முகேஷ் அம்பானியின் ஜியோவில் 10% பங்குகளை பேஸ்புக் வாங்குகிறதா.. உண்மை என்ன.. !

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலக பில்லியனர்களில் ஒருவரான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், இந்திய டிஜிட்டல் சந்தையில் ஜியோவினை விரிவாக்கம் செய்ய அதன் 10% பங்கினை விற்பனை செய்ய உள்ளதாக செய்திகள் உள்ளன.

 

சமூக வலைதளத்தின் ஜாம்பவான் ஆன பேஸ்புக் நிறுவனம், ரிலையன்ஸ் ஜியோவின் 10% பங்கினை வாங்கப் போவதாக பைனான்சியல் டைம்ஸில் வெளியான ஒரு அறிக்கையின் படி தெரிய வந்துள்ளது.

ஏற்கனவே எண்ணெய் சுத்திகரிப்பு வர்த்தகத்தில் சவுதி அராம்கோவுடன் கைகோர்த்துள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், தற்போது பேஸ்புக் மற்றும் கூகுளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

ரூ.500 கோடி நிதியுதவியா.. PM cares fund-க்கு பேடிஎம் நிதியுதவி செய்யப்போகிறதா.. உண்மை நிலவரம் என்ன!

ஜியோ மதிப்பு

ஜியோ மதிப்பு

அதன்படி கிடைக்கப்பெற்ற தகவலின்படி, ஜியோவின் இந்த 10% பங்கு மதிப்பானது பில்லியன் டாலர்கள் மதிப்புடையது ஆகும். நவம்பரில் வெளியான ஒரு அறிக்கையின் படி, ஜியோவின் மதிப்பீடு 65 - 70 பில்லியன் டாலர்களாக உள்ளது. எனவே 10% பங்கு என்பது 6.5 - 7 பில்லியன் டாலர்கள் வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

பேஸ்புக் பேச்சுவார்த்தை

பேஸ்புக் பேச்சுவார்த்தை

ஒரு புறம் முன்னணி சமுக வலைதள நிறுவனமான பேஸ்புக் நிறுவனம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், மறுபுறம் ரிலையன்ஸ் ஜியோ கூகுள் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. எஃப்டி அறிக்கையின்படி பேஸ்புக் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகிய நிறுவனங்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

கொரோனாவால் தடை ஏற்பட்டுள்ளது
 

கொரோனாவால் தடை ஏற்பட்டுள்ளது

எனினும் உலகளவில் கொரோனா வைரஸ் பீதி காரணமான உலகளாவிய பயணங்கள் தடை செய்யப்பட்டதின் காரணமாக இந்த பேச்சுவார்த்தை சமீபத்தில் நிறுத்தப்பட்டது. ரிலையன்ஸ் ஜியோ தொலைத் தொடர்பு நிறுவனமானது, கடந்த 2015-ல் தொடங்கப்பட்டது. ஆனால் அதன் பொது நடவடிக்கைகள் ஆனது கடந்த 2016 இல் தான் தொடங்கியது.

நிறுவனங்கள் அறிவிப்பு இல்லை

நிறுவனங்கள் அறிவிப்பு இல்லை

எனினும் மூன்று ஆண்டுகளில், இது 370 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களைக் கொண்ட ஒரு மிகப்பெரிய இந்தியா தொலைதொடர்பு நிறுவனமாக மாறியுள்ளது. இந்த நிலையில் பேஸ்புக் போன்ற நிறுவனங்களைப் பொறுத்தவரை, இந்தியாவுக்குள் நுழைவதில் இருக்கும் சிக்கல்களையும், சவால்களையும் ஜியோ போன்றதொரு நிறுவனத்தால் குறைக்க முடியும் என்றும் நம்பப்படுகிறது. எனினும் ஜியோ நிறுவனமோ அல்லது பேஸ்புக் நிறுவனமோ, கூகுள் நிறுவனமோ இது குறித்து எதுவும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Facebook looking billion dollars deal to acquire 10% stake in Reliance jio

According to the sources Facebook said to be in negotiations to acquire a stake in Mukesh Ambani's Reliance Jio, the Financial Times reported.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X