இந்திய ஐடி நிறுவனங்களின் பட்ஜெட் சேவையை உலக நாடுகளில் இருக்கும் நிறுவனங்களுக்கு அதிகளவில் பிடித்துப்போன காரணத்தால், கொரோனா காலத்தில் டிஜிட்டல் சேவைகளை நிறுவனத்தில் கொண்டு வர வேண்டும் என நினைத்த அனைத்து சர்வதேச நிறுவனங்களுக்கும் ஓரே இலக்காக மாறியது இந்திய ஐடி நிறுவனங்கள்.
தினசரி ரூ.50 போதும்.. 3 கலக்கலான அஞ்சலக திட்டங்கள்.. எவ்வளவு லாபம் கிடைக்கும்..?
இதனால் கடந்த 2 வருடத்தில் இந்திய ஐடி நிறுவனங்கள் கனவிலும் நினைக்காத வகையில் சிறிதும், பெரிதுமாக அதிகளவிலான திட்டங்களைப் பெற்றது. ஆனால் இதோடு சில முக்கியமான பிரச்சனைகளும் வெடித்துள்ளது.

டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ, ஹெச்சிஎல்
இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களான டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ, ஹெச்சிஎல்-க்கு கடந்த 2 வருடத்தில் அதிகளவிலான வர்த்தகம் கிடைத்த காரணத்தால், மாறி மாறி நிறுவனங்கள் சக போட்டி நிறுவனத்தில் இருந்து ஊழியர்களைப் பணியில் அமர்த்தியது.

போனஸ், பதவி உயர்வு
இதனால் டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ, ஹெச்சிஎல் நிறுவனங்களில் இருந்து வெளியேறும் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரித்தது. இதைக் கட்டுப்படுத்த இந்திய ஐடி நிறுவனங்கள் ஊழியர்களுக்குப் போனஸ், பதவி உயர்வு உடன் கொண்டு சம்பள உயர்வை அளித்தது.

போட்டி
இதன் மூலம் 2021ஆம் ஆண்டு வரையில் ஊழியர்கள் வெளியேற்றத்தை ஐடி ஊழியர்கள் சமாளித்து வந்த நிலையில், மறுமுனையில் ஐடி வர்த்தகம் அதிகரிக்கவே ஊழியர்களுக்கான தேவை அதிகரித்தது. இதனால் போட்டி நிறுவனத்தில் இருக்கும் ஊழியர்களை இழுக்கத் துவங்கினர்.

70 - 120% சம்பள உயர்வு
இந்தப் போட்டியில் ஐடி ஊழியர்களுக்குப் பொதுவாகக் கொடுக்கப்படும் சம்பள உயர்வான 30-35 சதவீதத்தைக் காட்டிலும் தற்போது 70 முதல் 120 சதவீதம் வரையில் சம்பள உயர்வு அளிக்கப்படுகிறது. இதனால் ஐடி நிறுவனங்கள் இதற்கு முன்பு கொடுத்த போனஸ், பதவி உயர்வு ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அதிகச் சம்பளம் கொடுக்கும் நிறுவனங்களுக்கு மாறி வருகின்றனர்.

ஊழியர்கள் வெளியேற்ற விகிதம்
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்-ன் டிசம்பர் காலாண்டின் ஊழியர்கள் வெளியேற்ற விகிதம் (attrition rate) யாரும் எதிர்பார்க்காத வகையில் 15.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது இன்போசிஸ் நிறுவனத்தில் 25.5 சதவீதமாகவும், விப்ரோ நிறுவனத்தில் 22.7 சதவீதமாக உயர்ந்துள்ளது.

பிரஷ்ஷர்கள்
ஊழியர்கள் வெளியேற அளவை சமாளிக்கும் விதமாக டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ ஆகிய 3 நிறுவனங்கள் மட்டும் டிசம்பர் காலாண்டில் சுமார் 51,000 ஊழியர்களைப் பணியில் அமர்த்தியுள்ளது. இனி வரும் காலகட்டத்திலும் அதிகப்படியான பிரஷ்ஷர்களைப் பணியில் சேர்க்கத் திட்டமிட்டு உள்ளது ஐடி நிறுவனங்கள். இதனால் அடுத்த 5 வருடத்தில் அதிகம் சம்பளம் வாங்கும் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யவும் வாய்ப்பு உள்ளது.