முடிந்தது EMI Moratorium! இனி யாருக்கு என்ன பிரச்சனை?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரு வழியா ரிசர்வ் வங்கி கொடுத்த ஆறு மாத கால அவகாசம் முடிந்தாயிற்று. வங்கிகளும் தங்களது வேலையினை செய்ய ஆரம்பிச்சாச்சு. இனி என்ன நடக்க போகிறதோ?

 

இந்த கொரோனா வந்தாலும் வந்தது. மக்களை படு பாதாளத்திற்கே தள்ளி விட்டது எனலாம். கடந்த மார்ச் மாத இறுதியில் போடப்பட்ட லாக்டவுன், தற்போது வரையில் பற்பல தளர்வுகளுடன் நீடித்து வருகின்றது.

இந்த லாக்டவுன் காலத்தில் தங்களது வேலை, வருமான வாய்ப்புகளை இழந்த மக்கள், தங்களது அன்றாட தேவைகளுக்கே கஷ்டப்பட்ட நிலையில், வங்கிகளில் வாங்கிய கடனை வாங்கிய கடனையும் அடைக்க முடியாமல் தவித்து வந்தனர்.

உண்மையான தாக்கம்?

உண்மையான தாக்கம்?

எனினும் உண்மையான தாக்கம் மூன்றாவது மற்றும் நான்காவது காலாண்டில் தான் தெரியவரும். மேலும் கடன் மறுசீரமைப்புக்கு எத்தனை கடன்கள் தகுதி பெறும் என்பதை பொறுத்தே இந்த தாக்கம் இருக்கும். ஆக இந்த தாக்கத்தினை தற்போது கணக்கிடுவது மிக கடினம் என்றும் சித்தார்த் கூறியுள்ளார்.

நடுத்தர அளவிலான கார்ப்பரேட்டுகளில் தாக்கம் இருக்கும்

நடுத்தர அளவிலான கார்ப்பரேட்டுகளில் தாக்கம் இருக்கும்

90 நாட்களுக்குள் கடன்களை திருப்பிச் செலுத்தாவிட்டால், அந்த கடன் செயல்படாத சொத்து என கூறப்படுகிறது. சித்தார்த்தின் கருத்து படி, வங்கிகளுக்கு கடன் செலவு அதிகரிக்கலாம். மேலும் நடுத்தர அளவிலான கார்ப்பரேட் நிறுவனங்களின் தாக்கம் மிகப் பெரியதாக இருக்கும். இது 2022ம் நிதியாண்டில் மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார்.

வாராக்கடன் அளவு அதிகரிக்கும்
 

வாராக்கடன் அளவு அதிகரிக்கும்

இதே ஏஞ்சல் புரோக்கிங் ஆய்வாளர் ஜெய்கிஷன் பர்மர், மறுசீரமைப்பு திட்டம் வங்கிகளுக்கு ஒரளவுக்கு உதவும். இது நன்கு சிந்திக்கப்பட்ட ஒரு பயிற்சியாகும். எனினும் வங்கித் துறையில் கணிசமான தாக்கம் இருக்கும் என்றும் பர்மர் கூறியுள்ளார். மறுசீரமைப்போடு கூட, வாராக்கடன் அளவும் 30 -40% அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளார். இந்த கட்டத்தில் 8 - 9 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் வாரக்கடன் அளவு, அடுத்த ஒரு வருடத்தில் 11 - 12 லட்சம் கோடி ரூபாயாக உயரக்கூடும் என பர்மர் தெரிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்கி என்ன சொல்கிறது?

ரிசர்வ் வங்கி என்ன சொல்கிறது?

கோவிட் -19 தொற்று நோயினால் ஏற்பட்டுள்ள தாக்கத்தினை மறைக்க வங்கிகள், கடந்த இரண்டு காலாண்டுகளில் கணிசமான ஏற்பாடுகளைக் செய்துள்ளன. இதே ஆர்பிஐ தரப்பில் மோசமான கடன்கள் குறித்தும் எச்சரிக்கை விடுத்திருந்தது. கடந்த நிதி ஸ்திரத்தன்மை அறிக்கையில், ரிசர்வ் வங்கி 2021ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் வாராக்கடன் 14.7% உயரக்கூடும் என்று கூறியுள்ளது.

வங்கிகள் என்ன சொல்கின்றன?

வங்கிகள் என்ன சொல்கின்றன?

இதே வங்கித் தரப்பில் இந்த தாக்கத்தினை பொறுத்தவரை இதனை அளவிடுவது மிகக் கடினம். ஏனெனில் கடன் வாங்கியவர்களில் எத்தனை பேர் உண்மையான மன அழுத்தத்தின் கீழ் இந்த திட்டத்தினை தேர்ந்தெடுத்துள்ளனர் என்பதனை கணிக்க முடியாது என்றும் கூறப்படுகிறது. ஆக மொத்தத்தில் இந்த அறிக்கைகள் மேற்கொண்டு வங்கிகள் எந்த மாதிரியான பிரச்சனைகளை எதிர்கொள்ள போகின்றன என்பதை தான் சுட்டிக் காட்டுகின்றனவோ தவிர, மக்கள் என்ன செய்ய போகிறார்கள் என்று கூறவில்லை.

மக்களுக்கு ஏதேனும் அறிவிப்பு வருமா?

மக்களுக்கு ஏதேனும் அறிவிப்பு வருமா?

சொல்லப்போனால் தற்போது தான் லாக்டவுனில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. நிறுவனங்கள் சற்றே கூடுதலான ஆட்களுடன் பணிபுரிய அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆக வேலையிழந்தோர் இனி தான் வேலை தேடி வேலைக்கு செல்ல முடியும். பலர் பழையபடி தொழில்சாலைகளுக்கு செல்ல முடியும். ஆக இனி வேலைக்கு சென்று இனி தான் கடனை கட்டும் நிலைக்கு வருவார்கள். பொறுத்திருந்து தான் பார்ப்போமே. ரிசர்வ் வங்கி இது குறித்து ஏதேனும் அறிவிப்புகளை வெளியிடுமா என்று...

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

EMI moratorium over, what’s next for banks and peoples?

Indian banking sector may start to see rises huge bad loans amid EMI moratorium.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X