META: அழுது புலம்பும் மார்க் ஜூக்கர்பெர்க்.. 3 மாதத்தில் 224 பில்லியன் டாலர் இழப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகின் மிகப்பெரிய சமுகவலைதள நிறுவனமான பேஸ்புக் சமீபத்தில் தனது நிர்வாகத்தை முறைப்படுத்தவும், பேஸ்புக் எதிர்கொள்ளும் பிரச்சனையால் தனது பிற வர்த்தகமான வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்றவை பாதிக்கப்படக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு அனைத்து வர்த்தகத்தையும் மெட்டா என்ற தாய் நிறுவனத்தின் கீழ் கொண்டு வந்தது.

 

இதற்கிடையில் பேஸ்புக் நிறுவனம் செய்யும் தவறுகள் குறித்து இந்நிறுவன அதிகாரி வெளியில் சொன்ன விஷயங்கள் மற்றும் மோசமான காலாண்டு முடிவுகள் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தியது.

6,406% வளர்ச்சி.. முதலீட்டாளர்களுக்கு லாபத்தை அள்ளிக்கொடுத்த இந்திய நிறுவனம்..!

 பேஸ்புக் நிறுவனம்

பேஸ்புக் நிறுவனம்

பேஸ்புக் நிறுவனம் கடந்த ஒரு வருடமாகவே அதிகப்படியான பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது. குறிப்பாக அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம் பதிவை நீக்காததில் துவங்கி, விளம்பரதாரர்கள் தங்களது வர்த்தகத்தைத் தற்காலிகமாக நிறுத்தியது, அதிகாரி வெளியில் சொன்ன விஷயங்கள், மோசமான காலாண்டு முடிவுகள், இன்ஸ்டாகிராம் மூலம் இளம் தலைமுறையினர் அதிகம் பாதிக்கப்படுவது குறித்துப் பதிவு செய்யப்பட்ட வழக்கு, பல்வேறு விதிமீறல்கள் எனத் தொடர்ந்து பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது.

 வர்த்தகத் தடுமாற்றம்

வர்த்தகத் தடுமாற்றம்

இந்தப் பிரச்சனைகளால் கடந்த சில மாதங்களாகவே பேஸ்புக் பங்குகள் அதிகப்படியான வர்த்தகத் தடுமாற்றத்தை எதிர்கொண்டு வந்த நிலையில், செப்டம்பர் 7ஆம் தேதி அடைந்த உச்சத்தில் இருந்து சுமார் 19.7 சதவீதம் சரிந்துள்ளது.

 224 பில்லியன் டாலர்
 

224 பில்லியன் டாலர்

இதனால் பேஸ்புக் பெயர் மாற்றத்திற்குப் பின் மெட்டா நிறுவனத்தின் சந்தை கடந்த 3 மாதத்தில் மொத்த மதிப்பில் சுமார் 224 பில்லியன் டாலர் அளவிலான மதிப்பீட்டை இழந்துள்ளது.

 ஒமிக்ரான் மற்றும் பெடரல் ரிசர்வ்

ஒமிக்ரான் மற்றும் பெடரல் ரிசர்வ்

கடந்த ஒரு வாரமாக அமெரிக்கச் சந்தையில் ஒமிக்ரான் மற்றும் பெடரல் ரிசர்வ் அறிவிப்பும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் வாயிலாகவும் மெட்டா பங்கு மதிப்பு அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டு உள்ளது.

 பிரான்சிஸ் ஹாகன்

பிரான்சிஸ் ஹாகன்

பேஸ்புக் நிறுவனம் மறைமுகமாகச் செய்து வரும் பல பணிகள் குறித்த ஆவணங்களைப் பிரான்சிஸ் ஹாகன் வெளியிட்டு உலக நாடுகளுக்கு அதிர்ச்சி கொடுத்தார். பிரான்சிஸ் ஹாகன் பேஸ்புக் நிறுவனத்தில் 2 வருடமாகப் பிராடெக்ட் மேனேஜர் இந்நிறுவனத்தின் civic integrity அணியில் பணியாற்றியுள்ளார்.

 பேஸ்புக் தளத்தின் தவறுகள்

பேஸ்புக் தளத்தின் தவறுகள்

37 வயதான பிரான்சிஸ் ஹாகன் பேஸ்புக் தளத்தில் தவறான தகவல்கள் பரவுகிறதா என்பதைக் கண்காணிப்பு செய்யவும், மக்களின் ஜனநாயகத்தைப் பாதிக்காமல் தளம் இயங்கவதை உறுதி செய்வதுமே இவரது பணி. இதில் பல கோளாறுகள் இருப்பது கண்டுபிடித்து அதற்கான ஆவணத்தை வெளியிட்டுள்ளார்.

 Meta ரீபிராண்டிங்

Meta ரீபிராண்டிங்

இந்நிலையில் பிரான்சிஸ் ஹாகன் சில வாரங்களுக்கு முன்பு பேஸ்புக் மார்க் ஜூக்கர்பெர்க் இந்த Meta ரீபிராண்டிங் மூலம் தப்பிக்கப் பார்க்கிறார், முதலில் மார்க் ஜூக்கர்பெர்க் சிஇஓ பதவியை விட்டு வெளியேற வேண்டும். இதன் மூலம் பேஸ்புக் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஒரு வாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Facebook Parent Meta: Lost $224 billion in market value Since Sept 7 high

Facebook Parent Meta: Lost $224 billion in market value Since Sept 7 high; META: அழுது புலம்பும் மார்க் ஜூக்கர்பெர்க்.. 3 மாதத்தில் 224 பில்லியன் டாலர் இழப்பு..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X