நெருக்கடியில் டிஹெச்எஃப்எல்.. தொடர் நஷ்டம்.. மூன்றாவது காலாண்டிலும் ரூ.13,095.38 கோடி அவுட்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: திவான் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம் அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் நிகர நஷ்டமாக 13,095.38 கோடி ரூபாயாக அறிவித்துள்ளது.

 

இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் நிகரலாபம் 943.31 கோடி ரூபாயாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

இதே செப்டம்பர் காலாண்டில் நிகர நஷ்டமாக 2,122.65 கோடி ரூபாயாக இருந்த நிலையில், டிசம்பர்கள் காலாண்டில் கிட்டதட்ட ஆறு மடங்கு அதிகரித்துள்ளது.

திவாலான டிஹெச்எஃப்எல்

திவாலான டிஹெச்எஃப்எல்

ஏற்கனவே திவால் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள இந்த நிறுவனம், 2019ல் பெரும் பிரச்சனைக்கு தள்ளப்பட்டது. இந்தியாவிலேயே திவாலான முதல் வங்கி அல்லாத நிதி நிறுவனமாகும். இந்த நிறுவனம் பொதுத்துறை நிறுவனங்களிடம் கடன் வாங்கியுள்ளதோடு, போலி நிறுவனங்கள் பெயரில் லட்சக் கணக்கில் கடன் வழங்கியதாகவும் புகார் பதிவு செய்யப்பட்டது.

பலே மோசடிகள்

பலே மோசடிகள்

திவான் ஹவுஸிங் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் 1 லட்சம் போலியான சில்லறை வாடிக்கையாளர்களுக்கு 12,773 கோடி ரூபாய் கடனை ஒதுக்கீடு செய்துள்ளதாக அமலாக்க இயக்குனரகம் கண்டு பிடித்தது. உண்மையில் இந்த போலியான கணக்குகள் மூலம் வழக்கப்பட்ட கடன்கள், டிஹெச்எஃப்எல் தொடர்புடைய 79 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

ஆர்பிஐ அதிரடி நடவடிக்கை
 

ஆர்பிஐ அதிரடி நடவடிக்கை

சில ஆதாரங்களின் படி, இந்த கற்பனையான போலி கணக்குகள் சில ,இறந்தவர்களின் பெயரில் கூட உள்ளதாகவும் கூறப்பட்டது. இப்படி பல மோசடிக்களுக்கும் மத்தியில் சிக்கித் தவிக்கும் இந்த நிறுவனம், மேற்கொண்டு நஷ்டத்தினையே காட்டியுள்ளது. ஏற்கனவே ரிசர்வ் வங்கியின் சார்பில் டிஹெச்எஃப்எல் நிர்வாகத்தினை நிர்வாகம் செய்ய நியமனம் செய்தது. .

மேலும் நெருக்கடி தான்

மேலும் நெருக்கடி தான்

எனினும் தற்போது வரையில் இந்த வழக்கு பற்றிய தீவிர விசாரனை நடந்து கொண்டுள்ளது. இந்த நிறுவனத்தில் செய்யப்பட்ட பிக்ஸட் டெபாசிட்டுகளும் பலருக்கு திரும்ப கொடுக்கப்படவில்லை. இந்த நிறுவனம் கொடுத்த கடனையும் வசூலிக்க முடியாமல் தவித்து வருகின்றது. இந்த நிலையில் தொடர்ச்சியாக மேற்கொண்டு நஷ்டத்தினை கண்டுள்ளது, மேலும் இந்த நிறுவனத்திற்கு நெருக்கடியாகவே உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

DHFL reported consolidated net loss of Rs.13,095 crore in December quarter

DHFL updates.. DHFL reported consolidated net loss of Rs.13,095 crore in December quarter
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X