புதிய வர்த்தகத்திற்கு தயாராகும் பேஸ்புக்.. இனி இதுலயும் விளம்பரம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டிக்டாக் வெற்றிக்கு பின்பு உலகளவில் ஷாட் வீடியோக்களுக்கெனப் புதிய வர்த்தகம் உருவாகியுள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

 

30 நொடியில் ஒரு கன்டென்ட் என்பதால் பார்ப்பவர்களும், பார்க்கப்படும் எண்ணிக்கையும் மிகக் குறைந்த காலகட்டத்தில் பெரிய அளவில் அதிகரித்து இப்பிரிவு வர்த்தகத்தை யாராலும் தடுக்கவும், தவிர்க்கவும் முடியாத ஒன்றாக மாறிவிட்டது என்றால் மிகையில்லை.

டிசிஎஸ் கொடுத்த உற்சாகம்.. அடுத்தடுத்த அசத்தல் அறிவிப்புகள்.. கொண்டாடும் ஊழியர்கள்..!

இப்படியொரு வர்த்தகத்தைப் பெரு நிறுவனங்கள் விட்டுவிடவா போகிறது என்று திரும்பிப் பார்ப்பதற்குள் யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் எனப் பல முன்னணி நிறுவனங்களும் ஷாட் வீடியோ சேவை அறிமுகம் செய்துள்ளது.

 ஷாட் வீடியோ சேவை

ஷாட் வீடியோ சேவை

ஷாட் வீடியோ சேவை அளிக்கும் பல சீல நிறுவனங்களை இந்தியாவில் தடை செய்யப்பட்ட நிலையிலும் யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்கள் இருக்கும் காரணத்தால் இதைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்குப் பெரிய இழப்பாக இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

 இந்திய செயலிகள்

இந்திய செயலிகள்

இதுமட்டும் இல்லாமல் சீன செயலிகளைத் தடை செய்த பின்பு இந்தியாவிலேயே பல ஷாட் வீடியோ செயலிகள் அறிமுகம் செய்யப்பட்டு அதிகளவிலான வாடிக்கையாளர்களைப் பெற்று வருகிறது. இந்நிலையில் அனைவருக்கும் முன்னோடியாகப் பேஸ்புக் ஷாட் வீடியோக்களுக்கு விளம்பரம் சேவை அளிக்க முடிவு செய்துள்ளது.

 இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ

பேஸ்புக் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் இன்ஸ்டாகிராம் செயலில் ஷாட் வீடியோக்களை Reels (ரீல்ஸ்) என அழைக்கப்படுகிறது. இந்த ஷாட் வீடியோ விளம்பரங்களை அளிக்கச் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

 இந்தியா தான் முக்கிய டார்கெட்
 

இந்தியா தான் முக்கிய டார்கெட்

முதற்கட்டமாக இந்தச் சோதனை இந்தியா, பிரேசில், ஜெர்மனி மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் ரீல்ஸ் வீடியோக்களுக்கு விளம்பர சேவையைச் சோதனை செய்ய முடிவு செய்துள்ளது. இந்தியாவில் ராக்கெட் வேகத்தில் வளர்ந்து வரும் ஷாட் வீடியோ காலச்சாரத்தின் மூலம் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற வேண்டும் என்பதே பேஸ்புக்-ன் மிக முக்கியத் திட்டமாக உள்ளது.

 டிக்டாக் தடை

டிக்டாக் தடை

இதேவேளையில் இந்தியாவில் டிக்டாக் தடை செய்யப்பட்டு இருக்கும் இந்தச் சூழ்நிலையில் வீடியோ கிரியேட்டர்களுக்கு அனைத்து விதமான சேவைகளையும் வசதிகளையும் அளிக்கவும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

 இன்ஸ்டாகிராம் வீடியோ

இன்ஸ்டாகிராம் வீடியோ

உதாரணமாக இன்ஸ்டாகிராம் வீடியோக்களைப் பேஸ்புக்கில் பகிர்ந்து இதன் மூலம் வரும் பார்வைகளுக்கும் விளம்பரங்களுக்கும் அடிப்படையில் வருமானம் பெறவும், கிரியேட்டர்களுக்கு வருமானத்தில் ஒரு பங்கை அளிக்கவும் திட்டமிட்டு வருகிறது.

 விளம்பரதாரர்கள்

விளம்பரதாரர்கள்

இதேபோல் விளம்பரதாரர்கள் எந்த வகையிலான வீடியோக்களில் தங்களது விளம்பரம் வர வேண்டும் என்பதை நிர்ணயம் செய்யும் வாய்ப்பையும் அளிக்க உள்ளது. சமீபத்தில் பேஸ்புக் ஸ்டோரியில் ஸ்டிக்கர் விளம்பரத்தைச் சோதனை செய்தது குறிப்பிடத்தக்கது.

 யூடியூப் தளம்

யூடியூப் தளம்

பேஸ்புக்கிற்குப் போட்டியாகக் கூகுள்-ன் யூடியூப் தளமும் ஷாட்ர்ஸ் என்ற தனிப் பிரிவு மூலம் ஷாட் வீடியோ வாடிக்கையாளர்களையும், பார்வையாளர்களையும் வைத்துள்ளது. பேஸ்புக் ஷாட் வீடியோக்களுக்கு விளம்பர சேவை அளித்துள்ள நிலையில் விரைவில் யூடியூப்-ம் விளம்பர சேவை அளிக்க அதிக வாய்ப்பு உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Facebook in India starts testing ads in Instagram short video Reels

Facebook ads latest update.. youtube ads latest update.. Facebook in India starts testing ads in Instagram short video Reels
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X