திய மதிப்பில் 2கோடி ரூபாய்க்கு மேல் கல்விக் கடன் இருந்துள்ளது.

நீங்கள் கடன் இல்லாதவர்
இதனிடையே கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் இக்கல்லூரியின் தலைவரும், தலமை நிர்வாக அதிகாரியுமான ஜே. ஃபெல்டன் மேடையில் பேசும்போது இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். அப்போது அவர் நீங்கள் கடன் இல்லாதவர். நீங்கள் கல்லூரிக்கு ஒரு பைசா கூட கடன்பட்டிருக்கவில்லை. உங்களது கடன்கள் மொத்தமாக அடைக்கப்பட்டுவிட்டது என்று அறிவித்துள்ளார். இதனால் அங்கு கூடியிருந்த மாணவர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆராவாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ட்விட்டரில் பதிவு
இது குறித்து அந்த கல்லூரி நிர்வாகமும் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளது. அதோடு வாழ்த்துகள் 2022 பட்டதாரிகளே, நீங்கள் கடன் இல்லாதவர்க்ள். உத்வேகத்துடன் முன்னேறுங்கள் என்ற கேப்ட்சனையும் கொடுத்துள்ளது.
அமெரிக்காவில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்களின் கல்விக் கடன்களை அடைத்த ஒரு நபர், தனது பெயரைக்கூட வெளியிடாத சம்பவம் பலரையும் பிரம்மிக்க வைத்துள்ளது.