கொரோனா எதிரொலி: 75 கோடி ரேஷன் கார்ட் பயனர்கள் 6 மாத சரக்கை வாங்கிக் கொள்ளலாம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் அன்றாடம் உழைத்துச் சாப்பிடும் கூலித் தொழிலாளர்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு இருக்கும் மிகப் பெரிய ஆறுதல் ரேஷன் கடைகள்.

 

இந்த ரேஷன் கடைகளில் கொடுக்கும் அரிசி, பருப்பு, கோதுமை, சர்க்கரை, பருப்பு வகைகளை நம்பித் தான் பல குடும்பங்களின் சமையல் அடுப்பு எரிந்து கொண்டு இருக்கிறது.

இப்போது கொரோன வைரஸ்-ன் தாக்கம் அதிகரித்து இருப்பதால், மத்திய அரசு ஒரு அதிரடி முடிவு எடுத்து இருக்கிறார்கள். அப்படி என்ன முடிவு செய்து இருக்கிறார்கள்

என் எஃப் எஸ் ஏ சட்டம்

என் எஃப் எஸ் ஏ சட்டம்

தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் படி, ஒரு கிலோ அரிசி 3 ரூபாய்க்கும், ஒரு கிலோ கோதுமை 2 ரூபாய்க்கும், பருப்பு வகைகள் மற்றும் தானியங்கள் ஒரு கிலோ ஒரு ரூபாய்க்கும் என மானிய விலையில் இந்தியாவில் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்தியாவில் சுமார் 5 லட்சம் ரேஷன் கடைகள் இருக்கிறதாம்.

ஒரு மாதம்

ஒரு மாதம்

ஒரு மாதத்தில், ஒரு ரேஷன் அட்டை பயனருக்கு சுமாராக 5 கிலோ உணவு தானியங்களை, 75 கோடி பேருக்கு, 5 லட்சம் ரேஷன் கடைகள் வழியாக வழங்கி வருகிறது அரசு. இந்த மானிய விலை பொது விநியோகத் திட்டத்துக்கு சுமாராக ஆண்டுக்கு 1.4 லட்சம் கோடி ரூபாய் செலவாகிறதாம்.

பொருள் விநியோகம்
 

பொருள் விநியோகம்

தற்போது ஒரு நபர் அதிகபட்சமாக இரண்டு மாதங்களுக்கான அரிசி, கோதுமை, பருப்புகளை, தங்களுக்கான ரேஷன் கடைகளில் இருந்து வாங்கிக் கொள்ள முடிகிறது. ஆனால் பஞ்சாப் மாநில அரசு ஏற்கனவே 6 மாதத்துக்கான அரிசி பருப்பு கோதுமைகளை வழங்கத் தொடங்கி இருக்கிறதாம்.

6 மாத சரக்கு

6 மாத சரக்கு

இப்போது கொரோனா வைரஸ் பரவல் காரணத்தால், ஒரே நேரத்தில் மக்கள் 6 மாதத்துக்கான அரிசி, பருப்பு, கோதுமை போன்றவைகளை வாங்க விரைவில் அனுமதிக்கப்படுவார்கள் என மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமக்ச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் சொல்லி இருக்கிறார்.

மாநில அரசுகள் கடிதம்

மாநில அரசுகள் கடிதம்

கொரோனா வைரஸ் பிரச்சனையால், ரேஷன் கடைகளில், மக்கள் நெரிசலை சமாளித்து, போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க, மத்திய அரசு , மாநில அரசுகளுக்குச் சொல்லி இருக்கிறார்களாம். அரசு கையில் சுமார் 272 டன் அரிசி மற்றும் 162 டன் கோதுமை உணவு தானியங்கள் இருக்கிறதாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

due to coronavirus 75 crore PDS beneficiaries will be allowed to take 6 month quota grains in one go

Due to coronavirus 75 crore ration card beneficiaries will be allowed to lift 6 month quota of grain in one go. Central food and public distribution minister said.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X