ஆபாச பட சர்ச்சை.. பண மோசடி.. அடுத்தடுத்து சிக்கும் ராஜ் குந்த்ரா.. புதிய வழக்குகள் பாய்கிறதா..? .

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சமீபத்திய நாட்களாகவே பாலிவுட்டினையும் தாண்டி மிக மிக பர பரப்பாக பேசப்படும் விஷயங்களில் ஒன்று, நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா பற்றி தான்.

 

ஆரம்பத்தில் ஆபாச படங்களை எடுத்து வெளிட்டதாக புகார்கள் எழுந்த நிலையில், தற்போது நிதி முறைகேடிலும் ஈடுப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

மெடிக்கல் தேவைக்காக ரூ.1 லட்சம் பெறலாம் பிஎஃப்-பில் பதிவு செய்யப்பட்ட ஊழியர்களுக்கு சூப்பர் செய்தி!

ஆரம்பத்தில் ஆபாச படங்களில் மாடல்களை நடிக்க வைத்து, அதை ஆபாச இணையதளத்தில் அப்லோடு செய்து, பணம் சம்பாதித்தாக , பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர், ராஜ் குந்த்ரா மீது குற்றம் சாட்டப்பட்டது. இதனையடுத்து கடந்த ஜூலை 20ம் தேதியன்று ராஜ் குந்த்ரா திடீரென நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நடிக்க வாய்ப்பு கேட்டு வரும் மாடல்கள்

நடிக்க வாய்ப்பு கேட்டு வரும் மாடல்கள்

குறிப்பாக திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு வரும் மாடல்கள் மற்றும் பிரபலங்களை ஆபாச படங்களில் நடிக்க வைத்து, அதனை ஹாட்ஷாட்ஸ் எனப்படும் மொபைல் செயலியில் ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா பதிவேற்றியுள்ளார். இதனையடுத்து தான் அவரது கூட்டாளி ஒருவரையும், ராஜ் குந்த்ராவையும் ஜூலை 27 வரையில் காவலில் விசாரிக்க மும்பை நீதிமன்றம் அனுமதி கொடுத்தது.

ஹாட்ஷாட்ஸ் செயலி

ஹாட்ஷாட்ஸ் செயலி

இது குறித்து நடிக்கை ஷில்பா ஷெட்டியிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்திய நிலையில், இதற்கும் தனது கணவருக்கும் எந்த தொடர்பும் இல்லை என ஷில்பா கூறினார். இதற்கிடையில் ராஜ் குந்த்ராவின் உறவினர் லண்டனை சேர்ந்த பிரதீப் பக்ஷி என்பவர் தான் ஹாட்ஷாட்ஸ் என்ற செயலியை நடத்தி வந்ததாகவும் ஷில்பா ஷெட்டி கூறினார்.

வெறும் கவர்ச்சி படங்கள் தான்
 

வெறும் கவர்ச்சி படங்கள் தான்

எனது கணவர் தயாரித்தது கவர்ச்சி படங்களே தவிர ஆபாச படங்கள் அல்ல, இந்த இரண்டிற்கும் வேறுபாடு உள்ளது. ஹாட்ஷாட்ஸ் செயலியில் எத்தகைய படங்கள் விற்பனை செய்யப்பட்டன, அதன் செயல்பாடுகள் என்ன என்பது குறித்து தனக்கு தெரியாது என்றும் கூறியுள்ளார்.

லட்சங்களில் வருமானம்

லட்சங்களில் வருமானம்

ஆனால் ஆபாச படங்கள் மட்டும் அல்ல, ராஜ் குந்த்ரா பற்றி அடுத்தடுத்து திடுக்கிடும் தகவல்கள் கிடைத்து வருகின்றன. ராஜ் குந்த்ரா கடந்த 18 மாதங்களாக ஆபாச படங்கள் தயரித்து ஈடுபட்டு வந்துள்ளார். லாக்டவுன் சமயத்தில் தொழில் நன்றாக போகவே, ஒரு நாளைக்கு பல லட்சங்கள் வருமானமும் பார்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பண மோசடி

பண மோசடி

சுமாராக ஒரு நாளைக்கு 8 லட்சம் ரூபாய் இந்த தொழில் மூலம் வருமானம் ஈட்டி வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து ஷில்பா தனது கணவருக்கும் இதற்கும் தொடர்பில்லை என்று கூறினாலும், போதிய ஆதாரங்கள் இருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இந்த நிலையில் ராஜ் குந்த்ரா மீது பண மோசடி தடுப்பு சட்டம் மற்றும் அன்னிய செலவாணி மேலாண்மை குறித்த சட்டமும் பாயலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்னும் சில வழக்குகள்

இன்னும் சில வழக்குகள்

ஆக பண மோசடி மூலம் சம்பாதித்த சொத்துகளை அரசாங்கம் பறிமுதல் செய்யலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் ராஜ் குந்த்ரா 119 வீடியோக்களை 1.2 மில்லியன் டாலருக்கு விற்பனை செய்ய தயாராகி வந்ததாகவும் மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர். மொத்தத்தில் ராஜ் குந்த்ரா மீது இன்னும் சில வழக்குகள் பாயலாம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

ED may file a case aganist Raj Kundra the money laundering act and foreign exchange management act

Bollywood actor shilpa shetty’s husband Raj Kundra may face charges of money laundering, foreign exchange violation
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X