சர்வதேச வர்த்தக சூழ்நிலை காரணமாக மும்பை பங்குச்சந்தை 2022ஆம் ஆண்டு துவக்கத்தில் இருந்து மிகவும் மோசமான பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் நிலையில் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் அதிகளவிலான முதலீட்டு மதிப்பை இழந்து வருகின்றனர்.
குறிப்பாக இளம் முதலீட்டாளர்கள், சிறுமுதலீட்டாளர்கள் அதிகளவிலான நஷ்டத்தை எதிர்கொண்டு வரும் நிலையில், பங்குச்சந்தை முதலீட்டில் பெரும் புள்ளியாக விளங்கும் ராதாகிஷன் தமனி மிகப்பெரிய நஷ்டத்தை எதிர்கொண்டு உள்ளார்.
பல்குனி நாயக்கருக்கு அதிகரிக்கும் சிக்கல்.. பாதியாக குறைந்த லாபம்.. என்ன காரணம்?

ராதாகிஷன் தமனி
மூத்த பங்குச்சந்தை முதலீட்டாளரும், சில்லறை நிறுவனமான அவென்யூ சூப்பர்மார்ட்ஸின் (டிமார்ட்) உரிமையாளருமான ராதாகிஷன் தமனி, 2022 ஆம் ஆண்டில், உலகளாவிய சூழ்நிலையில் ஏற்பட்ட அதிகப்படியான பங்குகளின் விற்பனையால் 2022ஆம் ஆண்டில் அதாவது கடந்த 5 மாதத்தில் 25 சதவீத முதலீட்டு மதிப்பு சரிந்துள்ளது.

ரூ.1.55 லட்சம் கோடி
மார்ச் 31 நிலவரப்படி குறைந்தபட்சம் 14 பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் ராதாகிஷன் தமனி 1 சதவீதத்திற்கும் அதிகமான பங்குகளை வைத்துள்ளார். இந்த முதலீட்டின் இன்றைய மதிப்பு ரூ.1.55 லட்சம் கோடியாக உள்ளன, 2022 ஆம் ஆண்டின் துவக்கம் முதல் இன்று வரை 23 சதவீதம் குறைந்துள்ளது.

DMart பங்கு இருப்பு
இந்த 1.55 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பீட்டில் ராதாகிஷன் தமனி-இன் DMart பங்கு இருப்பும் முக்கிய அங்கம் வகிக்கிறது. டிசம்பர் 31 நிலவரப்படி, ராதாகிஷன் தமனியின் மொத்த சொத்து மதிப்பு 2.02 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.

அவென்யூ சூப்பர்மார்ட்ஸ்
ராதாகிஷன் தமனி-யின் மொத்த சொத்து மற்றும் முதலீட்டு மதிப்பில் முக்கிய அங்கம் வகிப்பது டிமார்ட் அதாவது அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் பங்குகள் தான். ராதாகிஷன் தமனி கட்டுப்பாட்டில் சுமார் 65.2 சதவீத அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் பங்குகள் உள்ளது, இதன் மதிப்பு 1,47,966.8 கோடி ரூபாய். அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் பங்குகள் 2022ல் மட்டும் சுமார் 25 சதவீதம் சரிந்துள்ளது.

இந்தியா சிமெண்ட்ஸ்
இதேபோல் ராதாகிஷன் தமனி இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் 632 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வைத்துள்ளார். ஆனால் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன பங்குகளும் 17 சதவீதம் வரையில் சரிந்தது.