தடுப்பூசி எங்கே கிடைக்கும்.. கண்பிடிக்க வருகிறது புதிய ஆப்.. பேஸ்புக்கின் சூப்பர் திட்டம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இன்று நாடே கொரோனாவின் பிடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில், நாளுக்கு நாள் இதன் தாக்கம் இன்னும் அதிகரித்த வண்ணமே உள்ளது.

 

மத்திய மாநில அரசுகளும் இதனை கட்டுபடுத்த பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதற்கிடையில் இதற்கு முடிவு என்பது தடுப்பூசி தான் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்துஸ்இந்த் வங்கியின் லாபம் 190% அதிகரிப்பு.. டிவிடெண்டும் அறிவிப்பு.. ஜாக்பாட் தான்.. !

ஏற்கனவே 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், மே 1 முதல் 18 - 44 வயதிற்குட்பட்டோருக்கும் தடுப்பூசி போடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஆர்டர் செய்யப்பட்ட தடுப்பு மருந்துகள் இன்னும் கிடைக்கவில்லை. அது கிடைத்தவுடன் போட தொடங்கப்படும் என்று சுகாதார துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Vaccine Finder மொபைல் ஆப்

Vaccine Finder மொபைல் ஆப்

இதற்கிடையில் பேஸ்புக் கொரோனா தடுப்பூசிகள் பற்றிய ஒரு ஆப்பினை கொண்டு வரவுள்ளதாக அறிவித்துள்ளது. இது இந்திய அரசுடன் இணைந்து 17 இந்திய மொழிகளில் இருக்கும் என்றும் அறிவித்துள்ளது. இது Vaccine Finder என்ற மொபைல் ஆப்பாகும். இதன் மூலம் தடுப்பூசி பெற உங்களது அருகிலுள்ள இடங்களை அடையாளம் காண இது உதவும்.

தடுப்பூசி மையம் எங்கு?

தடுப்பூசி மையம் எங்கு?

இது சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் வழங்கப்பட்ட தரவை பயன்படுத்தி, தடுப்பூசி மையங்களையும், அவற்றின் செயல்பாட்டு நேரங்களையும் இந்த ஆப் வழங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதே 46 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களுக்கு பேஸ்புக்கில் உள்ள, கோவிட்-19 இன்பர்மேஷன் மையத்தில், உங்களுக்கு தேவையான அனைத்து விவரங்களும் கிடைக்கிறது.

பேஸ்புக்கிலும் விவரங்கள்
 

பேஸ்புக்கிலும் விவரங்கள்

பேஸ்புக்கின் covid-19 vaccines in india என்ற ஆப்சனில் சென்று, go website என்ற ஆப்சனை கிளிக் செய்தால், அது புதிய பக்கத்தில் தொடங்கும். அங்கு எப்படி தடுப்பூசிக்கு பதிவு செய்வது, என்னென்ன ஆவணங்கள் தேவை, என பல விவரங்களையும் பார்க்கலாம். இது தவிர என்னென்ன பின் விளைவுகள், அறிகுறிகள் என பலவும் அடங்கியுள்ளன.

மக்கள் எளிதில் விவரங்களை பெற

மக்கள் எளிதில் விவரங்களை பெற

இது குறித்து பேஸ்புக், இந்த சமூக வலைதளம் மூலம் மக்களுக்கு தேவையான விவரங்களை, எளிதில் கொண்டு சென்று சேர்க்க முடியும் என்றும் கூறியுள்ளது. மேலும் இந்த தளத்தில் எப்போது அவசரகால சிகிச்சையை பெற வேண்டும். வீட்டில் லேசான கோவிட் -19 அறிகுறிகளை எவ்வாறு நிர்வகிப்பது என்பது குறித்த விவரங்களையும் வழங்கப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராமிலும் இது குறித்த தகவல்களை பெற ஆப்சன் உண்டு.

இந்தியாவுக்கு உதவி

இந்தியாவுக்கு உதவி

கொரோனாவின் தாக்கத்தினால் போராடி வரும் இந்தியாவுக்கு உதவ, ஆக்சிஜன் செறிவூட்டிகள், மற்றும் பிபாப் இயந்திரங்கள், வெண்டிலேட்டர்கள், மற்ற மருத்துவ உபகரணங்கள், மருத்துவ படுக்கை வசதிகள் என அனைத்தும் அதிகரிக்க, USISPFவுடன் இணைந்து உதவி வருவதாகவும் சமீபத்தில் பேஸ்புக் கூறியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Facebook plans to launch vaccine finder tool on its app in india

Facebook latest updates.. Facebook plans to launch vaccine finder tool on its app in india
Story first published: Saturday, May 1, 2021, 14:19 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X