அமித் ஷா-க்கு தன் சொந்த வீட்டை எழுதி கொடுப்பதாக போராட்டம்! வீட்ட கட்டிக் கொடுங்க இல்ல எடுத்துக்குங்க

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நொய்டா, உத்திரப் பிரதேசம்: பொதுவாக அரசாங்கம் தான், மக்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கும். ஆனால் இங்கு ஒரு சிறிய மாற்றமாக, ஒரு தனி நபர், உள் துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக கட்சிக்கு தன் வீட்டை எழுதி வைத்து இருக்கிறார்.

 

அம்ரபாலி ரியல் எஸ்டேட் பிரச்னையைப் பற்றி நிறைய படித்து இருக்கலாம். வீடு கட்டித் தருவதாகச் சொல்லி, பல ஆயிரம் பேரிடம் பணத்தை வாங்கி ஏமாற்றிய கதை தெரியும் தானே..! அப்படி வீடு வாங்க பணம் கொடுத்து ஏமாந்த ஒருவர் தான் இந்த புதிய வித போராட்டத்தைச் செய்து இருக்கிறார்.

அப்படி என்ன வித்தியாசமாகச் செய்துவிட்டார்..? என்ன கோரிக்கை வைக்கிறார்..? வாங்க பார்ப்போம்.

யார் அவர்

யார் அவர்

அவர் பெயர் திபன்கர் குமார். வயது 33. இவர் ஒரு கணிணி பொறியாளர். சொந்தமாக ஒரு சிறிய கம்பெனியை நடத்தி வருகிறார். கடந்த 2014-ம் ஆண்டு அம்ரபாலி குழுமத்தின், லெசர் வேலி (Leisure Valley) குடியிருப்பு வீடுகள் திட்டத்தில், ஒரு வீடு வாங்க சுமார் 43 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தார்.

வாடகை வீடு

வாடகை வீடு

இதுவரை வீட்டைக் கட்டி முடிக்கவும் இல்லை. வேறு வீட்டைக் கொடுக்கவும் இல்லை. சொந்த வீட்டுக்கு பணம் கொடுத்து ஐந்து ஆண்டுகள் ஆகியும் திபன்கர் குமார், இன்னும் ஒரு வாடகை வீட்டில் தான் வசித்துக் கொண்டு இருக்கிறார். வீடு தான் வரவில்லை என்றால் கொடுத்த பணமும் திரும்பி வரவில்லை.

சட்டப் போராட்டம்
 

சட்டப் போராட்டம்

அம்ரபாலி நிறுவனத்துடன் சண்டை போட்டு வீட்டையோ அல்லது பணத்தையோ வாங்க முடியவில்லை. எனவே மனிதர் தன் ட்விட்டர் பக்கத்தில் அதிரடி காட்டி இருக்கிறார். சமீபத்தில் தன் வீட்டை அமித் ஷா மற்றும் பாஜக கட்சிக்கு எழுதி வைத்து விடுவதாகச் சொல்லி 10 ரூபாய் பத்திரத்தில் எழுதி கையெழுத்து போட்டு இருக்கிறார்.

உறுதி செய்யமுடியவில்லை

உறுதி செய்யமுடியவில்லை

இந்த பத்திரம் இவர் எழுதி கையெழுத்து போட்டது தானா..? என உறுதி செய்ய முடியவில்லை. ஆனால் இவர் பத்திரம் எழுதி கையெழுத்து இட்டு இருப்பதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கையில் செய்திகள் வெளியாகி இருக்கிறது. சொத்து எழுதி வைப்பதாகச் சொல்லும் பத்திரம் மேலே படத்தில்.

நிதி வேண்டும்

நிதி வேண்டும்

ஆயிரக்கணக்கானவர்கள், சொந்த வீட்டை வாங்க, அம்ரபாலி நிறுவனத்திடம் பணம் கொடுத்து பல வருடங்கள் ஆகி விட்டது. இதுவரை வீடு கிடைக்கவில்லை. எனவே, அம்ரபாலி வீடு கட்டுமான திட்டங்களுக்கு, அரசின் நெருக்கடி நிதி கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து இருக்கிறார் கம்ப்யூட்டர் இன்ஜினியர் திபன்கர் குமார்.

நோ ஒதுக்கீடு

நோ ஒதுக்கீடு

கடந்த நவம்பர் 2019-ல் கூட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அழுத்தத்தில் இருக்கும், குடியிருப்பு ரியல் எஸ்டேட் திட்டங்களுக்கு என்றே தனி சிறப்பு நிதியாக சுமார் 25,000 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்தார். அந்த சிறப்பு நிதித் திட்டத்திலும் அம்ரபாலி குடியிருப்பு ரியல் எஸ்டேட் திட்டங்கள் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அம்ரபாலி திட்டம்

அம்ரபாலி திட்டம்

அம்ரபாலி ரியல் எஸ்டேட் திட்டத்தில் சுமாராக 42,000 அடுக்கு மாடி குடியிருப்பு வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு இருந்ததாம். அதில் 14,000 வீடுகளை கட்டி முடித்து, வீட்டுக்கு சொந்தக்காரர்கள் குடியேறியும் விட்டார்கள். ஆனால் மீதம் உள்ள 28,000 அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளின் நிலை என்ன ஆனது என்றே தெரியவில்லை.

எல்லாரும் எழுதி வைப்போம்

மத்திய அரசு இப்போதும் எங்கள் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை என்றால், அம்ரபாலியில் வீடு வாங்கிய எல்லோருமே தங்கள் வீட்டை பிரதமர் நரேந்திர மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக கட்சி-க்கு எழுதி வைத்து விடுவோம் எனவும் தன் ட்விட்டர் பக்கத்தில் சொல்லி இருக்கிறார் திபன்கர் குமார்.

கனவு மெய்ப் படட்டும்

கனவு மெய்ப் படட்டும்

சொந்த வீடுங்குறது வெறும் செங்கல்லும் சிமெண்டும் இல்ல சார்... ஒரு கனவு..! திபன்கர் குமாரின் கனவு நிறைவேறட்டும் அம்ரபாலியில் வீடு வாங்கியவர்களுக்கு முறையாக வீடுகள் சென்று சேரட்டும். அரசு இவர்கள் கதறலை கவனத்தில் எடுத்துக் கொள்ளும் என நம்புவோம். சொந்த வீடு என்கிற மாபெரும் கனவு மெய்ப் படட்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

dipankar kumar is willing to give his amrapali house to amit shah

Among thousands of home buyers of amrapali, dipankar kumar is willing to give his home to amit shah and his bjp party to get help from central government to complete amrapali residential projects.
Story first published: Wednesday, December 11, 2019, 17:41 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X