கொரோனாவின் கொடூரம்: டிஜிட்டல் பேமெண்ட் 30 சதவீதம் பாதிப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் பேமெண்ட் துறை யாரும் எதிர்பார்க்காத வகையில் பெரிய அளவிலான பாதிப்பைத் துவக்கத்திலேயே எதிர்கொண்டுள்ளது. நாடு முழுவதும் கோவிட்-19 என்கிற கொடூர கொரோனா வைரஸ் மக்களைப் பாதித்து வரும் நிலையில் நாட்டு மக்கள் பயத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

 

கடைகள் மற்றும் வர்த்தக வளாகம் மூடல், விமானப் பயணங்களில் அதிகளவிலான கட்டுப்பாடுகள், வெளியே வரும் மக்களின் எண்ணிக்கையில் சரிவு, திரையரங்கு மூடல் என மக்கள் அதிகமாக டிஜிட்டல் பணப் பரிமாற்றத்தைப் பயன்படுத்தும் அனைத்து இடங்களும் தற்போது கொரோனா-வின் பாதிப்பு மற்றும் பரவும் வாய்ப்பை தடுக்க மூடப்பட்டுள்ளது.

இதன் எதிரொலியாக இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிமாற்ற எண்ணிக்கை எப்போதும் இல்லாத அளவிற்குச் சுமார் 30 சதவீதம் வரையில் குறைந்துள்ளது.

இந்திய வர்த்தகச் சந்தை

இந்திய வர்த்தகச் சந்தை

ஏற்கனவே இந்திய பொருளாதாரம் மோசமான நிலையில் இருந்த போது, அமெரிக்கா - சீனா வர்த்தகப் போர் பாதித்தது, இதன் பின்பு வராக் கடன் பிரச்சனை, அதன் பின்பு யெஸ் வங்கி, தற்போது கொரோனா. எல்லாப் பாதிப்புகளை ஒப்பிடுகையில் கொரோனா-வின் சர்வதேச அளவில் இருக்கும் காரணத்தால் மும்பை பங்குச்சந்தை கிட்டதட்ட 8000 புள்ளிகள் வரையில் இழந்து முதலீட்டாளர்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

டிஜிட்டல் பரிமாற்றம்

டிஜிட்டல் பரிமாற்றம்

இத்துறை வர்த்தகக் கணிப்புகளைப் பார்க்கும் போது கடந்த 6 வாரத்தில் டிஜிட்டல் பணப் பரிமாற்றத்தின் எண்ணிக்கை எப்போதும் இல்லாத அளவிற்குச் சரிந்துள்ளது. கிட்டத்தட்ட இந்த 6 வார காலத்தில் சுமார் 30 சதவீத பணப் பரிமாற்றங்கள் குறைந்துள்ளது என இத்துறை வர்த்தக ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

பாதிப்பு
 

பாதிப்பு

இந்தப் பாதிப்புக்கு முக்கியக் காரணம் தற்போது நாடு முழுவதும் கொரோனா-வின் பாதிப்பு மக்கள் மத்தியில் பரவுவதைத் தடுக்கும் வண்ணம், கடைகள் மற்றும் வர்த்தக வளாகம் மூடல், விமானப் பயணங்களில் அதிகளவிலான கட்டுப்பாடுகள், வெளியே வரும் மக்களின் எண்ணிக்கையில் சரிவு, திரையரங்கு, பள்ளி, கல்லூரிகள் என மக்கள் அதிகம் எண்ணிக்கையில் கூடும் அனைத்து இடங்களையும் மாநில அரசுகள் மூட உத்தரவிட்டுள்ளது.

இது தான் டிஜிட்டல் பணப் பரிமாற்ற எண்ணிக்கையில் ஏற்பட்ட திடீர் 30 சதவீத சரிவுக்கு முக்கியக் காரணம்.

துறைவாரியான விபரம்

துறைவாரியான விபரம்

இந்தியாவில் ஈகாமர்ஸ் துறையில் தான் 40 சதவீத டிஜிட்டல் பணப் பரிமாற்றம் நடக்கிறது, இதன் பின்பு 30 சதவீதம் விமான டிக்கெட் மற்றும் இதர சேவைகள், சாலை போக்குவரத்து மற்றும் டெலிகாம் கட்டணம் ஆகியவற்றில் 16 சதவீதம், இதர அரசு சேவைகள் மூலம் 14 சதவீத பணப் பரிமாற்றம் நடக்கிறது.

விமானச் சேவை முழுமையாகப் பாதிப்படைந்துள்ளதால் இத்துறை பணப் பரிமாற்றம் தற்போது 90 சதவீதம் குறைந்துள்ளது.

தினசரி வர்த்தகம்

தினசரி வர்த்தகம்

டீ கடை, மளிகை கடை எனத் தினசரி வாழ்க்கையில் நாம் செய்யும் டிஜிட்டல் பணப் பரிமாற்றத்தில் நாடு முழுவதும் சேர்ந்து 10 முதல் 20 சதவீதம் குறைந்துள்ளது.

சொல்லப்போனால் ரூபாய் நோட்டுகளில் தான் அதிகளவிலான கிருமிகள் இருக்கிறது. உஷார இருங்க மக்களே.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Digital payments slip 30% on Covid-19 curbs

Shut shops, cancelled airline tickets and slower discretionary spends by consumers on dining out and movies are starting to hurt the country’s fast-growing digital payments sector. With industries across the board seeing a sharp slowdown, the digital payments sector is estimated to have registered a decline of around 30% in transaction value over the past few weeks
Story first published: Tuesday, March 17, 2020, 14:48 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X