ஐசிஐசிஐ வங்கி மோசடி: டிரைவர், தோட்டக்காரர்களை நிறுவன தலைவராக்கி மோசடி செய்த சந்தா கோச்சார்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான ஐசிஐசிஐ வங்கியில் சந்தா கோச்சார் தலைவராக இருக்கும் போது செய்யப்பட்ட மோசடியில், அவரது கணவர் தீபக் கோச்சார் மற்றும் வீடியோகான் குரூப் தலைவர் வேணுகோபால் தூத் ஆகியோர் இணைந்து டிரைவர், தோட்டக்காரர், ஆபீஸ் பாய்ஸ் மற்றும் நிறுவனத்தின் ஜூனியர் ஊழியர்களை நிறுவனத்திற்கு டம்மி தலைவராக்கி மோசடி செய்யப்பட்டு உள்ளது அமலாக்க துறை கண்டுபிடித்துள்ளது குற்ற அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது.

 

தீபக் கோச்சார் மற்றும் வேணுகோபால் தூத் ஆகியோர் இணைந்து நிறுவனத் தலைவராக்கப்பட்ட பலருக்கு இதுகுறித்து எதுவும் தெரியாது எனக் கூறியுள்ளதாகவும் அமலாக்க துறை தெரிவித்துள்ளது.

கிளீனர்

கிளீனர்

அமலாக்கத் துறை சமர்ப்பித்துள்ள குற்ற அறிக்கையில், கேஷ்ராமல் நென்சுக்லால் காந்தி இவர் 1994ஆம் ஆண்டு முதல் வேணுகோபால் தூத்-ன் அகமதாபாத் பங்களாவில் பணியாற்றும் கிளீனர். இவர் ஐஆர்சிஎல் என்னும் Indian Refrigerator Company Ltd நிறுவனத்தின் டைரக்டர் ஆவார்.

தோட்டக்காரர்

தோட்டக்காரர்

இதேபோல் லட்சமிகாந்த் சுதாகர் கடோரே இவர் வீடியோகான் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தோட்டக்காரர் ஆக 2001 முதல் 2016 வரையில் பணியாற்றியுள்ளார். இவர் பல நிறுவனங்களில் டைரக்டர் ஆகவும், ஆர்சிபிஎல் (Real Cleantech Pvt Ltd) நிறுவனத்தில் 50 சதவீத பங்குகளை வைத்துள்ளார். ஆனால் இவருக்குச் சம்பளம் வெறும் 10,000 ரூபாய்.

நிர்வாக அதிகாரி
 

நிர்வாக அதிகாரி

வசந்த் சேஷராவ் காக்டே, இவர் வீடியோகான் நிறுவனத்தில் 1998 முதல் நிர்வாகம், வங்கியியல், வருமான வரி தாக்கல் செய்வது, சேவை வரி திரும்பப் பெறுவது போன்ற பணிகளைச் செய்து வருகிறார். இவர் வீடியோகான் குரூப்-ல் இருக்கும் சுமார் 100 நிறுவனங்களின் டைரக்டர் ஆக உள்ளார். இதில் முக்கியமாக IRCL மற்றும் சுப்ரீம் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனத்தின் தலைவராக இருந்துள்ளார்.

குழந்தை பருவ நண்பர்

குழந்தை பருவ நண்பர்

வேணுகோபால் தூத் போலவே சந்தா கோச்சார்-ம் பலரை நிறுவனங்களின் தலைவராக நியமித்துள்ளார். சந்தா கோச்சாரின் குழந்தைப் பருவ நண்பரான ஆனந்த் மோகன் தல்வானி சுமார் 6 நிறுவனத்தின் டைரக்டர் ஆக உள்ளார்.

நீலம் மகேஷ் அத்வானி

நீலம் மகேஷ் அத்வானி

இதேபோல் சந்தா கோச்சாரின் சகோதரரின் மனைவி நீலம் மகேஷ் அத்வானி பசிபிக் கேபிட்டல் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனம் உட்படத் தீபக் கோச்சாரின் பல நிறுவனங்களில் தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

பியூன்

பியூன்

மேலும் சந்தா கோச்சார-ன் கணவர் தீபக் கோச்சாரின் ஈசந்தா உர்ஜா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பியூன் ஆக இருக்கும் சரத் சங்கர் மாக்தரே பசிபிக் கேபிட்டல் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தின் டைரக்டராக உள்ளார்.

மூன்று பேர் இணைந்து மோசடி

மூன்று பேர் இணைந்து மோசடி

ஐசிஐசிஐ வங்கி தலைவர் சந்தா கோச்சார், அவரது கணவர் தீபக் கோச்சார் மற்றும் வீடியோகான் குரூப் நிறுவனத்தின் தலைவர் வேணுகோபால் தூத் ஆகியோர் இணைந்து பலரைப் போலி நிறுவனங்களின் தலைவராக்கியுள்ளனர்.

அமலாக்கத் துறை

அமலாக்கத் துறை

இதில் பலருக்குத் தாங்கள் ஒரு நிறுவனத்தின் தலைவராக உள்ளோம் என்று கூடத் தெரியாது என்னும், இந்த மூவரும் அவ்வப்போது கேட்கும் இடத்தில் கையெழுத்துப் போட்டு உள்ளதாகவும் அமலாக்க துறையிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Drivers, gardeners were directors in Deepak Kochhar, Venugopal Dhoot’s companies: ICICI bank fraud

Drivers, gardeners were directors in Deepak Kochhar, Venugopal Dhoot’s companies: ICICI bank fraud
Story first published: Wednesday, December 9, 2020, 18:43 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X