எலான் மஸ்க் செய்த சேட்டையை கொஞ்சம் நீங்களே பாருங்க..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகின் மிகப்பெரிய எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா-வின் தலைவரான எலான் எஸ்க் எந்த அளவிற்குத் தனது நிறுவனத்தையும் புதிய தொழில்நுட்பத்தை எந்த அளவிற்கு நேர்த்தியாக மெருகேற்றி மக்களுக்கு அளிக்கிறாரோ, அதே அளவிற்கு டிவிட்டரில் அவருடைய டிவீட்களும் அதிரடியாகவே இருக்கும்.

 

ஒருபக்கம் டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ், ஸ்டார்லிங்க், போரிங் கம்பெனி, சோலர் சிட்டி, பேட்டரி தொழிற்சாலை, ஜிகா பேக்ட்ரி, ஜிகா பிரஸ், நியூராலிங்க் எனப் பசியாக இருந்தாலும் எலான் மஸ்க்-ஐ டிவிட்டரில் இருந்து பிரிக்க முடியாது.

அசத்தும் அடுத்தடுத்த இந்தியர்கள்.. எலான் மஸ்க் அளவுக்கு சம்பளம்..!

 66.8 மில்லியன் பாலோவர்கள்

66.8 மில்லியன் பாலோவர்கள்

சுமார் 66.8 மில்லியன் பாலோவர்களைக் கொண்ட எலான் மஸ்க் தான் நினைத்துப் பங்குச்சந்தையில் ஒரு நிறுவனத்தை அதளப் பாதாளத்திற்குக் கொண்டு செல்ல முடியும், பாதாளத்தில் இருக்கும் ஒரு நிறுவனத்தை உச்சத்திற்கும் கொண்டு செல்ல முடியும் அந்த அளவிற்கு மிகப்பெரிய influencer ஆக உள்ளார்.

 எலான் மஸ்க் டிவீட்

எலான் மஸ்க் டிவீட்

சமீபத்தில் கூட எலான் மஸ்க் தனது பதவிகளை விட்டுவிட்டு influencer ஆக இருக்கலாம் என டிவீட் செய்திருந்தார், இந்த டிவீட்டை இவர் விளையாட்டுக்குப் பதிவிட்டாலும் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலை உருவானது மறுக்க முடியாது. அந்த வகையில் எலான் மஸ்க் 2021 பதிவிட்ட அதிரடி டிவீட்டுகளை ஒரு ரவுண்டு பார்ப்போம் வாங்க.

 கேம்ஸ்டார்ங்க் - ஜனவரி
 

கேம்ஸ்டார்ங்க் - ஜனவரி

எலான் மஸ்க் ஜனவரி 27ஆம் தேதி அமெரிக்காவின் முன்னணி வீடியோ கேம் ரீடைல் நிறுவனமான கேம்ஸ்டாப் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்ட போது எலான் மஸ்க் தனது டிவிட்டரில் கேம்ஸ்டார்ங்க் என டிவீட் செய்தார், இவர் டிவீட் செய்த அடுத்த சில மணிநேரத்தில் 50 சதவீதம் கேம்ஸ்டாப் பங்குகள் உயர்ந்தது. இதன் மூலம் பங்குச்சந்தையில் இவருடைய ஆதிக்கம் வெளிப்பட்டது.

 டோஜ்காயின் - பிப்ரவரி

டோஜ்காயின் - பிப்ரவரி

உலகம் முழுவதும் பிட்காயின் மற்றும் எதிரியம் முதலீட்டுச் சந்தையில் மூழ்கியிருக்கும் போது ஓரே வரியில் மொத்த கிரிப்டோ முதலீட்டாளர்களையும் டோஜ்காயின் பக்கம் திருப்பினார் எலான் மஸ்க்.

 பிட்காயின் பேமெண்ட் - மார்ச்

பிட்காயின் பேமெண்ட் - மார்ச்

பிட்காயின் மற்றும் பிளாக்செயின் மீது தீரா காதல் கொண்ட் எலான் மஸ்க் தனது டெஸ்லா விற்பனை தளத்தில் பிட்டியினை பேமெண்ட் ஆக அறிவித்தார். இதன் மூலம் இனி மக்கள் டெஸ்லா கார்களைப் பிட்காயின் வாயிலாகப் பேமெண்ட் செய்து வாங்க முடியும் என அறிவித்தார். அப்போது பிட்காயின் விலை புதிய உச்ச அளவான 44,200 டாலரை தொட்டது.

 டோஜ்பாதர் - ஏப்ரல்

டோஜ்பாதர் - ஏப்ரல்

எலான் மஸ்க் அமெரிக்காவின் புகழ்பெற்ற Saturday Night Live நிகழ்ச்சியில் கலந்துகொள்வது குறித்து வெளியிட்ட டிவீட்டில் தன்னை டோஜ்பாதர் என அறிவித்து டிவீட் செய்தார். இந்த டிவீட் செய்து 24 மணிநேரத்தில் டோஜ்காயின் விலை 20 சதவீதம் வரையில் உயர்ந்தது.

