பொதுத்துறை வங்கிகளுக்கு இந்த சலுகை கிடையாது.. வங்கியாளர்களுக்கு நெற்றியடி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: தொடர்ந்து வங்கிகளை மறுசீரமைக்கும் பொருட்டு மத்திய அரசானது பலவேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

 

குறிப்பாக பொதுத்துறை வங்கிகளில் அதிகரிக்கும் வாராக்கடனை வசூலிக்க திட்டம், திவால் நிலை சட்டம், பொத்துறை வங்கிகள் இணைப்பு, பொதுத்துறை வங்கிகளுக்கு மறுமூலதனம் என அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

பொதுத்துறை வங்கிகளுக்கு இந்த சலுகை கிடையாது.. வங்கியாளர்களுக்கு நெற்றியடி..!

என்ன தான் அரசு ஒரு புறம் வங்கிகளின் வாராக்கடனை கருத்தில் கொண்டு மறுமூலதனத்தை கொடுத்தாலும், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாராக்கடன் அளவு அரசை பயமுறுத்தி வருவது உண்மையே.

இந்த நிலையில் ஒவ்வொரு முறையும் மக்களின் கையில் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் பொருட்டு, மத்திய அரசானது வங்கிகளுக்கு மறுமூலதனத்தை அளித்து வருகிறது. ஆனால் தற்போது நாட்டில் நிலவி வரும் பிரச்சனையால் அவ்வாறு மீண்டும் மீண்டும் மறுமூலதனம் கொடுப்பது கடினமே. அதிலும் வரும் பிப்ரவரி மாதத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது இரண்டாவது பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ள நிலையில், இந்த முறையும் வங்கிகளுக்கு மூலதனம் கிடைக்குமா? என்பது சந்தேகம் தான் என்றும் கூறப்படுகிறது.

எனினும் வங்கிகளுக்கு மறுமூலதனம் கொடுக்காவிட்டாலும், மாறாக மோசாமான கடன்களை விரைவாக மீட்டெடுப்பதற்கும், சந்தையிலிருந்து நிதி திரட்டுவதற்கும் அவர்களை ஊக்குவிக்கும் என்றும் அறிக்கைகள் வெளியாகியுள்ளன.

இந்த வகையில் வங்கிகள் தங்களது சொத்துகளையோ அல்லது மையமற்ற வணிகத்தையோ விலக்க முடியும். இந்த நிலையில் மோடி 2.0 அரசின் இரண்டாவது பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ம் தேதி முன்வைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பிட்ட சில ஆதாரங்களின் படி, என்.சி.எல்.டி மற்றும் என்.சி.எல்.டி அல்லாத வழக்குகள் தீர்க்கப்படுவதிலிருந்து வலுவான மீட்பு வங்கிகள் உள்ளன. இந்த நிலையில் பொதுத்துறை வங்கிகளின் வழங்கல் பாதுகாப்பு விகிதம் 7 ஆண்டு அதிகபட்சமாக 76.6 சதவிகிதமாக உள்ளது.

பஞ்சாப் வங்கி, ஓரியண்டல் வங்கி, யுனைடெட் வங்கிகளை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

தென்னிந்தியாவில் கனரா வங்கி, சிண்டிகேட் வங்கிகளை இணைக்கப்படும். ஆந்திரா வங்கி, யூனியன் வங்கி, கார்ப்பரேஷன் வங்கியும் இணைக்கப்படும். இதேபோல், இந்தியன் வங்கி, அலகாபாத் வங்கி இணைக்கப்படும்.

இவ்வாறு பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்படுவதால் இனி 12 பொதுத்துறை வங்கிகள் மட்டுமே இயங்கும் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் இணைப்பு நடவடிக்கைகளால் சில வங்கிகளில் சொத்துகள் விற்கப்படலாம். இன்னும் பல திட்டங்கள் மூலம் நிதியை திரட்டலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Expert says govt unlikely to announce capital infusion for PSU banks in coming budget

Govt unlikely to announce capital infusion for PSU banks in coming budget. But will encourage them to recovery of bad loans and raise funds from the market.
Story first published: Sunday, January 5, 2020, 15:55 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X