உலகின் பெரும் பணக்காரரான டெஸ்லா நிறுவனர் எலன் மஸ்க் அண்மையில் "நான் மர்மமான முறையில் இறந்தால் அதற்கான காரணத்தை நீங்கள் தெரிந்துகொண்டால் மகிழ்ச்சி" என எலான் மஸ்க் செய்த ட்வீட் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதை பார்த்த அமெரிக்காவின் பிரபல யூடியூபர், மாயாண்டி குடும்பத்தார் படத்தில் வரும் காமெடி போல "எப்பா நீ செத்து போய்ட்டா இந்த ரெண்டு செருப்பும் எனக்கு தானப்பா" எனபது போல டிவிட்டரை கேட்டுள்ளது இப்போது வைரல் ஆகி வருகிறது.
அரசனை நம்பி புருஷனை கைவிட்ட எலான் மஸ்க்.. டெஸ்லா நிலைமை என்ன தெரியுமா..?

சர்ச்சை டிவிட்
உலகின் பெரும் பணக்காரரான டெஸ்லா நிறுவனர் எலன் மஸ்க், டிவிட்டரில் அடிக்கடி சர்ச்சையான கருத்துக்களைப் பதிவிடுவார். அவரது சில டிவிட்டர் கருத்துக்கள் டிவிட்டரால் அவ்வப்போது நீக்கப்பட்டுள்ளது. அதனால் டிவிட்டரில் கருத்து சுதந்திரம் இல்லை என கூறியும் உள்ளார். அண்மையில் ட்விட்டர் நிறுவனத்தின் பெரும் பகுதி பங்குகளை இவர் வாங்கியதை அடுத்து, டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கைபற்றி விடுவார் என கூறப்பட்டது.

டிவிட்டர்
மக்களின் அந்த கருத்தை உறுதி செய்யும் விதமாக சில தினங்களில் டிவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கினார் என செய்திகள் வந்தது.

மிரட்டல்
தொடர்ந்து உக்ரைனை தக்கி வரும் ரஷ்யாவுக்கு எதிராக போராட, தனது ஸ்டார் லிங்க் நிறுவனத்தின் இணையச் சேவையை உக்ரைனுக்கு அளிக்க தொடங்கினார் எலன் மஸ்க். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ரஷ்ய விண்வெளித் தலைவர் டிமிட்ரி ரோகோசின் "மர்மமான முறையில் நீங்கள் இறப்பீர்கள்" என எச்சரித்து இருந்தார்.

எலான் மஸ்க் தாயார்
அதை பார்த்த எலான், "நான் மர்மமான முறையில் இறந்தால் அதற்கான நீங்கள் தெரிந்துகொண்டால் மகிழ்ச்சி" என எலான் மஸ்க் டிவிட்டரில் பதிவிட்டு இருந்தார். அதை பார்த்த அவரது தாயார், இது வேடிக்கையாக இல்லையா என கருத்து தெரிவித்து இருந்தார். அதற்கு எலான் மஸ்க் என்னை மன்னித்துவிடுங்கள், நான் உயிருடன் இருக்க முடிந்த அனைத்தையும் செய்கிறேன் என பதில் அளித்துள்ளார்.

மிஸ்டர் பீஸ்ட்
எலன் மஸ்கின் அந்த டிவிட்டர் பதிவை பார்த்த பிரபல மிஸ்டர் பீஸ்ட், யூடியூபர் ஜிம்மி டொனால்ட்சன், மாயாண்டி குடும்பத்தார் படத்தில் வரும் "எப்பா நீ செத்து போய்ட்டா இந்த செருப்பு எனக்கு தானே" காமெடி போல, நீங்கள் செத்தால் டிவிட்டர் நிறுவனத்தை எனக்கு அளித்துவிடுங்கள் என பதிவிட்டு இருந்தார்.

ஒப்புக்கொண்ட எலான் மஸ்க்
அதற்கு யாரும் எதிர்பார விதமாக பதில் அளித்த எலன் மஸ்க், ஓகே என்றார். உடனே மிஸ்டர் பீஸ்ட் யூடியூபர், "நகைச்சுவைகள் ஒருபுறம் இருக்கட்டும், பாதுகாப்பாக இருங்கள்! " என பதில் அனுப்பினார்.

மாயாண்டி குடும்பத்தார் காமெடி
மாயாண்டி குடும்பத்தார் படத்தில் வில்லன் அப்பாவுக்குக் கடைசி மகனாக சிங்கம் புலி நடித்து இருப்பார். அதில் அவரது அப்பாவை சிங்கம் புலி பார்க்கும் போது எல்லாம், "எப்பா நீ செத்து போய்ட்டா இந்த செருப்பு எனக்கு தானே", "எப்பா நீ செத்து போய்ட்டா இந்த கட்டில் எனக்கு தானே" என கூறுவார். அதற்கு என்னை சாக சொல்றியாடா என அவரது அப்பா கேட்பார். இது அந்த படத்தில் அனைவரும் ரசித்து பார்த்து சிரித்த காமெடியாக இருந்தது. இப்போது அது போல உலக பணக்காரர் எலன் மஸ்க் போட்ட டிவிட்டருக்கு ஒருவர் கேட்டுள்ளது வைரலாகி வருகிறது.