அம்பலமான DHFL ஊழல்.. போலி கணக்கு, மோசடியாக பண பரிமாற்றம்... கிராண்ட் தோர்டன் பளிச்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

திவான் ஹவுஸிங் பைனான்ஸ் நிறுவனத்தில் நடந்த ஊழல் குறித்த இறுதி அறிக்கையை, தணிக்கையாளர் கிராண்ட் தோர்டன், ரிசர்வ் வங்கியால் நியமிக்கப்பட்ட பிரதி நிதியிடம் சமர்பித்துள்ளது

 

இந்த அறிக்கையின் படி, நூற்றுக் கணக்கான கற்பனையான கடன் கணக்குகள் மூலம், 14,046 கோடி ரூபாய் முறைகேடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த முறைகேடான கடன்கள் சுழற்சி முறையில் (round tripping) கொடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

அம்பலமான DHFL ஊழல்..  போலி கணக்கு, மோசடியாக பண பரிமாற்றம்... கிராண்ட் தோர்டன் பளிச்..!

கடந்த பிப்ரவரி மாதம் ரிசர்வ் வங்கியால், இந்தியன் ஒவர்சீஸ் வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குனரான ஆர் சுப்ரமணியகுமார் நிர்வாக அலுவலராக நியமிக்கப்பட்டார். இவரிடம் தான் கிராண்ட் தோர்டன் அறிக்கையை கடந்த ஆகஸ்ட் 27 அன்று முன்னதாக 98 பக்க அறிக்கை ஒன்றை சமர்பித்தது. இதனைத் தொடர்ந்து தற்போது இறுதி அறிக்கையை சமர்பித்துள்ளது.

ஆக மொத்த இந்த குழுக்கள் சொல்வது, முறைகேடான கடன்கள் சுழற்சி முறையில் (round tripping) கொடுக்கப்பட்டுள்ளதை தான் முதலில் முன்வைத்துள்ளன.

உச்சத்திலிருந்து 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.6,000 வீழ்ச்சி.. இன்னும் சரியுமா.. வாங்கி வைக்கலாமா?

அதோடு இந்த அறிக்கை போலியாக வீட்டுக்கடன் வாங்கிவர்களின் பெயர்கள் எவ்வாறு சேகரிக்கப்பட்ட என்பதையும் தெளிவாக சுட்டிக் காட்டியுள்ளது. அதாவது மூடப்பட்ட கணக்குகளிலிருந்து தோராயமாக எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

மொத்தத்தில் 2007 - 2019க்கு இடையில் பாந்த்ரா கிளையில் 2,60,315 போலி கணக்குகள் மற்றும் கற்பனையான வீட்டுக்கடன் கணக்குகள் உருவாக்கப்பட்டன. அதோடு 11,755.79 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

தணிகையாளரின் இந்த இறுதி அறிக்கையில் 91 நிறுவனங்கள் மையாகமாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளது. இவற்றிற்கு கடன் வழங்குவதற்கு முன்பு எந்தவொரு பாதுகாப்பு ஆவணமோ அல்லது பிணையமோ பெறப்படவில்லை என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இவர்களின் 50 பேரின் கடன் தொகையானது, மொத்த பாந்தரா கடன் விநியோகத்தில் 70% உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

 

இவ்வாறு போலியாக மோசடி செய்யப்பட்டு பெறப்பட்ட தொகையானது 34 நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. மேற்கண்ட இந்த 34 நிறுவனங்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ திவான் ஹவுஸிங் புரோமோட்டர்களுடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த அறிக்கை கூறுகின்றது. பல சந்தர்பங்களில் வழங்கப்பட்ட நிதிகள் புரோமோட்டர்களுடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு திருப்பிட விடப்பட்டுள்ளதாகவும் இந்த அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

மேலும் இந்த பாந்த்ரா கிளையில் கடன் வாங்கியவர்கள் பலர் பொதுவான முகவரியினை பயன்படுத்தியுள்ளனர். அதோடு பாந்த்ரா கிளையில் இருந்து கொடுக்கப்பட்ட கடன்களுக்கு குறைவான வட்டியே வசூலிக்கப்பட்டது. ஆக மேற்கண்ட இது போன்ற பல காரணகள், அனைத்தும் இந்த நிறுவனத்தினை திவால் நிலைக்கு தள்ளியுள்ளன.

பாந்திரா கடன் புத்தகத்தில் உள்ள நிறுவனங்களுக்கும், புரோமோட்டர்களுக்குமான தொடர்புகள் பல சந்தர்பங்களில் தெளிவாக தெரிகிறது. உதாரணத்திற்கு வாதவன் சகோதரர்கள் அல்லது அவர்களின் உறவினர்கள், இந்த நிறுவனங்களில் இயக்குனர்கள் அல்லது விளம்பரதாரர்களாக மாறியுள்ளனர். மேலும் இந்த நிறுவனங்கள் மோசடி செய்வதற்காகவே வழித்தடமாக பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்த அறிக்கையானது கபில் வாதவன் மற்றும் அவரது சகோதரர் தீரஜ் வாதவர் ஆகியோர் ஜாமீனில் வெளிவந்த போது இந்த அறிக்கையானது வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

DHFL scam: grant thornton submitted its final forensic report

Grant thornton submitted its final forensic report ஒன் DHFL scam to the RBI appointed administrator
Story first published: Monday, October 5, 2020, 21:08 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X