டெஸ்லா நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் இன்று முக்கியமான அறிவிப்பை வெளியிட்ட காரணத்தால் டோஜ்காயின் மதிப்பு யாரும் எதிர்பார்க்காத வகையில் 24 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.

எலான் மஸ்க்
எலான் மஸ்க் சில மாதங்களுக்கு முன்பு முன்னணி கிரிப்டோகரன்சியான பிட்காயின் பேமெண்ட் ஆகப் பெற்றுக்கொண்டு டெஸ்லா கார்களை விற்பனை செய்வதாக அறிவித்த நிலையில், பிட்காயின் உற்பத்திக்கு நிலக்கரி மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைப் பயன்படுத்துவதால் தனது முடிவைப் பின்வாங்கினார்.

டோஜ்காயின்
இதற்குப் பின்பு அனைத்து கிரிப்டோகரன்சி உற்பத்தியாளர்களும் கிரீன் எனர்ஜியை பயன்படுத்த முடிவு செய்தனர். இதைத் தொடர்ந்து எலான் மஸ்க் தற்போது புதிய சோதனை திட்டமாக டோஜ்காயின்-ஐ பேமெண்ட் ஆகப் பெற்று தனது டெஸ்லா தளத்தில் மெர்சன்டைஸ் பொருட்களை விற்பனை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.

எலான் மஸ்க் டிவீட்
எலான் மஸ்க் பலமுறை டோஜ்காயின், ஷிபா இனு, பிட்காயின் குறித்து வெளியிட்ட டிவீட் மூலம் இதன் விலை பெரிய அளவிலான மாற்றம் ஏற்பட்டு உள்ளது. இந்த வகையில் டோஜ்காயினைப் பேமெண்ட் ஆகப் பெற்று தனது டெஸ்லா தளத்தில் மெர்சன்டைஸ் பொருட்களை விற்பனை செய்ய உள்ளது குறித்து வெளியான அறிவிப்பு மூலம் டோஜ்காயின் விலை உயர்ந்துள்ளது.

டோஜ்காயின் விலை
எலான் மஸ்க் அறிவிப்புக்குப் பின்பு டோஜ்காயின் விலை இன்றைய வர்த்தகத்தில் 24 சதவீதம் வரையில் உயர்ந்து 0.20451 டாலராக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 0.15 டாலரில் இருந்து 0.22 டாலர் வரையில் உயர்ந்துள்ளது. 2021ல் மட்டும் டோஜ்காயின் மதிப்பு சுமார் 4,504.87 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கிரிப்டோகரன்சி
இன்றைய வர்த்தகத்தில் பிட்காயின் மதிப்பு 1.92 சதவீதம் வரையில் சரிந்து 47,663.35 டாலராகச் சரிந்துள்ளது. இதைத் தொடர்ந்து எதிரியம் 3.93 சதவீதம் சரிந்து 3,839 டாலராகவும், சோலானா 3.73 சதவீதம் சரிந்து 160.20 டாலராகவும், ரிப்பிள் 1.24 சதவீதம் சரிந்து 0.807942 டாலராகவும் சரிந்து.