டெலிவரி சேவையில் அதிக ஆட்களை சேர்க்கும் நிறுவனங்கள்.. லாக்டவுன் எதிரொலியால் திடீர் மாற்றம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியா முழுவதும் 2வது கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அனைத்து மாநிலங்களுக்கும் தளர்வுகளுடன் கூடிய லாக்டவுன் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதற்கிடையில் இந்தியாவின் வர்த்தகத் தலைநகராக விளங்கும் மகாராஷ்டிராவில் அடுத்த 2 வாரத்திற்கு அதாவது 15 நாட்களுக்கு முழு ஊரடங்குக்கு இணையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

மக்களுக்கான அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ள நிலையில், அத்தியாவசிய சேவை பிரிவில் அல்லாத அனைத்துக் கடைகள், மால்கள், ஷாப்பிங் சென்டர்கள் இன்று இரவு 8 மணி முதல் மே 1 ஆம் தேதி வரை முழுமையாக மூடப்படும் என்று மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.

 24 மணிநேரமும் டெலிவரி

24 மணிநேரமும் டெலிவரி

இதேவேளையில் மகாராஷ்டிராவில் ஏற்கனவே அத்தியாவசிய பொருட்களை அனைத்து நாட்களிலும் 24x7 மணிநேரமும் டெலிவரி செய்ய ஆன்லைன் உணவு டெலிவரி சேவை நிறுவனமான ஸ்விக்கி, சோமேட்டோ ஆகிய இரு நிறுவனங்களுக்கு மகாராஷ்டிர அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், இந்த 15 நாட்களில் மக்களுக்குப் போதுமான பொருட்களை ஆன்லைன் ஆர்டர் வாயிலாக டெலிவரி பெற முடியும்.

 2020 லாக்டவுன்

2020 லாக்டவுன்

2020 லாக்டவுன் அறிவிக்கப்பட்ட போதும் இந்தியா முழுவதும் ஆன்லைன் சேவையைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை தாறுமாறாக அதிகரித்து இன்று நம் வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. இந்த மாபெரும் மாற்றத்தில் தான் முகேஷ் அம்பானியின் ஜியோமார்ட் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்று வருகிறது. 2020 லாக்டவுன்-க்கு பின்பு அனைத்து டிஜிட்டல் மற்றும் அன்லைன் சேவை நிறுவனங்களும் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்று வருகிறது.

 தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை
 

தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை

இந்நிலையில் தற்போது அமெரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளை விடவும் இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் காரணத்தால் அனைத்து மாநிலங்களிலும் லாக்டவுன் கட்டுப்பாடுகள் அடுத்தச் சில நாட்களில் கடுமையாக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையைச் சமாளிக்கப் பெரிய ஈகாமர்ஸ் நிறுவனங்கள் மட்டும் அல்லாமல் சிறு ஆன்லைன் சேவை நிறுவனங்களும் அதிகளவில் ஊழியர்களை நியமித்துள்ளது.

 பிளிப்கார்ட், பிக்பேஸ்கட், ஸ்விக்கி,

பிளிப்கார்ட், பிக்பேஸ்கட், ஸ்விக்கி,

இதன் படி பிளிப்கார்ட், பிக்பேஸ்கட், ஸ்விக்கி, சோமேட்டோ, டெல்ஹிவரி, டன்சோ, ஜியோமார்ட் போன்ற முன்னணி நிறுவனங்கள் டெலிவரி மற்றும் சப்ளை செயின் பிரிவில் அதிகளவிலான ஊழியர்களைப் பணியில் நியமித்து வருகிறது. இதன் மூலம் 2ஆம் கொரோனா அலையில் உருவாகும் வர்த்தகத்திற்குச் சிறப்பான வர்த்தகத்தை அளிக்க முடியும் என நம்புகிறது ஆன்லைன் சேவை நிறுவனங்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Ecommerce firms ramp up hiring on delivery and supply chain, amid rising lockdown restrictions

Ecommerce firms ramp up hiring on delivery and supply chain, amid rising lockdown restrictions
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X