கடந்த டிசம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் 1.29 லட்சம் கோடி ரூபாயாக வசூலாகி உள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்த மத்திய நிதியமைச்சகத்தின் அறிக்கையில், கடந்த டிசம்பர் மாதத்தில் 13 சதவீதம் அதிகரித்து, 1,29,780 கோடி ரூபாய் வரி வசூலாகியுள்ளதாக அறிக்கையில் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில் சிஜிஎஸ்டி விகிதம் 22,578 கோடி ரூபாயாகவும், எஸ் ஜி எஸ் டி வரி வசூல் விகிதம் 28,658 கோடி ரூபாயாகவும் உள்ளது. இதே ஐ சி எஸ் டி விகிதம் 69,155 கோடி ரூபாய் மதிப்பிலான (பொருட்களின் இறக்குமதி வரி விகிதம் 37,527 கோடி ரூபாய் உள்பட) வசூலாகியுள்ளது.

இதில் செஸ் வரி விகிதம் 9,389 கோடி ரூபாயாக (பொருட்களின் இறக்குமதி வரி 614 கோடி ரூபாய் உட்பட அடங்கும்)
இதில் கடந்த நவம்பர் மாத வசூலானது 1.31 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் டிசம்பர் 2020ம் ஆண்டுக்கான வசூலான 1.15 லட்சம் கோடி ரூபாயுடன் ஒப்பிடும்போது, நடப்பு ஆண்டில் 13% அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. இதே கடந்த 2019ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 26 சதவீதம் அதிகரித்துள்ளது.
தற்போது ஓமிக்ரான் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பொருளாதாரம் என்னவாகுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இதற்கிடையில் வரவிருக்கும் மாதத்தில் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள் எழுந்துள்ளன. இதன் காரணமாக வரவிருக்கும் மாதங்களில் இந்த அளவுக்கு வசூல் இருக்குமா? என்ற அச்சம் நிலவி வருகின்றது.
1,300% ஏற்றத்தில் 3 கிரிப்டோகரன்சிகள்.. பிட்காயின், எதரை விடுங்க..இது வேற லெவல்!
தொடர்ந்து 6வது மாதமாக டிசம்பரிலும் 1 லட்சம் கோடி ரூபாயினை கடந்துள்ளது. இது இனி வரும் மாதங்களிலும் தொடருமா? என தெரியவில்லை. எனினும் தொடர்ந்து 6வது மாதமாக அரசுக்கு 1 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைத்துள்ளது.