எலான் மஸ்க்-ன் 'ஸ்டார்லிங்க்' திட்டம் ஆபத்தானது.. அப்போ இந்தியாவுக்கு வராதா..?!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகின் டாப் 10 பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ஸ்டார்லிங்க் என்ற பிராட்பேண்ட் இண்டர்நெட் சேவையில் புரட்சிகரமான திட்டத்தை தனது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் வாயிலாக செயல்படுத்தி வருகிறார்.

 

தற்போது உலக நாடுகளில் இருக்கும் டெலிகாம் நிறுவனங்கள் தனது நாட்டிற்குள்ளேயே அதிகளவிலான வர்த்தக போட்டிகளை எதிர்கொண்டு வரும் நிலையில் ஸ்டார்லிங்க் நாடுகள், கண்டங்கள், எல்லைகளை கடந்த ஒரு இண்டர்நெட் சேவையாக உள்ளது.

எச்சரிக்கையா இருங்க.. இந்த நிறுவனங்களை நம்பாதீங்க.. SBI alert..!

இந்நிலையில் இந்த சேவை விண்வெளி பாதுகாப்பு மற்றும் சுற்றுசூழ்நிலைக்கு மிகவும் ஆபத்தானது என இண்டர்நெட் சேவையில் இருக்கும் நிறுவனங்கள், டெலிகாம் கட்டுப்பாட்டு அமைப்புகள், நிபுணர்கள் என பலரும் ஒன்றிணைந்து கூறுகின்றனர்.

 சிங்கம் எலான் மஸ்க்

சிங்கம் எலான் மஸ்க்

உலகம் முழுவதும் காடு, மலை, கடல், பணி பிரதேசம் என அனைத்து இடங்களுக்கும் அதிவேக இண்டர்நெட் சேவையை அளிக்க முடியுமா? அதுவும் ஒரே நிறுவனம் அனைத்து நாடுகளிலும் இதை செய்ய முடியுமா? என்றால் எலான் மஸ்க் நிறுவனத்தால் முடியும் இப்படிப்பட்ட ஒரு திட்டம் தான் ஸ்டார்லிங்க்.

 40,000 செயற்கைகோள்

40,000 செயற்கைகோள்

பூமி முழுவதையும் கவர் செய்யும் படை சுமார் 40,000 செயற்கைகோள் கொண்டு எவ்விதமான கேபிள் இணைப்பும் இல்லாமல் நேரடியாக உங்கள் வீடு, கார், கப்பல் என அனைத்து இடத்திலும் அதிக வேக இண்டர்நெட் சேவையை பெற முடியும். தற்போது எலான் மஸ்க் தலைமையிலான ஸ்டார்லிங்க் சுமார் 12,000 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தியுள்ள நிலையில் 30,000 செயற்கைகோள்களை அனுப்ப அனுமதி கோரியுள்ளது.

 ஸ்டார்லிங்க் ஆபத்தானது?!
 

ஸ்டார்லிங்க் ஆபத்தானது?!

இந்நிலையில் தான் டெலிகாம் நிறுவனங்கள், டெலிகாம் கட்டுப்பாட்டு அமைப்புகள், நிபுணர்கள் அனைவரும் இணைந்து ஸ்டார்லிங்க் திட்டத்தை ஆபத்தானது என்றும், இண்டர்நெட் சேவையில் இது கிட்டதட்ட மோனோபோலியாக விளங்குகிறது என குற்றம்சாட்டியுள்ளது.

 ஐரோப்பிய யூனியன் புதிய இண்டர்நெட் திட்டம்

ஐரோப்பிய யூனியன் புதிய இண்டர்நெட் திட்டம்

எலான் மஸ்க் திட்டம் முழுமையாக செயல்பட துவங்கும் முன்பே பல முன்னணி நிறுவனங்களை பயமுறுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். ஸ்டார்லிங்க் திட்டத்திற்கு போட்டியாக ஐரோப்பிய யூனியன் புதிய இண்டர்நெட் சேவை திட்டத்தை துவங்கியுள்ளது. இத்திட்டம் குறித்து அறிவிப்பு இந்த வருடத்தின் இறுதிக்குள் வெளியாகும் என கூறப்படுகிறது.

  ஸ்டார்லிங்க் திட்டத்திற்கு எதிர்ப்பு

ஸ்டார்லிங்க் திட்டத்திற்கு எதிர்ப்பு

தற்போது எலான் மஸ்க்-ன் ஸ்டார்லிங்க் திட்டத்திற்கு வயாசேட் இன்க், ஒன்வெப் குளோபல் லிமிடெட், ஹூக்ஸ் நெட்வொர்க் சிஸ்டம்ஸ், போயிங் ஆகிய நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதில் சில நிறுவனங்கள் ஸ்டார்லிங்க செயற்கை கோள்கள் தங்களது கருவிகளுக்கான சிக்னலை தடை செய்கிறது எனவும் குற்றம்சாட்டியுள்ளது.

 இந்தியாவில் ஸ்டார்லிங்க்

இந்தியாவில் ஸ்டார்லிங்க்

சில மாதங்களுக்கு முன்பு எலான் மஸ்க், ஸ்டார்லிங்க் சேவை இந்தியா மற்றும் சீனாவில் விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ள நிலையில், இந்திய டெலிகாம் துறையிடம் அனுமதி கோரியுள்ளது. இந்நிலையில் டெலிகாம் துறை எலான் மஸ்க்-ன் இந்த ஸ்டார்லிங்க் திட்டத்தில் ஏதேனும் பிரச்சனை உள்ளதா? இந்திய அரசின் அனைத்து டெலிகாம் மற்றும் தொழில்நுட்ப விதிகளையும் பூர்த்தி செய்கிறதா..? என்பதை ஆய்வு செய்கிறது.

 இந்திய சட்ட விதிகள்

இந்திய சட்ட விதிகள்

இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவையைக் கொண்டு வர இந்திய டெலிகிராப் சட்டம் 1885, இந்திய வயர்லெஸ் டெலிகிராபி விதி 1933, இந்திய சேட்காம் பாலிசி 2000, தகவல் தொழில்நுட்ப விதி 2000 ஆகியவற்றை முழுமையாகப் பூர்த்தி செய்ய வேண்டும்.

 வருமா..?  வராதா..?

வருமா..? வராதா..?

ஒரு பக்கம் ஸ்டார்லிங்க் திட்டத்திற்கு உலகளவில் போட்டி மற்றும் எதிர்ப்புகள் இருக்கும் நிலையில், இந்தியாவில் இத்திட்டத்திற்கான ஆய்வு பணிகள் துவங்கியுள்ளது. இதன் மூலம் ஸ்டார்லிங்க் சேவை இந்தியாவிற்கு வருமா வராதா என்ற நிலை உருவாகியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Elon Musk’s Starlink Is Too Risky says Rivals: Building nearly monopoly in internet space

Elon Musk’s Starlink Is Too Risky: Building nearly monopoly in internet space
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X