கொரோனா வைரஸ் இந்தியப் பொருளாதாரத்தை கண் முன்னே சிதைத்துக் கொண்டிருக்கிறது. பல தசாப்தங்களாக உருவான வளர்ச்சி எல்லாம் சில நாட்களில் காணாமல் போய்க் கொண்டு இருக்கிறது. இதற்கு மத்தியில் நிதி நெருக்கடி வேறு தனி நபர் தொடங்கி பெரு நிறுவனங்கள் வரை எல்லோரையும் பயமுறுத்திக் கொண்டு இருக்கிறது.
கம்பெனிகளின் நிதி நெருக்கடியை ஓரளவுக்காவது குறைக்க வேண்டும் என்கிற நோக்கில், EPFO அமை ஒரு அறிவிப்பைச் செய்து இருக்கிறது.
பொதுவாக, கம்பெனிகள், ஊழியர்கள் பங்கு மற்றும் முதலாளி பங்கு என பிஎஃப் பிடித்தம் செய்து EPFO அமைப்புக்குச் செலுத்த வேண்டும்.

ஆறுதல்
இந்த கொரோனா வைரஸ் பிரச்சனை அதிகமாக இருக்கும் இந்த காலத்தில், கம்பெனிகளுக்கு EPFO அமைப்பு ஆறுதலாக ஒரு சலுகையை வழங்கி இருக்கிறது. அப்படி என்ன பெரிய சலுகையை வழங்கி இருக்கிறது..? எத்தனை கம்பெனிகள் பயன் பெறுவார்கள் எனப் பார்ப்போம்.

டெபாசிட் தாமதம்
கம்பெனிகள், கொரோனா நெருக்கடி காலத்தில் பல பிரச்சனைகளைச் சந்தித்துக் கொண்டு இருக்கிறது. குறிப்பாக நிதி நெருக்கடி. இதனால் கம்பெனிகள், லாக் டவுன் காலத்தில், EPFO அமைப்புக்குச் செலுத்த வேண்டிய பி எஃப் தொகை மற்றும் நிர்வாக செலவுகள் தொகைகளை செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டு இருக்கிறது.

அபராதம் இல்லை
எனவே, லாக் டவுன் காலத்தில், கம்பெனிகள், EPFO அமைப்புக்குச் செலுத்த வேண்டிய தொகையை, தாமதமாகச் செலுத்தினால், அதற்கு வழக்கமாக வசூலிக்கும் அபராதத் தொகை, வசூலிக்கப்படாது எனச் சொல்லி இருக்கிறார்கள். இதை மத்திய தொழிலாளர் அமைச்சகமும் உறுதி செய்து இருக்கிறது.

6.5 லட்சம் கம்பெனிகள்
கம்பெனிகள் தங்களின் பிஎஃப் தொகையினை EPFO அமைப்பிடம் டெபாசிட் செய்வதற்கு, அபராதம் விதிக்காதது, சுமாராக இந்தியாவில் 6.5 லட்சம் கம்பெனிகளுக்கு ஒரு பெரிய சலுகையாக இருக்கும், இதனால் ஓரளவுக்காவது நிதி நெருக்கடி குறையும் எனவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

மே முதல்
அதே போல, 3 மாதங்களுக்கு பிஎஃப் பிடித்தத்தை 12 %-ல் இருந்து 10 %-மாக குறைத்துக் கொள்ளலாம் என நிதி அமைச்சர் சொல்லி இருந்தார். அந்த அறிவிப்பு, மே 2020 முதல் அமலுக்கு வரலாம் என EPFO அமைப்பின் முதன்மைச் செயல் அதிகாரி சுனில் பர்த்வால் ஒரு பொது கூட்டத்தில் சொல்லி இருக்கிறார், என்பதும் குறிப்பிடத்தக்கது.