 பிட்காயின் பேமெண்ட் ரத்து - மே

பிட்காயின் பேமெண்ட் ரத்து - மே

டெஸ்லா பிட்காயினைப் பேமெண்ட் ஆக ஏற்க உள்ளதாக அறிவித்த பின்பு பிட்காயின் உற்பத்திக்கு அதிகப்படியான கனிமவளம் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் பயன்படுத்துவதால், தனது கொள்கைக்கு மாறாக உள்ளது என அறிவித்து டெஸ்லா தளத்தில் பிட்காயின் பேமெண்ட்-ஐ ரத்துச் செய்தார்.

 பிட்காயின் விற்பனை - ஜூன்

பிட்காயின் விற்பனை - ஜூன்

பிட்காயின் பேமெண்ட்-ஐ ரத்து செய்த டெஸ்லா தன்னிடம் இருந்த பிட்காயினில் 10 சதவீதத்தை விற்பனை செய்ததுள்ளது, எப்போது பிட்காயின் உற்பத்திக்குக் குறைந்தபட்சம் 50 சதவீதம் கிளீன் எனர்ஜி பயன்படுத்தப்படுகிறதோ அப்போது பிட்காயின் மீண்டும் பேமெண்ட் ஆகச் சேர்க்க உள்ளதாக அறிவித்தார் எலான் மஸ்க்.

 எதிரியம் - ஜூலை

எதிரியம் - ஜூலை

எலான் மஸ்க் தனது சொந்த முதலீட்டில் கிரிப்டோகரன்சியை வைத்துள்ளதாக அறிவித்த பின்பு எதிரியம் விலை சுமார் 12 சதவீதம் அதிகரித்து. அப்போது டோஜ்காயின் குறித்து ஒரு மீம் வெளியிட்டார் எலான் மஸ்க்.

 ஸ்டார்ஷிப் - ஆகஸ்ட்

ஸ்டார்ஷிப் - ஆகஸ்ட்

ஆகஸ்ட் மாதம் முழுவதும் எலான் மஸ்க் கிரிப்டோகரன்சி மற்றும் டெஸ்லா-வை பற்றிப் பேசாமல் முழுநேரம் ஸ்பேஸ்எக்ஸ் திட்டத்தில் அதிகப்படியான கவனத்தைத் செலுத்தினார். இதன் விளைவு ஸ்டார்ஷிப் முழுமையாகக் கட்டமைக்கப்பட்டு உள்ளது.

 போல்கி - செப்டம்பர்

போல்கி - செப்டம்பர்

டோஜ்காயின் மற்றும் ஷிபா இனு பற்றித் தொடர்ந்து பேசி வரும் எலான் மஸ்க் உண்மையிலேயே ஷிபா இனு நாய்க் குட்டியை வாங்கி அதற்கு Floki எனப் பெயர் வைத்த டிவீட் வெளியானது. இந்த டிவீட் வெளியான அடுத்த ஒரு நாளில் Floki பெயரில் பல கிரிப்டோககரன்சி உருவாக்கப்பட்டுத் தாறுமாறான உயர்வைப் பதிவு செய்தது.

 ஸ்டார்லிங்க் - அக்டோபர்

ஸ்டார்லிங்க் - அக்டோபர்

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் செயற்கைக்கோள் பிராண்ட்பேன்ட் சேவையான ஸ்டார்லிங்க் சேவையை விமானத்தில் பயன்படுத்துவதற்காக விமான நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிவித்தார். இந்த அறிவிப்பு வெளியான உடன் இத்துறையில் ஏற்கனவே இருக்கும் GOgo நிறுவனத்தின் பங்கு மதிப்பு 5 சதவீதம் வரையில் சரிந்தது.

 டெஸ்லா பங்கு விற்பனை - நவம்பர்

டெஸ்லா பங்கு விற்பனை - நவம்பர்

டெஸ்லா பங்குகள் மூலம் அதிகப்படியான வருமானத்தைப் பெற்றுள்ள நிலையில், வரிச் செலுத்துவதில் இருந்து தப்பிக்க 10 சதவீதம் டெஸ்லா பங்குகளை விற்பனை செய்யலாமா என டிவிட்டர் பாலோவர்களிடம் எலான் மஸ்க் கேட்ட கேள்வி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

 டோஜ்காயின் பேமெண்ட் - டிசம்பர்

டோஜ்காயின் பேமெண்ட் - டிசம்பர்

டெஸ்லா தளத்தில் இருக்கும் merchandise பொருட்களை டோஜ்காயின் மூலம் பெற முயற்சியை டெஸ்லா எடுத்துள்ளதாக அறிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Elon musk most important tweets of 2021 which made people crazy

Elon musk most important tweets of 2021 which made people crazy எலான் மஸ்க் செய்த சேட்டையைக் கொஞ்சம் நீங்களே பாருங்க..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X