உலகின் மிகப்பெரிய சமுக வலைத்தள நிறுவனமான பேஸ்புக், அகுலஸ் நிறுவனத்தைக் கைப்பற்றியதில் இருந்து விர்ச்சுவல் ரியாலிட்டி மற்றும் ஆகுமென்டெட் துறையில் அதீத ஆர்வமுடன் பணியாற்றி வருகிறது. இத்துறையில் எந்த ஒரு நிறுவனமும் பெரிய அளவில் ஈடுபடாத நிலையில் மிகப்பெரிய வர்த்தகச் சந்தையும் சேவைகளும் இத்துறையில் உள்ளது.
இந்நிலையில் பேஸ்புக் தற்போது புதிதாக ஒரு கிட்டத்தை அறிவித்துள்ளது மட்டும் அல்லாமல், இத்திட்டத்திற்காக ஆரம்பத்திலேயே 10 பில்லியன் டாலர் அதாவது 75,000 கோடி ரூபாய் அளவிலான தொகையை முதலீடு செய்யத் திட்டமிட்டு உள்ளது.

மெட்டாவெர்ஸ்
கடந்த சில வாரங்களாக உங்கள் காதில் மெட்டாவெர்ஸ் என்ற வார்த்தை விழுந்திருந்தால், அது தான் பேஸ்புக் நிறுவனத்தின் அடுத்த மாபெரும் இலக்கு. மெட்டாவெர்ஸ் என்றால் மாய உலகு அதாவது விர்ச்சுவல் உலகத்தை உருவாக்குவதற்காக மார்க் ஜூக்கர்பெர்க் தலைமையிலான பேஸ்புக் ரியாலிட்டி லேப்ஸ் முடிவு செய்துள்ளது.

பேஸ்புக் ரியாலிட்டி லேப்ஸ்
இதைச் செய்து முடிக்கப் பேஸ்புக் நிறுவனம் பேஸ்புக் ரியாலிட்டி லேப்ஸ் நிறுவனத்தில் சுமார் 10 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டைச் செய்ய உள்ளது. இந்த முதலீட்டின் மூலம் விர்ச்சுவல் ரியாலிட்டி மற்றும் ஆகுமென்டெட் ரியாலிட்டி-க்கு தேவையான வன்பொருள், மென்பொருள் மற்றும் கன்டென்ட் ஆகியவற்றை உருவாக்க உள்ளது.

மார்க் ஜூக்கர்பெர்க்
இத்திட்டம் குறித்துப் பேஸ்புக் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் வெளியிடும் கூட்டத்தில் மார்க் ஜூக்கர்பெர்க் மெட்டாவெர்ஸ் பிரிவில் தான் அதிகளவிலான முதலீட்டைச் செய்ய முடிவு செய்துள்ளோம். இதன் மூலம் அடுத்த 10 வருடத்தில் 100 crores மக்களை வாடிக்கையாளர்களாகப் பெற்று, 1000 கோடி டாலர்களை வருமானமாகப் பெற இலக்கு நிர்ணயம் செய்துள்ளோம் என மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

நிர்வாகச் சீரமைப்பு
சமீபத்தில் தான் பேஸ்புக் தான் ஒரு சமுக வலைத்தள நிறுவனம் மட்டும் இல்லை, பல புதிய தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் வர்த்தகத்தில் ஈட்டுப்பட்டு வருகிறது. இதனால் பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் தற்போது புதிதாக ரியாலிட்டி லேப்ஸ் ஆகிய நிறுவனங்கள் புதிதாக ஒரு தாய் நிறுவனத்தை உருவாக்கி அதன் கீழ் தனித்தனி பிரிவுகளாக நிர்வாகம் செய்ய முடிவு செய்தது.

விர்ச்சுவல் ரியாலிட்டி மற்றும் ஆகுமென்டெட் ரியாலிட்டி
மார்க் ஜூக்கர்பெர்க்-ன் விர்ச்சுவல் ரியாலிட்டி மற்றும் ஆகுமென்டெட் துறையில் முதலீடு செய்ய உள்ளதன் வாயிலாக இத்துறையில் ஏற்கனவே பல சேவைகளை உருவாக்கியுள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் அனைத்தும் உற்சாகத்தில் உள்ளது.

புதிய வர்த்தகத் துறை
விர்ச்சுவல் ரியாலிட்டி மற்றும் ஆகுமென்டெட் துறையில் பேஸ்புக்கின் முதலீடு பலன் அளிக்கும் பட்சத்தில் இத்துறையில் மிகப்பெரிய வர்த்தகச் சந்தை உருவாக்கும். இது மட்டும் அல்லாமல் வேலைவாய்ப்பு, பொழுதுபோக்கு என மொத்தமும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.