டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் டிவிட்டரில் கோடிக்கணக்கான மக்கள் முன்னிலையில் உலகின் மிகப்பெரிய ஈகாமர்ஸ் மற்றும் டெக் நிறுவனமான அமேசான் தலைவர் ஜெப் பெசோஸ்-ஐ CopyCat என அசிங்கப்படுத்தியுள்ளார்.
எலான் மஸ்க்-ன் இந்த டிவீட் சமுக வலைத்தளத்தில் தீயாய் பரவி வருகிறது. பலர் எலான் மஸ்க்-கிற்குச் சாதகமாகக் கருத்துப் பதிவிட்டாலும், பலர் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
அமெரிக்க வர்த்தக உலகின் மிகப்பெரிய தலைகளாக இருக்கும் இவர்கள், சமுக வலைத்தளத்தில் அசிங்கப்படும் அளவிற்கு என்ன நடந்தது..?
ஜாக் மா-வை ஓரம்கட்டிய டெஸ்லா ராக்ஸ்டார் 'எலான் மஸ்க்'..!

ஜெப் பெசோஸ்
அமேசான் நிறுவனம் தானியங்கி கார் தொழில்நுட்பத்தில் இறங்கப் பல வருடமாக முயற்சி செய்து வருகிறது. இதற்காக எலக்ட்ரிக் டிரக் தயாரிப்பு நிறுவனமான ரிவியன் மற்றும் self-driving ஸ்டார்ட்அப் நிறுவனமான Aurora ஆகிய நிறுவனங்களை ஏற்கனவே கைப்பற்றியுள்ள நிலையில், வெள்ளிக்கிழமை மற்றொரு self-driving கார் ஸ்டார்ட்அப் நிறுவனமான Zoox-ஐ 1 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகைக்குக் கைப்பற்றுவதாக அறிவித்து ஜெப் பெசோஸ் தலைமையிலான அமேசான்.காம்

டெஸ்லா
எலான் மஸ்க் தலைமை வகிக்கும் டெஸ்லா பேட்டரி கார் நிறுவனம் தான் தற்போது உலகிலேயே சாலையில் இயங்கக்கூடிய மிகச் சிறப்பான self-driving கார். அதுவும் எந்தொரு முன்னணி நிறுவனமும் கொடுக்க முடியாத அதிநவீன காரை டெஸ்லா உருவாக்கி வருகிறது.
இதற்குப் போட்டியாகவும், எலான் மஸ்க் மற்றும் டெஸ்லாவின் ஐடியாவை காப்பி அடித்துப் போட்டியை உருவாக்கும் ஓரே நோக்கத்துடன் ஜெப் பெசோஸ் இதைச் செய்து வருகிறார் என்பது எலான் மஸ்க்-ன் கோபம்.

ப்ளூ ஆர்ஜின்
இதேபோல் எலான் மஸ்க்-ன் ஸ்பேஸ்-X நிறுவனத்திற்கும் வர்த்தகத்திற்கும் போட்டியாக அமேசான் ஜெப் பெசோஸ் ராக்கெட் லான்சிங் சேவை, செயற்கைக்கோள் இண்டர்நெட் சேவை பிரிவில் வர்த்தகம் செய்ய ப்ளூ ஆர்ஜின் என்ற நிறுவனத்தை உருவாக்கினார்.

காப்பிகேட்
இந்நிலையில் ஜெப் பெசோஸ், எலான் மஸ்க்-இன் self-driving கார் சேவையில் போட்டிப் போடுவதற்காக Zoox நிறுவனத்திற்கு அவர் போட்ட டிவீட்.

செயற்கைக்கோள்
ஜெப் பெசோஸ்-ன் ப்ளூ ஆர்ஜின் நிறுவநம் 3000 இண்டர்நெட் செயற்கைக்கோள் விண்வெளியில் செலுத்தத் திட்டமிடுவது குறித்து வெளியான செய்திக்கு எலான் மஸ்க் இதேபோலக் காப்பிகேட் என டிவீட் செய்திருந்தார்.

அமேசான்.காம்
சில நாட்களுக்கு முன்பு அலெக்ஸ் என்பவர் அமேசான் தளத்தில் தான் கொரோனா பற்றி எழுதிய புத்தகம் நீக்கப்பட்டது குறித்து டிவீட் செய்திருந்தார். இதற்கு எலான் மஸ்க், ஜெப் பெசோஸ் அவர்களை டேக் செய்து "This is insane " என்றும் அடுத்த டிவீட்-ல் அமேசான் உடன் பிரக்அப் செய்ய நேரம் வந்துவிட்டது. Monopolies தவறு என டிவீட் செய்திருந்தார்.