4 மாத தொடர் சரிவில் ஏற்றுமதி.. மோசமான நிலையில் இந்தியா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய பொருளாதாரமும், வர்த்தகமும் பெரிய அளவிலான பாதிப்பைச் சந்தித்து உள்ளது எல்லோருக்கும் தெரிந்திருக்கும் நிலையில் நாட்டின் ஏற்றுமதி அளவுகள் தொடர்ந்து 4 மாதங்களாகச் சரிவடைந்து வருகிறது. இதன் எதிரொலியாக ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கும் மத்தியிலான வர்த்தகப் பற்றாக்குறை அதிகளவில் உயர்ந்துள்ளது.

 

நவம்பர் மாதம்

நவம்பர் மாதம்

இந்தியாவின் ஏற்றுமதிக்கும் மற்றும் இறக்குமதிக்கும் இடையிலான வர்த்தகப் பற்றாக்குறை நவம்பர் மாதம் 17.58 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இது கடந்த நிதியாண்டில் 12.12 பில்லியன் டாலராக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் பாதிப்பு வர்த்தகச் சந்தையில் மட்டும் அல்லாமல் ரூபாய் மதிப்பிலும் எதிரொலிக்கிறது என்பது தான் வருத்தமான செய்தி.

நவம்பர் மாதத்தில் ஆடைகள் ஏற்றுமதி தொடர்ந்து 4 மாதங்களாகச் சரிந்து 25.98 பில்லியன் டாலராகச் சரிந்துள்ளது. இதேபோல் இறக்குமதியின் அளவும் 38.11 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது.

30 பொருட்கள்

30 பொருட்கள்

இந்தியாவில் இருந்து அதிகமாக ஏற்றுமதி செய்யும் 30 பொருட்களில் 17 பொருட்களின் வர்த்தகம் சரிந்துள்ளது. இதேபோல் அதிகளவில் இறக்குமதி செய்யப்படும் 30 பொருட்களில் 21 பொருட்களின் வர்த்தகம் குறைந்துள்ளது. அதிலும் முக்கியமாக இந்தியாவில் இருந்து அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படும் முந்திரியின் ஏற்றுமதி 33.9 சதவீதம் வரையில் சரிந்துள்ளது, இதுமட்டும் அல்லாமல் எண்ணெய் உணவுகளின் ஏற்றுமதியும் 54.59 சதவீதம் சரிந்துள்ளது.

இறக்குமதியை பார்க்கும்போது இக்காலக்கட்டத்தில் எலக்ட்ரானிக் பொருட்களின் இறக்குமதி அளவு 46.13 சதவீதமும், மருந்து பொருட்கள் 20.60 சதவீதமும், இன்ஜினியரிங் பொருட்கள் 6.32 சதவீதமும், MARINE பொருட்கள் 9 சதவீதமும் அதிகரித்துள்ளது.

மேலும் இறக்குமதியில் நிலக்கரி, பெட்ரோலியம், கெமிக்கல், தாது பொருட்கள், ஆகியவற்றின் அளவு 23.6 சதவீதத்தில் இருந்து 12 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.

8 மாத வர்த்தகம்
 

8 மாத வர்த்தகம்

நடப்பு நிதியாண்டின் முதல் 8 மாத வர்த்தகத்தில் ஏற்றுமதி மற்றும இறக்குமதிக்கும் மத்தியிலான வர்த்தகப் பற்றாக்குறை எப்போதும் இல்லாத வகையில் 54.06 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் உள்நாட்டு வர்த்தகச் சூழ்நிலையையும், சர்வதேச வர்த்தகச் சந்தையும் தான்.

ரூபாய் மதிப்பு

ரூபாய் மதிப்பு

இதோடு வர்த்தகச் சந்தையில் பாதிப்பின் காரணமாக இந்திய ரூபாய்க்கு எதிரான அமெரிக்க டாலரின் மதிப்பு தொடர்ந்து நிலையற்ற தன்மையில் உள்ளது. இதுவும் வர்த்தகர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்திய வர்த்தகச் சந்தையின் இந்தப் பாதிப்புக்கு அமெரிக்கா சீனா இடையில் நடக்கும் வர்த்தகப் போர்-ம் முக்கியக் காரணமாக அமைந்துள்ளது மறுக்க முடியாது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Exports contract for fourth straight month in November

Out of the 30 major items in India’s export and import baskets, 17 export items and 21 imported goods contracted. Among major imports, coal fell 23.6%, petroleum 18.6%, chemicals 15.11%, newsprint by 43.3%. India’s trade deficit narrowed to $12.12 billion in November from $17.58 billion a year ago.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X