அவர்களுக்கு மட்டும் சிறப்பு பென்ஷனா..? படிச்சிப் பாருங்க நீங்களே ஓகே சொல்வீங்க..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியா என்கிற துணை கண்டத்தின் தென் புறம் கடலாலும், வடக்குப் புறம் மலைகள் மற்றும் நில பரப்புகளாலும் சூழப்பட்டு இருக்கிறது.

 

தெற்கில் கடல் வழியாகவும், வடக்கில் நிலம் மற்றும் மலை வழியாகவும் கடந்து வந்து நம்மை சீனர்களோ, பாகிஸ்தானியர்களோ, ஆப்கானிஸ்தானியர்களோ அல்லது வேறு எந்த ஒரு நாட்டுக்காரர்களும் தாக்காமல் இருக்கிறார்கள் என்றால் அதற்கு முழு முதல் காரணம் நம் நாட்டு ராணுவம் தான்.

அப்படிப்பட்ட ராணுவ வீரர்களுக்குத் தான் ஒரு இன்ப அதிர்ச்சி கொடுத்து இருக்கிறது இந்திய ராணுவ தலைமையகம்.

போர்கள்

போர்கள்

இதுவரை, இந்தியா 1947, 1962, 1965, 1971, 1999 என சில பெரிய போர்களைச் சந்தித்து இருக்கிறது. இந்த போர்களில் எல்லாம் இந்தியா பெரும்பாலும் வெற்றி வாகை சூடி இருக்கிறது. இந்த போர்களில் 1965 மற்றும் 1971 போர்கள் குறிப்பிட வேண்டியவைகள்.

விவரம்

விவரம்

1965-ல் இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையில் இரண்டாவது போர் மூண்டது. அதனைத் தொடர்ந்து 1971-ம் ஆண்டு மீண்டும் வங்க தேசப் பிரச்சனை காரணமாக இந்தியா பாகிஸ்தானுக்கு இடையில் போர் மூண்டு வங்க தேசம் என்கிற தனி நாடே உருவானது எல்லாம் வரலாறு சொல்லும் உண்மை.

அதிகாரிகள்
 

அதிகாரிகள்

இந்த 1965 மற்றும் 1971 போர் காலங்களில், இந்திய ராணுவத்துக்கு உடனடியாக பல அதிகாரிகள் தேவையாக இருந்தார்கள். அப்போது சூட்டோடு சூடாக தேர்வு செய்யப்பட்டு, ராணுவத்தில் அதிகாரிகளாக பலர் பணியில் அமர்த்தப்பட்டனர். அவ்வளவு அவசரமாக ராணுவத்தில் பணியில் சேர்க்கப்பட்ட அதிகாரிகளும் போரில் இந்தியா வெற்றி பெற பக்க பலமாக இருந்தார்கள்.

நோ பென்ஷன்

நோ பென்ஷன்

இப்படி திடீரென ராணுவத்தில் சேர்க்கப்பட்ட அதிகாரிகளை Emergency Commissioned officers,

Short Service Commission officers என்று சொல்கிறார்கள். இந்த வழியாக ராணுவத்தில் அதிகாரியாக பணியாற்றியவர்கள், பென்ஷன் பெறும் தகுதிக்கும் வரும் முன்னரே பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிடுவார்களாம். பென்ஷன் இல்லாமல் தான் தங்கள் சொச்ச வாழ்க்கையைக் கழிக்க வேண்டும்.

பென்ஷன்

பென்ஷன்

எனவே, இந்த Emergency Commissioned officers and

Short Service Commission officers-களுக்கு பென்ஷன் கொடுக்குமாறு, மத்திய பாதுகாப்பு அமைச்சகத்துக்கு, ராணுவ தலைமையகம் கோரிக்கை வைத்து இருக்கிறார்களாம். இந்த கோரிக்கை நிறைவேறினால், மேலே சொன்ன அதிகாரிகளுக்கும் மாதா மாதம் பென்ஷன் கிடைக்குமாம்.

ராணுவ தளபதி

ராணுவ தளபதி

சமீபத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட ராணுவ தளபதி எம் எம் நராவனே "இந்திய ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இந்திய ராணுவம் தொடர்ந்து தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் எனச் சொல்லி இருக்கிறார்". இந்திய எல்லைகளைக் காத்த ராணுவ வீரர்களுக்கு பென்ஷன் இல்லாமல் வேறு யாருக்கு சார்..? சல்யூட்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: pension பென்ஷன்
English summary

emergency commissioned and SSC army officers may get pension

Emergency commissioned and SSC army officers may get pension. The special pension Proposals sent to the Defense Ministry by Army Headquarters.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X