இந்தியாவில் எலக்ட்ரிக் கார் வாங்குவோருக்கு மானியம் வழங்கப்படுகிறது அனைவருக்கும் தெரியும் நிலையில், டெல்லி அரசு சமீப காலமாக மக்களை எலக்ட்ரிக் கார் மற்றும் பைக்-ஐ பயன்படுத்த வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முக்கியத் தயாரிப்பான டாடா நெக்சான் எலக்ட்ரிக் கார் ஒரு முறை சார்ஜ் செய்தால் 312 கிலோமீட்டர் மைலேஜ் அளிக்கும் என ARAI அறிவித்துள்ளது என்பதை மேற்கோள் காட்டிய இந்தக் காரை விற்பனை செய்து வருகிறது.
ஆனால் டாடா மோட்டார்ஸ் கூறுவது போல் ஒரு முறை சார்ஜ் செய்தால் 312 கிலோமீட்டர் மைலேஜ் அளிப்பது இல்லை எனப் பல டெல்லி நெக்சான் எலக்ட்ரிக் கார் உரிமையாளர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர். இதைத் தொடர்ந்து டெல்லி போக்குவரத்துத் துறை அமைச்சர் கைலாஷ் கலாட் டாடா நெக்சான் எலக்ட்ரிக் காருக்கு அளிக்கப்படும் மானியத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிட்டு உள்ளார்.
பெட்ரோல், டீசல் கார் இனி கிடையாது.. வால்வோ எடுத்த அதிரடி முடிவு.. டார்கெட் 2030..!
Delhi govt has decided to suspend subsidy on a EV car model, pending final report of a Committee, due to complaints by multiple users of sub-standard range performance. We r committed to support EVs, but not at the cost of trust & confidence of citizens in claims by manufacturers pic.twitter.com/R81S3kH6vT
— Kailash Gahlot (@kgahlot) March 1, 2021
டாடா நெக்சான் எலக்ட்ரிக் காரின் செயல்பாடு குறித்துப் பல குற்றச்சாட்டுகள் வந்துள்ள நிலையில், மானியத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்தக் காரின் செயல்திறன் குறித்து முழுமையான ஆய்வறிக்கை வந்த பின்பு இறுதி முடிவுகள் எடுக்கப்படும் என டிவிட்டரில் தெரிவித்துள்ளார் கைலாஷ்.
இதுமட்டும் அல்லாமல் எலக்ட்ரிக் வாகனங்களை நாங்கள் தொடர்ந்து ஆதரிக்கிறோம், ஆனால் இதற்காக மக்களின் நம்பிக்கை பணையம் வைக்க விருப்பம் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.