பெட்ரோல் விற்பனை உயர்வு.. ஆனால் டீசல்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் எரிபொருள் விற்பனை அளவும் நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதார வளர்ச்சி அளவீட்டை கணிக்கும் முக்கிய காரணியாக உள்ளது.

 

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை வெளியிடப்பட்ட ஜூன் காலாண்டின் ஜிடிபி வளர்ச்சி அளவீட்டில் இந்திய பொருளாதாரம் 20.1 சதவீதம் என்ற வரலாற்று வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

ஆனால் கொரோனாவுக்கு முந்தைய பொருளாதார வளர்ச்சியை இன்னும் அடையாதது பெரும் வருத்தமாக இருந்தது, இதை உறுதி செய்யும் விதமாக நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டு அளவு உள்ளது.

பெட்ரோல் விற்பனை உயர்வு.. ஆனால் டீசல்..!

ஆகஸ்ட் மாதம் தரவுகள் அடிப்படையில் இந்தியாவில் எரிபொருள் பயன்பாடு இன்னமும் கொரோனாவுக்கு முந்தைய அளவீட்டை அடையவில்லை என்பது தெரிய வந்துள்ளது. 2020 ஆகஸ்ட் மாதத்தை ஒப்பிடுகையில் இந்தியாவில் பெட்ரோல் டிமாண்ட் 14 சதவீதம் அதிகரித்துள்ளது, டீசல் பயன்பாடு 16 சதவீதம் அதிகரித்துள்ளது.

ஆனால் கொரோனாவுக்கு முந்தைய அளவீட்டை ஒப்பிடுகையில் டீசல் பயன்பாட்டு அளவு இன்னுமும் 10 சதவீதம் குறைவாகவே உள்ளது. இதேவேளையில் பெட்ரோல் பயன்பாடு கொரோனாவுக்கு முந்தைய அளவீட்டு உடன் 4 சதவீதம் அதிகமாகியுள்ளது.

பொதுவாக டீசல் தான் அனைத்து விதிமான சரக்கு போக்குவரத்துக்கு பயன்படும், அந்த வகையில் நாட்டின் வர்த்தகம் சந்தை நேரடியாக டீசல் பயன்பாட்டை தொடர்புடையதாக உள்ளது.

மேலும் இந்தியாவில் உள்நாட்டு வான்வெளி சரக்கு போக்குவரத்து பெரிய அளவில் வளர்ச்சி அடையாத காரணத்தால் சாலை பேக்குவரத்து அதாவது டீசல் பயன்பாட்டு அளவீட்டை நம்பி தான் உள்ளது.

பெட்ரோல் விற்பனை உயர்வு.. ஆனால் டீசல்..!

சரி வான்வழி போக்குவரத்துக்கு பயன்படுத்தும் விமான எரிபொருள் பயன்பாடு அளவு 2020 ஆகஸ்ட் மாத்தை விடவும் 42 சதவீதம் அதிகரித்துள்ளது, ஆனால் 2019 அளவீட்டை ஒப்பிடுகையில் 44.5 சதவீதம் குறைவாகவே உள்ளது.

இது மட்டும் அல்லாமல் சமையல் எரிவாயு பயன்பாட்டு அளவு 2020 ஆகஸ்ட் ஒப்பிடுகையில் தற்போது 2 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால் 2019 ஆகஸ்ட் மாதத்தை ஒப்பிடுகையில் 2.4 சதவீதம் குறைவாக உள்ளது.

 

இந்தியாவில் இன்னமும் பல ஹோட்டல் மற்றும் உணவகங்கள் இன்னும் முழுமையாக இயங்க துவங்காத நிலையில் சமையல் எரிவாயு பயன்பாடும் சரிந்துள்ளது.

டீசல் பயன்பாட்டு அளவு கொரோனாவுக்கு முந்தைய அளவீட்டை விடவும் சுமார் 10 சதவீதம் வரையில் குறைந்துள்ளது தான் தற்போது, பெரும் சந்தை வல்லுனர்களுக்கு முக்கிய பிரச்சனையாக விளங்குகிறது.

சரிவில் தங்கம் விலை.. இது தான் வாங்க சரியான நேரம்.. நிபுணர்களின் பலே கணிப்ப பாருங்க..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Demand for Fuel in India: Diesel lags 10 percent to pre pandemic level reflects Economy growth

Demand for Fuel in India: Diesel lags 10 percent to pre pandemic level reflects Economy growth
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X