உலகம் முழுவதும் கிரிப்டோகரன்சி சந்தையை எப்படிக் கையாளுவது என்பது குறித்துக் குழம்பிக்கொண்டு இருக்கும் வேளையில் துபாய் முக்கியமான முடிவை எடுத்து, உலக நாடுகளுக்கு அதிர்ச்சியையும், கிரிப்டோ முதலீட்டாளர்களுக்குப் புதிய நம்பிக்கையையும் கொடுத்துள்ளது.
கிரிப்டோகரன்சி குறித்தான விவாதம்.. ரிசர்வ் வங்கி கூட்டத்தில் முக்கிய முடிவா?

கிரிப்டோகரன்சி
இந்தியாவில் கிரிப்டோகரன்சியைத் தடை செய்யலாமா அல்லது ஒழுங்கு முறைப்படுத்த வேண்டாமா என்பது குறித்து முழுமையாக முடிவெடுக்காத நிலையில் துபாய் அரசு அந்நாட்டில் இருக்கும் துபாய் வோல்டு டிரேட் சென்டர்-ஐ Crypto Zone ஆக அறிவித்து, கிரிப்டோகரன்சி மற்றும் விர்ச்சுவல் சொத்துக்களுக்கும் ஒழுங்குமுறை அமைப்பாக இருக்கும் எனத் துபாய் அரசு தெரிவித்துள்ளது.

துபாய் அரசுக்கு லாபம்
இந்தப் புதிய கட்டமைப்பின் மூலம் துபாய்க்கு புதிய வர்த்தகம் கிடைக்க அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது, வளைகுடா நாடுகள் மத்தியில் ஏற்கனவே கடுமையான வர்த்தகப் போட்டி இருக்கும் நிலையில் துபாய் அரசின் இந்த அறிவிப்பின் மூலம் தனது ஆதிக்கத்தைக் காட்டியுள்ளது.

துபாய் வோல்டு டிரேட் சென்டர்
துபாய் வோல்டு டிரேட் சென்டரை Crypto Zone-ஆக அறிவித்தது மூலம் டிஜிட்டல் சொத்துகள், டிஜிட்டல் பிராடெக்ட்கள், டிஜிட்டல் எக்ஸ்சேஞ்ச் போன்ற அனைத்து விர்ச்சுவல் சொத்துக்கள் தொடர்பான வர்த்தகத்தையும் முதலீட்டையும் நிர்வாகம் செய்ய உள்ளது.

கடுமையான கட்டுப்பாடுகள்
மேலும் இந்தப் புதிய கட்டமைப்பின் மூலம் முதலீட்டாளர் பாதுகாப்பு, பணமோசடி எதிர்ப்பு, பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதை எதிர்த்துப் போராடுதல், இணக்கம் மற்றும் எல்லை தாண்டிய ஒப்பந்த ஓட்டங்களைக் கண்டறிவதற்கான கடுமையான கட்டுப்பாட்டு விதிகளையும் உருவாக்க துபாய் அரசு முடிவு செய்துள்ளது.

துபாய் அரசின் முயற்சிகள்
செப்டம்பர் மாதம் UAE செக்யூரிட்டீஸ் அண்ட் காமாடிட்டிஸ் அத்தாரிட்டி மற்றும் துபாய் வோல்டு டிரேட் சென்டர் அத்தாரிட்டியும் இணைந்து கிரிப்டோ சொத்துக்களுக்கான ஒப்புதல் மற்றும் உரிமம் வழங்குவதற்கான கட்டமைப்பை உருவாக்க ஒப்பந்தம் செய்தது குறிப்பிடத்தக்கது.

கிரிப்டோ முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை
அக்டோபர் மாத டிஜிட்டல் டோக்கன்ஸ்-க்கான துபாய் அரசின் DIFC அமைப்பு புதிய ஒழுங்குமுறை கட்டமைப்பு விதிகளை அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது. சீனா-வை தவிரப் பல நாடுகள் தொடர்ந்து கிரிப்டோகரன்சி மற்றும் டிஜிட்டல் சொத்துகளைத் தடை செய்யாமல் ஒழுங்கு முறைப்படுதுவதில் தீவிரம் காட்டுவது கிரிப்டோ முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது.

கிரிப்டோ முதலீட்டில் அதிக லாபம்
துபாய் அரசின் இந்த நடவடிக்கை மூலம் எண்ணெய் வளம் மிக்க நாடுகள் துபாய் லோல்டு டிரேட் சென்டர் வாயிலாகக் கிரிப்டோகரன்சி மீது அதிகம் முதலீடு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இனி வரும் நாட்களின் கிரிப்டோகரன்சி விலை பெரிய அளவில் அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது.