தனியார்மயம் வேண்டாம்.. இது அரசுக்கு பெரிய இழப்பு தான்.. கதறும் ஊழியர் சங்கங்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாட்டில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலையை போக்க முதலீடுகள் அவசியம் தான் என்றாலும், அது நல்ல லாபத்தில் இருக்கும் நிறுவனங்களை விற்க திட்டமிட்டுள்ளது அனவரும் அறிந்த விஷயமே.

இந்த நிலையில் மத்திய அரசின் தனியார்மயமாக்கல் திட்டத்திற்கு தொடர்ந்து பல எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன.

அரசு பொதுத்துறையை சேர்ந்த எண்ணெய் நிறுவனங்களின் சங்கங்கள் பிபிசிஎல் தனியார்மயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் அரசுக்கு இது பெரிய இழப்பாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.

பணம் கிடைக்கும்
 

பணம் கிடைக்கும்

நல்ல நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின், கணிசமான பங்குகளை விற்க அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி, இந்த நிறுவனத்தின் பங்குகளை விற்பதன் மூலம் சுமார் 70,000 கோடி ரூபாய் திரட்ட முடியும். ஆக இவ்வாறு கிடைக்கும் பணத்தினை வைத்து வேறு எதுவும் உள்கட்டமைப்பு துறைகளில் முதலீடு செய்ய முடியும். அல்லது மற்ற நிறுவனங்களில் முதலீடு செய்ய முடியும் என்றும் அரசு கூறி வருகிறது.

மந்த நிலையை போக்க உதவும்

மந்த நிலையை போக்க உதவும்

தற்போது இந்தியாவில் நிலவி வரும் மந்த நிலையினை போக்க அரசு நிறுவனங்களை தனியார்மயமாக்குவதன் மூலம், கிடைக்கும் தொகையினை பயன்படுத்த முடியும் என்றும் கூறப்பட்டு வருகிறது. அரசு ஒரு புறம் இதன் மூலம் கிடைக்கும் இந்த நிதியினை மற்ற முதலீடுகளுக்கு பயன்படுத்த முடியும் என்றும் கூறி வரும் நிலையில், இத்துறையை சேர்ந்த மூத்த அதிகாரிகள் இந்த பங்கு விற்பனையானது இந்த ஆண்டு முடியாது என்றும், இது அடுத்த நிதியாண்டிற்கு ஒத்தி வைக்கப்படலாம் என்றும் கூறியுள்ளனர்.

செய்தியாளர் சந்திப்பு

செய்தியாளர் சந்திப்பு

மகாரத்னா அதிகாரிகள் சங்கம் (காம்கோ) மற்றும் எண்ணெய் பொதுத்துறை நிறுவனங்களின் கூட்டமைப்பு (ஃபோபோ) உள்ளிட்ட சங்கள்கள் கடந்த சனிக்கிழமையன்று பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தின. பிபிசிஎல்லை விற்பதன் மூலம் அரசுக்கு நிதி கிடைக்கும். இதன் முதலீடுகளை பெருக்க முடியும் என்று அரசு கனவு கண்டு வரும் நிலையில், இந்த சங்கங்கள் பிபிசிஎல்லை விற்பதன் மூலம் அரசுக்கு இழப்புகள் தான் ஏற்படும் என்றும் கூறியுள்ளன.

லாபம் ஈட்டும் ஒரு நிறுவனம்
 

லாபம் ஈட்டும் ஒரு நிறுவனம்

இதன் மதிப்பு 9.75 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பிபிசிஎல் நிறுவனம், 53.29 சதவிகித பங்குகளை விற்க முற்பட்டுள்ளது. இதற்காக அரசாங்கம் 7,50,000 கோடி ரூபாய் முதலீடுகளை திரட்ட முடியும் என்றும் எண்ணுகிறது. பிபிசிஎல் மிகவும் லாபம் ஈட்டும் ஒரு நிறுவனமாகும். இது கடந்த ஐந்து ஆண்டுகளில் 17,000 கோடி ரூபாயை வழங்கி வருகிறது என்றும் ஓஎன்ஜிசியின் அதிகாரி அமித் குமார் தெரிவித்துள்ளார்.

பிபிசிஎல் முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள்

பிபிசிஎல் முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள்

பிபிசிஎல் தனியார்மயமாக்குதல் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு நாங்கள் அரசாங்கத்திடம் கோருகிறோம். முதலீடு செய்வது என்பது குறுகிய கால ஆதாயமாக இருக்கும். ஆனால் பங்கு விற்பனை நீண்டகால இழப்பாகும். அதிலும் அரசு தற்போது விரும்பினால் வேறு சில பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்கலாம். அல்லது தனியார் மயமாக்கலாம். ஏனெனில் சில நிறுவனங்களின் செயல்திறன் மிக மோசமாக உள்ளது.

எரிசக்தி முக்கியமான துறை

எரிசக்தி முக்கியமான துறை

எரிசக்தி துறை என்பது அரசின் மூலோபாய துறையாகும். ஆக மேலும் நாட்டில் பெரு நிறுவனத்தை தனியார்மயமாக்குவது என்பது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றும் பிபிசிஎல் நிறுவனத்தின் அனில் மேதே கூறியுள்ளார். அரசின் இந்த முடிவால் ஊழியர்கள் கவலையில் உள்ளனர். ஆக அரசு இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Employee associations of state run oil companies planned strategic sale of BPCL

Employee associations of state run oil companies planned strategic sale of Bpcl. Energy sector is considered strategically important. And privatization of a PSU in this sector is a threat to the country, said Anil Medhe of BPCL.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more