சீனாவுடன் சண்டை போடும் நேரத்தில் இது தேவையா.. சர்ச்சையில் சிக்கிய சச்சின்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் டிஜிட்டல் சேவை பிரிவில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் முக்கியமான நிறுவனங்களில் ஒன்று பேடிஎம், சமீபத்தில் பங்குச்சந்தை முதலீட்டுச் சேவையை அறிமுகம் செய்து பல லட்சம் வாடிக்கையாளர்களைப் புதிதாகக் கவர்ந்து தனது வர்த்தகத்தை வலிமை சேர்த்தது.

 

இதன் தொடர்ச்சியாகப் பேடிஎம் இந்திய இளைஞர்கள் மத்தியில் வேகமாக வளர்ந்து வரும் ஆன்லைன் கேமிங் மீதான ஈர்ப்பை வர்த்தகமாக்க முடிவு செய்து இந்தியாவில் முதல் முறையாக மிகப்பெரிய முதலீட்டில் Paytm First Games என்ற ஆன்லைன் கேமிங் தளத்தை அறிமுகம் செய்துள்ளது.

பேடிஎம் குழுமத்தின் இந்தப் புதிய வர்த்தகப் பிரிவான ஆன்லைன் கேமிங் தளத்திற்குக் கிரிக்கெட் உலகின் கடவுள் சச்சின் டெண்டுல்கர் பிராண்ட் அம்பாசிடராக அறிவிக்கப்பட்டார். இங்க தான் பிரச்சனை வெடித்துள்ளது.

இன்ஜினியர் முதல் ஆசிரியர் வரை கண்ணீர்.. 66 லட்சம் பேரின் வேலை பறிபோனது..!

CAIT அமைப்பு

CAIT அமைப்பு

இந்திய வர்த்தகர்கள் அமைப்பான CAIT (The Confederation of All India Traders) சச்சின் டெண்டுல்கர்-ன் நியமனத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளது.

இந்தியா - சீனா எல்லையில் எப்போதும் இல்லாத வகையில் பதற்றமான சூழ்நிலையில் ஏற்பட்டுள்ளது, இதுகுறித்து இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி வரும் வேளையில் சீன நிறுவனங்களின் முதலீடு பெரிய அளவில் ஆதிக்கம் செய்யும் பேடிஎம் நிறுவனத்திற்கு நாடே போற்றும் ஒரு கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர் எப்படி விளம்பர தூதர் பொறுப்பு ஏற்கலாம் எனச் சச்சினுக்கு CAIT கடிதம் எழுதியுள்ளது.

பதவி விலகல்

பதவி விலகல்

சச்சின் டெண்டுல்கர் Paytm First Games வர்த்தகத்தின் விளம்பர தூதர் பொறுப்பேற்றுள்ள நிலையில், நாடு மற்றும் நாட்டு மக்களின் மன உணர்வைக் கருத்தில் கொண்டு சீனா உடனான பிரச்சனையை மனதில் வைத்து தனது முடிவை திரும்பப் பெற்று, பிராண்ட் அம்பாசிடர் பதவியில் இருந்து விலக வேண்டும்.

பிரவின் கந்தேல்வால்
 

பிரவின் கந்தேல்வால்

Paytm First Games வர்த்தகத்தின் விளம்பர தூதர் பதவியே ஏற்கப் பணம் முக்கியக் காரணமாக இருக்காது என நம்புகிறோம், ஆனால் நாடு மற்றும் நாட்டு மக்களின் மன உணர்வைத் தாண்டி நீங்கள் இந்தப் பதவியே ஏற்க என்ன காரணம்..? என CAIT அமைப்பின் தேசிய பொதுச் செயலாளர் பிரவின் கந்தேல்வால் அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தது.

அலிபாபா

அலிபாபா

மேலும் இந்தக் கடிதத்தில் இந்தியச் சீன எல்லையில் சீன ராணுவத்தின் தாக்குதலால் 20 இந்திய ராணுவ வீரர்கள் இழந்துள்ள வேளையில், சீனாவின் அலிபாபா-வின் மிகப்பெரிய முதலீட்டில் இயங்கும் பேடிஎம் நிறுவனத்தில் பிராண்ட் அம்பாசிடர் ஆக எப்படிப் பொறுப்பேற்க மன வந்தது.

உங்களின் இந்த முடிவு பல கோடி இந்திய மக்களுக்கு அதிர்ச்சியாகவும்,

அருவருப்பாகவும் உள்ளது என CAIT அமைப்பின் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தது.

பேடிஎம் பர்ஸ்ட் கேம்ஸ்

பேடிஎம் பர்ஸ்ட் கேம்ஸ்

ஆன்லைன் கேமிங் பிரிவை மட்டும் தனிப்பட்ட வகையில் கவனம் செலுத்தித் துவங்கப்பட்ட இந்தப் பேடிஎம் பர்ஸ்ட் கேம்ஸ் ஐபிஎல் காலத்தில் மட்டும் சுமார் 1 கோடி வாடிக்கையாளர்களையும், அடுத்த 6 மாதத்தில் 2 கோடி லைவ் ஈவென்ட்ஸ் உருவாக்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

இப்புதிய சேவையின் விளம்பரத்திற்காக மட்டும் பேடிஎம் 300 கோடி ரூபாய் அளவிலான நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Disgusting to see Sachin accepts Brand Ambassador of paytm First Games: CAIT

Disgusting to see Sachin accepts Brand Ambassador of Paytm First Games: CAIT
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X